கும்ப ராசி - பொதுப்பலன்கள்
கும்ப ராசியினருக்கு இந்த வருடம் ஆற்றலுடன் செயல்பட காத்திருந்த காலம் கனிந்து வரும் நேரம். எல்லா வகையிலும் சந்தோசம் தரும் வருடம். நீங்கள் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். எதிர்பாராத ஆச்சரியமான விஷயங்கள் பலவும் நடக்கும். வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இந்த சூழ் நிலையில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? சிற்சில சமயங்களில் தொந்தரவுகள் ஏற்பட்டாலும் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு மிகவும் சாதகமான நேரமே ஆகும்.
கும்ப ராசி - வேலை
கும்ப ராசியினருக்கு இந்த 2019 ஆம் ஆண்டில் தொழிலில் காணப்பட்ட கடந்த கால கசப்பான அனுபவங்கள் சூரியனைக் கண்ட பணி போல விலகும். இந்த ஆண்டில் திருப்பு முனை காணப்படும். தொழிலைப் பொறுத்தவரை இது உங்களுக்கு மிகவும் சுவாரசியமான ஆண்டு. சிலர் குடும்பத் தொழிலில் ஈடுபட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றமும் வெற்றியும் உங்களை நாடி வரும்.
நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பொறுமையோடும் உறுதியோடும் இருந்தால் புதிய ஒப்பந்தங்கள் கை கூடி வரும். அதன் மூலம் உங்களுக்கும் குடும்பத்துக்கும் நன்மை விளையும். பணி புரிபவர்களுக்கு அலுவலகத்தில் ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படும். அனைவரும் உங்களுடன் மகிழ்ச்சியாக இணைந்து பணி புரிவார்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றி வெகுமதியும் பாராட்டும் பெறுவீர்கள். திட்டமிடப்படாத பயணம் தான் என்றாலும் அதன் மூலம் உங்களுக்கு நன்மை விளையும். .
தொழிலில் வெற்றி பெற கால பைரவ ஹோமம்
கும்ப ராசி - நிதி நிலைமை
செல்வங்களைப் பெற்று அதிர்ஷ்டகரமாக வாழ விரும்புகிறீர்களா? இந்த ஆண்டில் நீங்கள் விரும்பியபடி செல்வத்தை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கிடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நிலம் மற்றும் சொத்துகளில் அவற்றை முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நல்ல லாபம் காண்பீர்கள். கொடுத்த கடன்களை எல்லாம் இப்பொழுது நீங்கள் வசூல் செய்வீர்கள். எதிர் கால தேவைக்காக நீங்கள் திட்டமிட்டு பணத்தை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை உங்களால் நிராகரிக்க இயலாது என்றாலும் அவற்றை குறைத்துக் கொள்ள முயற்சி செய்வது உங்களுக்கு நல்லது.
நிதி நிலைமையை மேம்படுத்தி எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள ஹனுமன் ஹோமம்
கும்ப ராசி - காதல் மற்றும் உறவுநிலை
காதலில் ஈடுபட்டுள்ள கும்ப ராசியினருக்கு சில எதிர்பாராத விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கும். எனவே உணர்ச்சி வசப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் ஜோடியாக வெளியே சுற்றும் பொழுது உங்கள் குடும்ப நபர்கள் அல்லது உறவினர்களின் கண்களில் பட வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். அல்லது உங்கள் காதல் விஷயத்தை உங்கள் வீட்டில் கூறி விடுங்கள். நடைமுறையை புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். சிறந்த தகவல் பரிமாற்றமும். வார்த்தைகளில் கவனமும் தேவை.
சிறந்த தகவல் தொடர்பு கொள்ளவும் மற்றும் சிறந்த முடிவுகளை எடுக்கவும் உமா மகேஸ்வர ஹோமம்
கும்ப ராசி - சுகாதாரம்
கும்ப ராசியினருக்கு இந்த ஆண்டு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனிதர்கள் என்றால் சிறு சிறு உடல் உபாதைகள் வரத்தானே செய்யும். சளி இருமல் காய்ச்சல் என்று பாதிப்புகள் அவ்வப்பொழுது தலை தூக்கினாலும் பொதுவாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சத்தான உணவின் மூலம் சிறந்த ஆரோக்கியம் கணாலாம். அடிவயிறு மற்றும் முழங்கால் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த சமயங்களில் மருத்துவர் ஆலோசனை பெற்று காலம் தாழ்த்தாமல் சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
சிறந்த ஆரோக்கியம் பெற கணேச ஹோமம்
கும்ப ராசி - மாணவர்கள்
கும்ப ராசி மாணவர்களுக்கு இந்த 2019 ஆம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியான வருடம் ஆகும். கல்வி மட்டுமன்றி விளையாட்டு மற்றும் இதர நடவடிக்கைகளில் ஒரு சிலருக்கு ஆர்வம் பிறக்கும். சாகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்பது போல நீங்கள் கடைசி நிமிடத்தில் தயார் செய்தாலும் தேர்வில் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். என்றாலும் உங்கள் முயற்சி தான் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கல்வியில் ஆர்வத்தைத் தக்கவைக்க ஹயக்ரீவ யந்திரம்
பொதுப் பரிகாரம்
வீட்டுப் பரிகாரங்கள்
- வாரம் ஒரு முறை உபவாசம் இருங்கள்
- குடும்பத்தில் வயதானவர்களுக்கு மனப்பூர்வமாக சேவை செய்யுங்கள்
ஜெபிக்க வேண்டிய மந்திரம் “ஓம் ஜெகன்னாதாய நமஹ” - தினமும் 108 முறை
சாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை, செப்டம்பர், டிசம்பர்
பாதகமான மாதங்கள்: ஏப்ரல், மே, ஆகஸ்ட், நவம்பர்
இந்த மாதங்களில் உங்களுக்கு பிடித்தமான கடவுளை வணங்கவும். பரிந்துரைக்கப்பட்ட பரிகாரங்களை செய்யவும்.
உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply