மேஷ ராசி - பொதுப்பலன்கள்
இந்த 2019 ஆம் ஆண்டில் நீங்கள் பல சாதனைகளைப் புரிவீர்கள். உங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கும். நீங்கள் செய்த சாதனைகள் மற்றும் பெற்ற பாராட்டுக்கள் காரணமாக உங்கள் ஆற்றல் மற்றும் தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். இதனால் நீங்கள் உங்கள் போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்குவீர்கள். உங்கள் போட்டியாளர்களின் தூக்கத்தைக் கெடுத்தாலும் நீங்கள் நிம்மதியான தூக்கத்தை பெறும் பாக்கியசாலிகள் ஆவீர்கள். உங்களிடம் உறுதியும் கடினமும் காணப்படும். ஆன்மீகத்தின் பக்கம் நீங்கள் அதிகமாக ஈர்க்கப்படுவீர்கள். சமூக சேவகர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் பயன் பெறுவீர்கள். சமூகத்திற்கு தொண்டாற்றி பொது மக்களின் பாராட்டை பெறுவீர்கள். ஜூன் மாதத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாதகமான நேரமாக அது அமைய வாய்ப்பில்லை. உடல் சோர்வும் மன அழுத்தமும் உங்களை பாதிக்கும். என்றாலும் குல தெய்வத்தின் அருளை நாடுவதன் மூலம் நம்பிக்கையை உங்களால் வளர்த்துக் கொள்ள இயலும். இந்த ஆண்டில் சிவ பெருமான் வழிபாடு மூலம் நீங்கள் மன வலிமை மற்றும் உடல் வலிமை பெறலாம்.
மேஷ ராசி - வேலை
மேஷ ராசிகார்களுக்கு தொழிலைப் பொறுத்தவரை ஆண்டின் ஆரம்பமே ஆட்டம் காண வைத்துவிடும். ஏற்றம் காண இயலாத நிலையோ ஏமாற்றமோ தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். வருடத்தின் முதல் இரண்டு மாதங்கள் எந்த புதிய முயற்சி மற்றும் ஒப்பந்தத்திலும் ஈடுபட வேண்டாம். ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் பொறுத்துக் கொண்டீர்கள் என்றால் பிறகு ஜமாயக்கலாம். கடந்த காலத்தை மறந்து புதிய பாதையில் பயணம் செய்யுங்கள். நீங்கள் பணிபுரிபவராக இருந்தால் ஏப்ரல் வரை காத்திருங்கள். உயர் பதவி உங்களைத் தேடி வரும். உங்கள் வார்த்தைகளுக்கு அலுவலகத்தில் மதிப்பு இருக்கும். அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என்று கவலைப்படாதீர்கள். நீங்கள் சிரமப்பட்டாலும் பெயரும் புகழும் உங்களுக்கு உற்சாகத்தைப் பெற்றுத் தரும்.
சிக்கல் இல்லாத தொழில்முறைக்கு கால பைரவ ஹோமம்
மேஷ ராசி - காதல் மற்றும் உறவுநிலை
உறவைப் பொருத்தவரை பொறுமையும் விவேகமும் அவசியம் தேவை. மனைவி மற்றும் தாய் இருவருக்கும் பாதிப்பு ஏற்படமால் இருக்க நீங்கள் தராசு போல சமநிலை உறவை பராமரிக்க வேண்டியது அவசியம். அவசரமான முடிவுகள் எதையும் எடுப்பது வீண் விவகாரத்தில் முடிவடையும். தவறான புரிந்துணர்வு,
மன அழுத்தம் காரணமாக உறவில் சிக்கல்கள் அவ்வப்போது ஏற்பட்டாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். காதலர்களுக்கு இது களைகட்டும் ஆண்டாக அமையும். ஆட்டுவிக்கும் பொம்மை போல உங்கள் துணை உங்கள் விருப்பத்திற்கேற்ப செயல்படுவர்.
உறவு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள துர்கா ஹோமம்
மேஷ ராசி - நிதி நிலைமை
கேட்டது கிடைக்கும். போட்டது முளைக்கும். கடந்த ஆண்டுகளின் உங்கள் முயற்சிகளுக்கு இந்த ஆண்டு நீங்கள் பலன் பெறுவீர்கள். உங்கள் நிதிநிலையில் முன்னேற்றமும் சிறந்த லாபமும் காண்பீர்கள். அந்தப் பணத்தை தரமான முதலீடுகளில் செலுத்தி அதன் மூலம் ஆதாயம் பெறுங்கள். முதலீடுகளின் போது கவனம் தேவை. இந்த ஆண்டில் நீங்கள் பணத்தை தாராளமாக செலவு செய்வீர்கள். உங்கள் மனைவி மற்றும் தந்தையின் நல வாழ்விற்கு பணம் செலவு செய்வீர்கள். நண்பர்களுக்கு பணம் கொடுத்து உதவுவீர்கள். கையில் பணம் கணிசமாக புரள்கின்றது என்பதற்காக கண்மூடித்தனமாக செலவு செய்வது உசிதமல்ல.
நிதியில் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டிற்காக லட்சுமி குபேர ஹோமம்
மேஷ ராசி - மாணவர்கள்
மேஷ ராசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு கல்விக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று கூறலாம். நவீன யுகத்திலே உங்கள் கவனத்தை சிதறடிக்க பல விஷயங்கள் உள்ளன என்பதை மறுக்க இயலாது. என்றாலும் அவற்றை மறந்து நீங்கள் ஊக்கத்துடனும் குறிக்கோளுடனும் செயல்பட்டால் கல்வியில் வெற்றி காண்பீர்கள். கல்வியுடன் விளையாட்டு போன்ற இதர துறைகளிலும் ஈடுபட்டு உங்கள் பன்முகத் திறமையை வெளிப்படுத்தி நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
கல்வி மற்றும் பிற செயல்களில் சிறப்பாக விளங்கச் சரஸ்வதி ஹோமம்
மேஷ ராசி - ஆரோக்கியம்
மேஷ ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டில் திடமான ஆரோக்கியம் காணப்படும் என்றாலும் விருச்சிகத்தில் குரு இருக்கும் காரணத்தால் அவ்வப்போது உடல் அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்யும். வருமுன் காப்பது நல்லது என்பதால் நீங்கள் சிறு அசௌகரியம் உணர்ந்தாலும் மருத்துவ ஆலோசனை மேற்கொண்டால் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொள்ள இயலும். நீங்கள் கவனமாக இருந்தால் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க இயலும்.
நல்ல உடல் நலத்திற்கு ருத்ர ஹோமம்
பொதுப் பரிகாரம்:
வீட்டுப் பரிகாரங்கள்:
- உங்கள் தந்தைக்கு உதவவும், உடல் ரீதியிலும், மனோதத்துவ ரீதியிலும் அவருக்கு ஆதரவாக இருக்கவும்
- உங்களின் அறிவுப்பூர்வமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் ஆசிரியர்களிடமும், வழிகாட்டிகளிடமும் இருந்து ஆசீர்வாதங்களை பெறுங்கள்
- வியாழக்கிழமைகளில் அருகாமையில் உள்ள சிவன் அல்லது விஷ்ணு கோயிலுக்கு சென்று வாருங்கள்.
ஜெபம் செய்ய வேண்டிய மந்திரம் – “ஓம் ஸ்ரீ ஜனார்தனாய நமஹ” - தினமும் 108 முறை
சாதகமான மாதங்கள்: பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர்
பாதகமான மாதங்கள்: மார்ச், ஜூன், செப்டம்பர், நவம்பர்
இந்த மாதங்களில் உங்களுக்கு பிடித்தமான கடவுளை வணங்கவும். பரிந்துரைக்கப்பட்ட பரிகாரங்களை செய்யவும்.
உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply