x
x
x
cart-added The item has been added to your cart.

புத்தாண்டு ராசி பலன்கள் 2019 – கடகம் : Kadaga Rasi 2019 (Cancer)

கடக ராசி – பொதுப்பலன்கள்

கடக ராசியில் பிறந்த ஒவ்வொவருக்கும் இந்த 2019ஆம் ஆண்டு நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய ஓர் ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு சனி, குரு மற்றும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகியவற்றின் பெயர்ச்சி மற்றும் சஞ்சாரம் சாதகமான நிலையில் உள்ளது. இது உண்மையில் உங்களுக்கு ஆண்டு முழுவதும் அதிக அளவு ஆர்வத்தை வழங்கும். நீங்கள் மெதுவாக வெற்றிப் படிகளில் ஏறுவீர்கள். நீங்கள் மீண்டெழுவதன் மூலம் உங்களுடைய முந்தைய செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெளிச்சத்திற்கு வரும். நீங்கள் இந்த ஆண்டு அறிவு மற்றும் செல்வம் பெறும் எதிர்பார்ப்போடு இருப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது என்பது கடினமாக காணப்படும்.

Kadaga Rasi Palan 2019

கடக ராசி – தொழில்

2019 ஆண்டு வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உகந்த பயனுள்ள ஆண்டாக இருக்கும். வேலையில் நேரடியாக ஈடுபடவும் அதன் மூலம் லாபம் பெறவும் இது சரியான நேரம் ஆகும். இந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதி, பணியில் முன்னேற்றம் காண்பது, தொழிலில் புதிய பரிமாணங்களை உருவாக்குவது, புதிய நபர்களுடன் புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவது போன்ற விஷயங்களுக்கு சாதகமாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ராகுவால் கலவையான பலன்கள் காணப்படும். மார்ச் 3ம் வாரம் வரை அமைதியாக இருந்து சாதகமற்ற பலன்களை சமாளிக்க முயற்சிக்கவும்.

மார்ச் 2019 வரை அவசர முடிவுகளை எடுப்பதில் ஈடுபடாதீர்கள். முக்கிய ஒப்பந்தங்களை ஒத்துக் கொள்வதைத் தள்ளிப்போடுங்கள். அது மிகவும் அவசரமானதாக இருக்கும் பட்சத்தில் பண்பட்டவர்களின் ஆலோசனையை எடுத்துக் கொள்ளுங்கள். பணியில் இருப்பவர்கள் ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலம் வரும் விளம்பரங்கள் அல்லது விளம்பரங்களின் அடிப்படையில் தற்போதுள்ள வேலையை ராஜினாமா செய்வது உகந்ததல்ல. நடப்பு வேலையில் தொடர்ந்து பணி புரியுங்கள். உங்கள் பணிக்கான அங்கீகாரம் பெறுவீர்கள். ஒரு சிறந்த பணி மாற்றத்தைப் பெறுவதற்காக உங்களுடைய தற்போதைய வேலையின் மீதுள்ள உங்கள் ஆர்வத்தை இழந்து விடாதீர்கள்.

