x
x
x
cart-added The item has been added to your cart.

புத்தாண்டு ராசி பலன்கள் 2018 – விருச்சிகம் : Vrishika Rasi 2018 (Scorpio)

பொதுப்பலன்கள்

விருச்சிக ராசி (Vrishika Rasi) அன்பர்களே! இந்த புத்தாண்டு உங்களுக்கு ஆக்கமும் உற்சாகமும் பொங்கி வழியும் ஆண்டாக அமையும். இந்த ஆண்டு, நீங்கள் பல ஆன்மீக மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் திருப்தியும் முன்னேற்றமும் கிடைக்கும். உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் சமூக நிலை உயரும். பெரியோர்களின் நல்லாதரவும் ஆசியும் கிடைக்கும். உங்கள் உடன் பிறப்புகளுடன் நல்லுறவு இருக்கும்.அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றுவார்கள். அவர்களில் சிலர் வெளி நாட்டிற்கு படிப்பதற்கோ வேலை விஷயமாகவோ செல்வார்கள். குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களும் ஏற்றத் தாழ்வுகளும் உங்கள் அமைதியை சீர் குலைக்கும். வீட்டின் உற்சாகமான சூழ்நிலையில் குறைபாடு இருக்கும். வீடு அல்லது இட மாற்றத்திற்கான சாத்தியம் உண்டு.ஆண்டின் துவக்கத்தில் திடீரென்று சில பிரச்சினைகள் தோன்றும். ஆனால் நீங்கள் அது பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை . உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். மற்றவர்கள் விருப்பத்திற்கு செயல் பட வேண்டாம். take it easy என்று இருந்தீர்களானால் வெற்றி உங்கள் பக்கம் தான். நீங்கள் பல திசைகளில் இழுக்கப்படுவீர்கள். அனைத்திற்கும் இல்லை என்ற ஒரே மந்திரத்தை பயன் படுத்துங்கள். இறைநாட்டம், யோகா, ஆன்மிகம் இது போன்ற விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் இவற்றை ஆழ்ந்து அனுபவிக்கலாம்.சோம்பல் காரணமாக தினசரி செயல்களில் தொய்வு ஏற்படும் . இதனால் பலன்கள் குறையலாம். இதைப் போக்க சட்டை காலரை தூக்கிக்கொண்டு அன்றாட செயல்களைச் செய்ய ஆரம்பியுங்கள்.

தொழில் / உத்தியோகம்

செய்கின்ற வேலையோ அதிகம். வாங்குகின்ற ஊதியமோ குறைவு என்ற அதிருப்திகரமான நிலை தான் இருக்கும். என்றாலும் புது விஷயங்களை கற்பதன் மூலம் நீங்கள் முன்னேறலாம். நாளைய நல்ல நேரத்திற்கு இன்றே திட்டமிடுங்கள்.வியாபாரம் செய்பவர்களே இந்த புத்தாண்டின் துவக்கம் உங்களுக்கு முன்னேற்றமான நிலையைத் தரும். பிற்பகுதியில் சிறிது தள்ளாட்டம் இருக்கும். எனவே தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் இருந்தால் கைவிடுங்கள். இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு ஆண்டின் பிற்பகுதி சாதகமாக உள்ளது. சிலருக்கு புதிய கூட்டு ஒப்பந்தங்களில் நுழையும் வாய்ப்பு கிட்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆண்டின் முற்பகுதியில் சில சவால்களை சந்திக்க நேரிடும். மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் கவனமாகப் பழகவும். மற்றவர்களின் பொறாமை காரணமாக மறைமுகமான பிரச்சினைகள் ஏற்படலாம். அடுத்தவர்களை நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உங்கள் மேல் நம்பிக்கை வைத்துப் பணியாற்றுங்கள். விருச்சிக ராசியைச் (Vrishika Rasi) சேர்ந்த ஐ.டி துறையினர், பாதுகாப்பு படையினர் / பாதுகாப்பு துறையினர் மற்றும் மருத்துவர்கள் / மருத்துவ துறையினர் ஆகியோர் இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுவார்கள்

 Vrishika Rasi 2018

நிதிநிலைமை

ஆண்டு முழுவதும் சராசரி பணப் புழக்கம் இருக்கும். திட்டமிடாத செலவுகள் உருவாகும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் உங்கள் பட்ஜெட்டை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் சேமிப்பு முழுவதும் கரைந்து விடும். இதை கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இல்லையனில் ஒரு ஆபத்து அவசரத்திற்கு கூட பணம் கையில் இருக்காது. விருச்சிக ராசி (Vrishika Rasi) நேயர்களே நீங்கள் இயல்பாகவே நன்கொடை அளிக்கும் குணம் கொண்டவர்கள். இந்த ஆண்டு நீங்கள் இன்னும் அதிகமாகவே இதில் ஈடுபடுவீர்கள். இந்த ஆண்டில் வழக்கு விவகாரங்கள் சாதகமாகவே அமையும். எதிரிகளை வெல்வீர்கள். அதிலும் குறிப்பாக வழக்கு விவகாரங்களை மே மாதத்திற்கு முன் தீர்மானிக்கும் பட்சத்தில் வெற்றி நிச்சயம்.

காதல் / உறவுகள்

காதல் விவகாரங்கள் ஆண்டின் இடைப் பகுதி வரையில் சாதகமாக இல்லை. மே மாதம் வரை பூசல்கள் காணப்படும். பொறுமையும் புரிந்துணர்வும் இந்த கால கட்டத்தில் மிக அவசியம். ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் உற்சாகம் அதிகரிக்கும் வகையில் பல விஷயங்கள் நடைபெறும்.திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு மே மற்றும் ஆக்ஸ்ட் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் கெட்டி மேளம் கொட்டும். ஆண்டின் பிற்பகுதியில் தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சடை சச்சரவுகளைத் தவிர்த்தல் நல்லது. அனைவரிடமும் சுமுகமாகப் பழக வேண்டும். மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சி பெற உங்கள் துனையாருடன் சுற்றுலா செல்லுங்கள்

மாணவர்கள்

மாணவர்களே! முயற்சி திருவினையாக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலையும் பலவீனத்தையும் அறவே ஒதுக்கி விடுங்கள். வெளியாட்களுடன் அதிகமாகப் பழகுவதை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் ஆசி பெறுங்கள்.கலை, மேலாண்மை, நிதி, வர்த்தகம், பேஷன் டிசைன், இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் நன்கு படிப்பார்கள்.சிலர் உதவித்தொகை பெறலாம் மற்றும் உயர் கல்விக்காக வெளி நாட்டிற்குச் செல்வார்கள்

ஆரோக்கியம்

உங்கள் உடல் நலத்திற்கான தாரக மந்திரங்கள் motivation(உந்துதல்கள்) self Awarness (சுய விழிப்புணர்வு))self-regulation(சுய கட்டுப்பாடு) தேவையற்ற பயமும் எதிர்மறையான எண்ணங்களும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும், மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதற்கு, நேர்மறை எண்ணமுடைய மக்களுடன் பழகுங்கள் நேர்மறையான புத்தகங்களை படியுங்கள் ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுங்கள். உடல் ரீதியாக நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். நீங்கள் சுயமாக மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது.
உங்கள் தாயின் அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒரு நபரின் உடல் நிலை பற்றிய கவலை இருக்கும்.நீண்ட காலமாக நோய்வாய் பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.வயதான விருச்சிக ராசி (Vrishika Rasi) அன்பர்களை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். முறையான மருத்துவப் பரிசோதனை அவசியம். சிறு ஆரோக்கிய குறைபாடுகளைக் கூட அலட்சியப் படுத்தக் கூடாது. முறையான உணவும் மருத்துவப் பரிசோதனையும் மிகவும் அவசியம்.

செய்ய வேண்டியவை

 • வயதானவர்களுக்கு உதவுங்கள். உங்கள் குடும்ப நபர்களாக இருந்தாலும் பரவாயில்லை
 • தினமும் நல்லதையே நினையுங்கள்
 • காகம் அல்லது மற்ற பட்சிகளுக்கு இரை அளியுங்கள்.
 • நாவை அடக்குங்கள். இனிய சொற்களைப் பேசுங்கள்.
 • பெற்றோரிடமும்,முன்னோர்களிடமும் ஆசி பெறுங்கள்
 • ஓம் ஆஞ்சனேயாய வித் மஹே
  வாயு புத்ராய தீ மஹி
  தன்னோ ஹனுமான் ப்ரசோதயாத்என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்

  அனுகூலமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி
  அனுகூலமற்ற மாதங்கள் : மார்ச், மே, அக்டோபர், நவம்பர், மற்றும் டிசம்பர்

  Leave a Reply