Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

புத்தாண்டு ராசி பலன்கள் 2018 - துலாம் : Thula Rasi 2018 (Libra)

November 17, 2017 | Total Views : 3,227
Zoom In Zoom Out Print

பொதுப்பலன்கள் துலா ராசி (Thula Rasi) அன்பர்களே! இந்த புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமையவுள்ளது . இந்தப் புத்தாண்டில் உங்கள் உறவு, தொழில், வணிக, சுகாதாரம், மற்றும் நல்ல நிகழ்வுகள் அனைத்தும் உயர்ந்த நிலையில் உள்ளது. எதிர்பாராத லாபங்கள் அல்லது ஆதாயங்கள் ஏற்படலாம்.குவா குவா சத்தம் கேட்கும். திருமணம் கைகூடும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். அதே சமயம் சமூக அந்தஸ்தையும் மரியாதையையும் காப்பாற்றிக் கொள்வது சவாலான விஷயமாக இருக்கும். யாகாவாராயினும் நாகாக்க என்பது இந்த வருடம் உங்களுக்குப் பொருந்தும். நாவை அடக்குவதன் மூலம் குடும்ப நல்லுறவை பேணி காக்கலாம். நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு சோம்பலை விட்டொழிக்க வேண்டும். சுய தொழில் செய்வோர் , கலைஞர்கள், மென்பொருள் பணியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், கட்டிடக் கலைஞர்கள், உள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் வானூர்தி பொறியாளர்கள் ஆகியோருக்கு 2018 ஒரு சாதகமான ஆண்டாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும். அம்மாவின் ஆதிக்கம் மற்றும் குறுக்கீடு உச்சத்தில் இருக்கும். குறிப்பாக துலாம் ராசி (Thula Rasi) இளம் வயதினர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பயணங்கள் தவிர்த்தல் வேண்டும். வாழ்கை துணையின் நலன் காக்க செய்யும் செலவுகள் தவிர்க்க முடியாதவை தொழில் / உத்தியோகம் வியாபாரிகளுக்கு மே மாதத்திற்குப் பிறகு ஒப்பந்தங்களை முடிப்பது கடுமையாக இருக்கும். பங்குதாரருடன் சுமுகமான உறவுஇருக்காது. மே மாதத்திற்குப் பிறகு வியாபாரத்திற்கென கடன் கிடைப்பதும் அரிதாக இருக்கும். சிலருக்கு வியாபாரத்தில் வழக்குகளைச் சந்திக்க நேரிடலாம். பங்குதாரருடன் பேசும் பொழுது வார்த்தைகளில் நேர்மையுடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டின் துவக்கத்தில் தொழில் வல்லுனர்களுக்கு தங்கள் திறமைகளை நிரூபிக்கும் நல்ல வாய்ப்பு கிட்டும். மே மாதம் வெற்றியும் அதன் மூலம் வளர்ச்சியும் காண்பார்கள். மேலதிகாரியுடன் நல்லுறவு காணப்படும். உத்தியோகத்தைப் பொறுத்த வரை ஆண்டின் பிற்பகுதி சாதகமாக இல்லை. உங்களுடைய நல்லெண்ணத்தையும், செல்வாக்கையும் சுமூகமான உறவுகளைப் பராமரிக்க பயன்படுத்தவும். மேலதிகாரிகளில் சிலர் விரோதத்தின் காரணமாக உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருப்பார்கள். விவாதிப்பதை விட்டு விட்டு சாதுர்யமாக நடந்து கொள்ளவேண்டும். விட்டுக் கொடுத்துச் செல்லவேண்டும். சுய வேலை செய்பவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதம் சாதகமாக உள்ளது. ஆசிரியர்கள், கலைஞர்கள், கட்டட நிபுணர்கள் , டாக்டர்கள் மற்றும் ஹோட்டல் நிர்வாகிகள் ஆகியோர் 2018 ஆம் ஆண்டில் மிகவும் சிறப்பாக செயலாற்றுவார்கள் . Thula Rasi 2018 காதல் / உறவுகள் நீங்கள் ஆண்டு முழுவதும் காதலை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் இதயம் பூரிப்படையும். எனவே நீங்கள் உங்கள் இணையுடன் உங்களின் அழகான எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் காதலை வெளிபடுத்த புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். உங்கள் உணர்வுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். திருமணத்திற்கு தாயாராக இருப்பவர்களுக்கு மே மாதத்திற்குள் திருமணம் நிச்சயமாகிவிடும். நீங்கள் இன்பத்தை அனுபவிப்பதற்கான நேரம் வரப்போகின்றது. இந்த ஆண்டு உங்கள் துணையுடனான உறவை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் மிகச் சரியான நேரம்.
