x
x
x
cart-added The item has been added to your cart.

புத்தாண்டு ராசி பலன்கள் 2018 – கடகம் : Kadaga Rasi 2018 (Cancer)

பொதுப்பலன்கள்

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நல்ல செய்திகள், நிதி ஆதாயங்கள், பணியிடத்தில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் என பலவகையான நற்பலன்களை அள்ளித் தரக்கூடிய புத்தம் புதிய ஆண்டாக மலரப் போகின்றது. உங்களுடைய கடின முயற்சிகள் எல்லாம் இப்பொழுது நல்ல பலனைத் தரும் . இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சமூக அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கும்.உங்கள் குடும்பத்துடன் குறுகிய மற்றும் நீண்ட பயணங்களுக்கான விடுமுறை திட்டங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இந்த ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் உடன் பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். அவர்களின் திறமையான செயல் மூலம் உங்களுக்கு வெற்றி பெற்றுத் தருவார்கள்.தேவையற்ற பிரச்சனைகள் தவிர்க்க மற்றவர்களுடன் மென்மையாகப் பேசவும். இனம் தெரியாத எதிரிகளால் பண நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். வழக்கு விவகாரங்களில் சற்று பின்னடைவு இருக்கும். ஆண்டின் முற்பகுதியை விட ஆண்டின் பிற்பகுதி நன்றாக அமைந்துள்ளது. நீங்கள் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆன்மீகச் செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள்.

தொழில் / உத்தியோகம்

வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் பிற்பகுதி சாதகமாக உள்ளது. எனவே தொழிலை விரிவு படுத்த நினைப்பவர்கள் ஆண்டின் பிற்பகுதியில் செய்யலாம். கடன் வாங்கும் நிலை ஏற்படும். பங்குதாரர்களிடையே சுமுகமான உறவு நிலைப்பதற்கு பேச்சில் நிதானம் தேவை.
குரு பகவான் சஞ்சாரம் காரணமாக அக்டோபர் 2018 க்குப் பிறகு வியாபாரிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிட்டும். வியாபாரத்தில் புதிய யுத்திகளைக் கையாள்வீர்கள். உங்கள் பங்குதாரர்கள் உங்கள் யுக்திகளை வரவேற்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மே 2018 க்குப் பிறகு இடமாற்றம் அல்லது வேலை மாற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் தவிர்க்க முடியாத அழுத்தம் இருக்கும். மேலதிகாரியுடன் ஏற்படும் சச்சரவுகளால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். என்றாலும் மே 2018 க்குப் பிறகு இந்த நிலை மாறும்.

தொழில் நிபுணர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.

தொண்டு நிறுவனங்கள், நீதித்துறை அல்லது வங்கியில் பணிபுரிவோருக்கு இந்த ஆண்டு சாதகமான பலன்கள் காணப்படுகின்றன.

kadaga rasi 2018

காதல் / உறவுகள்

ஆண்டின் தொடக்கம் காதலர்களுக்கு சாதகமானதாக இல்லை. திருமணத்திற்கு தயாராக உள்ளவர்களுக்கு மே 2018 க்கு மேல் துணை அமைய வாய்ப்பு உள்ளது. ஆண்டின் மத்தியில் காதலர்களுக்கு இனிமையான தருணமாக அமையும்.

இந்த ஆண்டு மே வரை தம்பதியரிடையே முரண்பாடு இருக்கும். சண்டை சச்சரவு மற்றும் கருத்து வேறுபாடு காணப்படும். மே மாதத்தின் மத்தியில் வாழ்க்கைத் துனையாரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். ஜூலை 2018 க்குப் பிறகு மகிழ்ச்சியும் இன்பமும் காணப்படும். மறப்போம் மன்னிப்போம் என்பதை கடைபிடித்தால் தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும்.

நிதி நிலைமை

எதிர்பாராத செலவுகள் காரணமாக, உங்கள் வங்கி இருப்பு சரியும். இருப்பினும், பணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற உங்கள் உள்ளுணர்வு உங்கள் வரவு செலவுத் திட்டத்தை நன்கு பராமரிக்க உதவும்.ஆண்டின் பிற்பகுதில் வருவாய் அதிகரிக்கும்.

வீட்டை அலங்கரிக்க அல்லது மறுசீரமைப்பிற்கு அல்லது வாகனத்திற்கென பணத்தை செலவு செய்வீர்கள். அதனால் உங்கள் வசதி பெருகும். மருத்துவத்திற்கும் தான தர்மங்களுக்கும் பணத்தை செலவு செய்வீர்கள்.ஆண்டின் பிற்பகுதியில் குரு பகவான் நல்ல லாபங்களைத் தந்து உங்களை காப்பாற்றுவார். ஆண்டின் முற்பகுதியில் குறிப்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பெரிய அளவிலான பண பரிவர்த்தனையை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் தாமதம் ஏற்படும். ஒரு வரம்பு மீறிய செயல் காரணமாக நீங்கள் எதிர்பாராத அபராதத்தை செலுத்த வேண்டியிருக்கும்

மாணவர்கள்

உங்கள் கடின உழைப்பு உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும். உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான தருணங்கள் இந்த ஆண்டு அமையும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறந்ததை வழங்க தயாராக இருங்கள். ஆசிரியருடன் நல்லுறவை பராமரிப்பது நன்மை தரும். சோம்பேறித்தனத்தை விட்டு சுறுசுறுப்புடன் முன்னேறிச் செல்லுங்கள். உயர் கல்விக்கான ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் ஆண்டு. பெற்றோரின் ஆசி பெறுங்கள்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் ஏற்றத் தாழ்வு காணப்பட்டாலும் பெரிய அளவில் கவலை கொள்ள வேண்டியதில்லை. உங்களின் நடமாட்டத்தை பாதிக்கும் வகையில் சில உபாதைகள் ஏற்படும். வேலையின் சுமை காரணமாக மூளைச் சோர்வு ஏற்படும். தேவையான ஒய்வு எடுக்கவும். உங்களுக்கு பிடித்த பொழுது போக்குகளில் ஈடுபடுங்கள்.

பயணத்தின் போது உணவில் கவனம் செலுத்தவும். வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். துரித உணவுகளை தவிர்க்கவும்.

மனச் சோர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள யோகா செய்யவும்.

இந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்

 • உணர்ச்சிகளை கண்காணிக்கவும், ஒவ்வொரு மணி நேரமும் உங்களை நேர்மறையாக மீட்டமைக்கவும்.
 • முன்னோர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசி பெறவும்
 • சோம்பேறித்தனத்தை கைவிடவும்.எந்தச் செயலையும் ஒத்தி வைக்க வேண்டாம்.
 • உண்மையாகப் பேசவும்
 • தான தர்மங்கள் செய்யவும்
 • ஓம் ராகுவே நமஹ அல்லது ஓம்நிதிபயாநமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்

  அனுகூலமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்

  அனுகூலமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே இந்த மாதங்களில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் வழிபாடு மற்றும் பரிந்ததுரைக்கப்பட்ட பரிகாரங்களைச் செய்யவும்)

  இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அருளை வாரி வழங்கட்டும்

  AstroVed ல் இருக்கும் அனைவரும் உங்களுக்கு நல்வாழ்த்து தெரிவிகின்றனர்

  Leave a Reply