x
x
x
cart-added The item has been added to your cart.

புத்தாண்டு ராசி பலன்கள் 2018 – சிம்மம் : Simha Rasi 2018 (Leo)

பொதுப்பலன்கள்

சிம்ம ராசி (Simha Rasi) அன்பர்களே ! இந்தப் புத்தாண்டு உங்களுக்கு தெய்வீக அருளும் ஆசியும் நிறைந்த ஆண்டாக அமையும். இந்த ஆண்டு முழுவதும் தொழில் முன்னேற்றமும் மேலதிகாரியின் ஆதரவும் இருக்கும். சென்ற ஆண்டில் நீங்கள் சந்தித்த போராட்டங்கள், அவமானங்கள் மற்றும் தடைகள் எல்லாம் விலகி விடும். உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். நற்பெயர் கிட்டும். உங்கள் சொந்த முயற்சி மூலம், நீங்கள் எளிதாக இலக்குகளை அடைவீர்கள் .குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்களினால் மகிழ்ச்சி உண்டாகும். உலக விஷயங்களில் நன்மையும் ஆன்மீக ஈடுபாடும் அதிகரிக்கும்.உங்கள் உடன் பிறந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் ஆசிரியர்கள் மற்றும் பெரியோர்கள் ஆண்டு முழுவதிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.மே மாதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் இடமாற்றம் அல்லது வீடு மாற்றம் ஏற்படும். இது உங்களுக்கு நல்ல பலன்களையும் ஆற்றலையும் தரும். ஆண்டு தொடக்கத்தில் குடும்பத்தில் சிற்சில இடையூறுகள் இருந்தாலும் முன்னேற்றம் மற்றும் இனிமையான சூழலை அனுபவிப்பீர்கள். சிறிய பயணம் ஒன்றையும் மேற்கொள்வீர்கள்.உங்களின் பிள்ளைகள் தங்கள் படிப்பிலிருந்து கவனத்தை திசை திருப்பலாம். பிள்ளைகளுக்கு முறையான ஆலோசனை மற்றும் ஆதரவு தேவை. ஒரு குழந்தை தனது படிப்பை நிறுத்தி விட்டு உங்களுடன் தொழிலில் சேரலாம்

தொழில் / உத்தியோகம்

வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இந்த புத்தாண்டு நல்ல ஆண்டாக அமையும். ஆண்டின் பிற்பகுதியில் மந்தத் தன்மை இருக்கும். கடின உழைப்பு வெற்றியை தேடித் தரும். மே முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டங்களில் தொழிலை விரிவு படுத்தலாம்.

உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வேலைக்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ளுங்கள். ஊதிய உயர்விற்கு வாய்ப்பு உண்டு.

பொழுதுபோக்கு துறைகளில் பணிபுரிவோருக்கு நல்ல ஆதாயம் மற்றும் புகழ் கிடைக்கும். சிலர் அரசியலில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு வெற்றி காண்பார்கள்.

பணியிடத்தில் எதிரிகள் உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். சக பெண் ஊழியர்களிடத்தில் கவனமாக இருக்கவும். பொறாமை கொண்ட பெண்களால் பிரச்சினைகள் உருவாகலாம் .

உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றும் சேவை சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்து அதனால் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.

சிம்ம ராசியைச்(Simha Rasi) சேர்ந்த ஜோதிடர்கள், ஆன்மீக குருமார்கள், பொழுதுபோக்கு துறை வல்லுனர்கள், அரசியல்வாதிகள் தங்கள் பணிகளை மிகவும் சிறப்பாகச் செய்வார்கள்.

Simha Rasi 2018

காதல் / உறவுகள்

காதல் விவகாரங்கள் சந்தோஷத்தைத் தரும். நல்லிணக்கத்தைப் பராமரிக்க ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். உங்களது சொந்த உணர்வுகளில் எப்பொழுதும் மூழ்கி இருந்தால் மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பீர்கள். எனவே அதிலிருந்து வெளியேறி மற்றவர்களுடன் கலந்து உறவாடுங்கள்.

இந்த ஆண்டில் நீங்கள் எல்லா உறவினர்களிடமும் குறிப்பாக வாழ்க்கைத் துனையாருடன் பரஸ்பர உறவு கொண்டிருப்பீர்கள்.
மே மற்றும் ஜூன் மாதத்தில் உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் சிறிய பயணம் செல்வீர்கள். திட்டமிட்ட பயணங்களால் பிரச்னைகள் மற்றும் இடையூறுகளைத் தவிர்க்க முடியம்.

மழலை வரவால் இல்லத்தில் மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கும்.

நிதி நிலைமை

ஆண்டின் இறுதி வரை பணப் புழக்கம் நன்றாக இருக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். செப்டம்பர் 2018 க்குப் பிறகு பணப் புழக்கத்தில் பின்னடைவு இருக்கும். ஆயினும் பிரச்சினை பெரிதாக இருக்காது. நிதி நிலையில் ஆண்டு முழுவதும் நேர்மறையான உத்வேகத்தை நீங்கள் பராமரிக்க வேண்டும்

முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றது. நிபுணர்களிடம் ஆலோசனை பெறுங்கள். தொழில், பெற்றோர், வாழ்க்கைத்துணை, பயணங்கள், உடன் பிறந்தோர்கள், மூத்தவர்கள், ஆசாரியர்கள், மத நிறுவனங்கள் மற்றும் வெளி நாட்டினர் இவர்களால் ஆதாயம் உண்டு.

மாணவர்கள்

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். படிப்பில் கவனமும் உறுதியும் வெற்றியைத் தரும். நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தலாம்.

உயர் படிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு சரியான வாய்ப்பு அமையும். சிலர் தங்கள் கல்வி லட்சியத்தை அடையும் வகையில் வெளிநாடு செல்வார்கள். பெற்றோர்களிடமிருந்து ஆசி பெறுங்கள்.

ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். வழக்கமான உடற்பயிற்சிகள், சரியான உணவு மற்றும் ஆன்மீக காரியங்கள் ஆகியவை உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வெளிப்படுத்தவும், நல்ல மனநிலையில் வைக்கவும் உதவும் முந்தைய வியாதிகளிலிருந்து நீங்கள் மீள்வீர்கள். எனினும், சில பருவகால நோய்கள் தவிர்க்க முடியாதவை. பயண அலைச்சல்கள் உங்களை சோர்வடையச் செய்யும். உங்கள் நலத்திற்கென போதுமான நேரத்தை ஒதுக்குங்கள்.

வீட்டு பரிகாரங்கள்

தான தர்மங்கள் போன்ற செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

கனிவான வார்த்தைகளை பேசுங்கள்

பெற்றோருடன் நல்லுறவு கொள்ளுங்கள்

ஓம்சூர்யாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்
ஓம் ராஹவே நமஹ அல்லது ஓம்ஷ்யாமாத்மனே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்

அனுகூலமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே ஜூன், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்

அனுகூலமற்ற மாதங்கள் :
ஜூலை, ஆகஸ்ட், மற்றும் செப்டம்பர், (இந்த மாதங்களில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் வழிபாடு மற்றும் பரிந்ததுரைக்கப்பட்ட பரிகாரங்களைச் செய்யவும்)

இந்த புத்தாண்டு உங்களுக்கு வளத்தையும் அருளையும் வாரி வழங்கட்டும்.

AstroVed ல் இருக்கும் அனைவரும் உங்களுக்கு நல்வாழ்த்து தெரிவிகின்றனர்

2 Comments
  1. Thank you

  2. Thank you Sir

Leave a Reply