https://www.youtube.com/embed/TlvB1gBh5XA
நிதிநிலைமை ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பண வரவுகள் காணப்படுகின்றன. குழந்தைகள், உடன்பிறப்புகள் மற்றும் கூட்டாண்மை தொழில்கள் மூலமாக லாபங்கள் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் கூட லாபம் சாத்தியமாகும். உங்கள் நிதியைப் பொறுத்த வரை ஆண்டின் இரண்டாவது பகுதி உங்களுக்கு சாதகமான காலமாக இருக்காது. உங்கள் பங்குதாரர்களால் வழக்கு விவகாரங்களைச் சந்திக்க நேரலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுள்ள துலா ராசி (Thula Rasi) மாணவர்களுக்கு இது ஓர் சாதகமான ஆண்டு ஆகும். நண்பர்கள் மற்றும் பெரியோர்களிடமிருந்து கிடைக்கும் உந்துதல் உங்களை வெற்றிகரமாக முன்னேற்ற உதவும். உயர் படிப்பு படிப்பவர்களுக்கு நல்ல ஆதரவு கிட்டும். சோம்பலையும் தள்ளிப் போடுவதையும் தவிர்க்கவும். “கவனம்”. இது தான் இந்த ஆண்டிற்கான தாரக மந்திரம்”. ஆரோக்கியம் உங்கள் உடல் நலத்தைப் பேண நேர்மறை அணுகுமுறையைக் கையாளவும். உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி முறையினை ஊக்கத்துடன் முன்னேற்றுவீர்கள் . எளிய மாற்றங்கள் உங்கள் அனைத்து எண்ணங்களையும் நிறைவேற்றும் ஆற்றலை உங்களுக்கு கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத் துனையாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள் மேலும் அவர்களுக்கு மருத்துவ உதவி தந்து துடிப்புடன் இருக்க உதவுங்கள். தலைவலி, செரிமான கோளாறுகள், வீக்கம், பொதுவான குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற வியாதிகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். மே மாதத்திற்குப் பிறகு நீங்கள் சில நிவாரணங்களைக் காண்பீர்கள். இந்த ஆண்டு முழுவதும் பெரிய வகையில் ஆரோக்கிய குறைபாடுகள் ஏதும் இருக்காது. எதற்கும் உதவாத தேவையற்ற எதிர்மறை அல்லது சரியான சிந்தனையற்ற உரையாடலை தவிர்க்கவும். இது உங்களின் சக்தியைக் குறைக்கும் அல்லது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நேர்மறையான எண்ணங்களைக் கொள்ளுங்கள் . சிரிப்பே உங்களுக்கு சிறந்த மருந்து.
  • தொண்டு செய்யுங்கள்
  • பெற்றோரின் ஆசி பெறுங்கள்
  • அன்பான மற்றும் கனிவான வார்த்தைகளைப் பேசுங்கள். கடுமையான சொற்களை தவிர்த்துவிடுங்கள்
  • தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்யவும்.
  • ஓம் சநேஸ்வராய நமஹ
    என்ற மந்திரத்தை 1௦8 முறை தியானம் செய்யவும். அனுகூலமான மாதங்கள் : ஜனவரி பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல் மே, நவம்பர் மற்றும் டிசம்பர் அநுகூலமற்ற மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், மற்றும் அக்டோபர்

    Leave a Reply

    Submit Comment
    • Kaveeena
      If a guy with thulam raasi visagam natchathiram can they get married with mithunam raasi thiruvathirai
      May 22, 2018