தொழில் வளர்ச்சிக்குக் கணேச பூஜை

கடக ராசி – நிதி நிலைமை

இந்த ஆண்டு, உங்கள் நிதி நிலைமை ஸ்திரமாக இருக்கும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிறியளவில் நிச்சயமற்ற தன்மையை உணருவீர்கள். பின்னர், அனைத்து விதத்திலும் நிதி நிலைமை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். உங்கள் தொழிலை நீங்கள் சீரமைக்க விரும்பினால் நிதியைப் பற்றி கவலைப்படாதீர்கள். தொழிலில் எச்சரிக்கையோடு செயல்படுங்கள். ஒரு வர்த்தக சந்தை நிபுணரின் உதவியுடன் பங்குகளில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். மார்ச் 2019 வரை அறிந்த அல்லது அறியாத ஆதாரங்களிலிருந்து கடன் வாங்கவோ கொடுக்கவோ வேண்டாம். கடன்கள் இருப்பின் அவற்றைச் சிறிது சிறிதாக திருப்பி கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களின் நீண்ட கால முதலீடு ஒன்று இந்த ஆண்டின் முதல் பாதியில் முதிர்ச்சியடையும். நீங்கள் அதை உடனடி குடும்ப தேவைக்காகப் பயன்படுத்துவீர்கள். உங்களுடைய நிதி முயற்சிகளுக்கு 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதி, முதல் பாதியுடன் ஒப்பிடும்போது சாதகமானதாக தோன்றுகிறது. உங்கள் கடின உழைப்பு மற்றும் புத்திக்கூர்மையாலும் லாபங்களை அடைவீர்கள். எதிர்காலத்திற்காக திட்டமிடுவதைக் காட்டிலும் செல்வத்தைக் குவிப்பதற்கு இதுவே சிறந்த நேரம். செல்வம் மற்றும் ஆதாரங்களைப் பெறுவதற்கு பல வழிகளை நீங்கள் காண நேரலாம்.
.
நிதி நிலைமை மேம்பட லக்ஷ்மி ஹோமம்

கடக ராசி – காதல் மற்றும் உறவு

காதலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு சாதகமான ஆண்டாக இருக்கும். உறவைப் பொறுத்த வரை முதல் இரண்டு மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் உறவு நிலை சீராக இருக்கும். உங்கள் துணையிடம் சிறந்த முறையில் தொடர்பாடல் கொள்வீர்கள். இருவரும் வெளிப்படையான உரையாடலில் ஈடுபடுவீர்கள். தனியாக இருப்பவர்களுக்கு புது உறவு பூக்கும். தங்கள் காதலை திருமணமாக மாற்றியமைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இது மிகச் சிறந்த காலமாக இருக்கும்.

மகிழ்ச்சியான உறவு மேம்பட லட்சுமி நாராயண யந்திரம்

கடக ராசி – ஆரோக்கியம்

உங்கள் உடல் ஆரோக்கியம் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். நீண்டகால பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல நிவாரணம் பெறுவார்கள். வலியிலிருந்து நிவாரணம் பெற நல்ல சிகிச்சை மேற்கொள்வீர்கள். உங்களை பாதிபிற்குள்ளாக்கிய ஒரு பெரிய பிரச்சினை வரும் நாட்களில் குறைந்துவிடும். நீங்கள் லேசாக மற்றும் சொர்க்கத்தில் இருப்பது போல் உணருவீர்கள் இசை மற்றும் கலையின் வழியாக மேற்கொள்ளும் சிகிச்சை நல்ல பலன்களை தரும். கீழ் வயிறு மற்றும் மூட்டுகள் இணையும் இடுப்பு பகுதியில் பிரச்சனைகள் ஏற்படலாம். மே 2019 மற்றும் ஆகஸ்ட் 2019 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆரோக்கியத்தில் பலன்கள் கலந்து காணப்படும். நீங்கள் அசௌகரியம் அல்லது வலியை உணர்ந்தால் மருத்துவரை அணுகத் தயங்க வேண்டாம்.

முழுமையான ஆரோக்கியம் பெற சுதர்சன ஹோமம்

கடக ராசி – மாணவர்கள்

மாணவர்கள் மற்றும் துடிப்புள்ள இளைஞர்கள் கல்வியை முடிப்பதற்கு முழு கவனத்தையும் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்படிச் செய்தால் மட்டுமே அவர்களால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். போட்டி தேர்வுகள் எழுத நினைக்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் தேர்விற்கு தங்களை தயார் செய்து கொள்ளத் தொடங்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைத் தொடரும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தினசரி படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது தேர்வு காலத்தில் உதவியாக இருக்கும்.

தேர்வில் வெற்றி பெற சரஸ்வதி ஹோமம்

சாதகமான மாதங்கள்: ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்
பாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட்

Leave a Reply