பொதுப்பலன்கள்
தனுசு ராசி (Dhanusu Rasi) அன்பர்களே! இந்த புத்தாண்டில் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவீர்கள் மற்றும் மனநிறைவை அனுபவிபீர்கள்.இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் கனவுகளும் இலட்சியங்களும் நிறைவேறும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் குதூகலிப்பதற்கான நேரம் வந்து விட்டது. உங்கள் கடந்த கால காயங்கள் ஆறும். தோள்களின் சுமை குறையும். உங்களுக்கு பிரியமானவர்களுடன் உறவுகளை புதுப்பித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையை கொண்டாடுவீர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள், யாரிடம் சொல்கிறீர்கள் என்பதில் தெளிவாய் இருங்கள். உங்கள் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். யாருக்கும் வாக்குறுதி அளிக்காதீர்கள். உங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் போகலாம். உடன் பிறப்புகளும் அக்கம் பக்கத்தினரும் உதவிகரமாக இருப்பார்கள். குடும்ப சூழ் நிலையில் முன்னேற்றம் இருக்கும். அது மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கும். குடும்ப விழாக்கள் மிகுந்த மகிழ்ச்சியையும் நல்ல புரிதலையும் கொண்டுவரும்
ஆண்டின் முதற் பகுதியில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களுடன் நேரம் செலவிடுங்கள். அவர்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள். இந்த ஆண்டு ஆன்மீகம் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும்.
தொழில் / உத்தியோகம்
வியாபாரம் செய்பவர்களுக்கு மே மாதத்திற்குப் பிறகு நேரம் சாதகமாக உள்ளது. அது வரை தொழிலில் மந்த நிலையே காணப்படும்.கிரகங்கள் சாதகமாகவும் நம்பிக்கை தரக்கூடிய வகையில் இருப்பதாலும் நீங்கள் இந்த ஆண்டு செய்யும் அனைத்தையும் உயர்வாகக் கருதுங்கள், பெரிய அளவில் கனவு காணுங்கள். நீங்கள் செய்யும் செயல் எதுவாயினும் தீர ஆலோசித்து செய்யவும்.மே மாதம் முதல் கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்கள் புதுமையான யோசனைகள் மற்றும் செயல்திட்டங்களை செயல்படுத்துவதைத் தொடங்குங்கள். நீங்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள் மற்றும் உங்கள் பழைய வாடிக்கையாளரை மகிழ்ச்சிபடுத்துவீர்கள்.கூட்டு முயற்சிகள் மற்றும் கூட்டாண்மை தொழில்கள் சராசரி வளர்ச்சியையே கொடுக்கும்.
புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் உத்தியோக மாற்றம் விரும்புபவர்களுக்கும் ஆண்டின் ஆரம்பமே அசத்தலாக உள்ளது. பணியில் இருப்பவர்கள் மே 2108 க்குப் பிறகு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணி அவர்களின் ஆதரவு கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஜூன் மாதத்தில் நீங்கள் விரும்பும் பணி மற்றும் இடத்தை மாற்றுவது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்
வங்கித் துறையினர் , தகவல் தொழில்நுட்ப துறையினர் மற்றும் அச்சு துறையினர் இடைத் தரகர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் ஆகியோர் இந்த ஆண்டு வெற்றி நடை போடுவார்கள். மற்றவர்களுக்கு சுமாரான நிலையே காணப்படும். .முயன்றால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
காதல்/ உறவுகள்
காதல் விவகாரங்களில் முன்னேற்றம் காணும் நேரம். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் முன்னேறுவதற்கான சூழ்நிலை உருவாகும். மூன்றாவது நபர் உங்கள் வாழ்வில் குறுக்கிடாத வகையில் எச்சரிக்கையுடன் இருங்கள். அது உங்கள் மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும். காதலில் சிறிய விஷயங்கள் கூட சந்தோசம் அளிக்கும் என்பதை இப்பொழுது உணர்வீர்கள். இதுவரை அதை இழந்து விட்டோமே என்றும் கூட வருந்துவீர்கள். காதலர்களுக்கு இடையே சில கடினமான தருணங்கள் வரலாம். அன்யோன்யத்தை தக்க வைக்க எச்சரிக்கையுடன் இருங்கள். திருமணமாகதவர்களுக்கு இந்த ஆண்டு முற்பகுதியிலேயே மூன்று முடிச்சிற்க்கான நேரம் வந்துவிட்டது. திருமணமான தம்பதியர்களிடையே உறவு நல்ல முறையில் இருக்கும். என்றாலும் ஆண்டின் பிற்பகுதியில் சில குழப்பங்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தலும் பொறுமையும் அவசியம். ஜூன், ஜூலை, மற்றும் அக்டோபர் மாதங்களில் பல சவால்களை சந்திக்க நேரிடும். இந்தக் காலக்கட்டத்தில் தவறான புரிதல்கள் இருக்கும்.
நிதி நிலைமை
இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் பொங்கி வழியும். ஆண்டின் ஆரம்பமே உங்களுக்கு சாதகமாகவும் முன்னேற்றத்தை தரும் வகையிலும் அமைந்துள்ளது. பல வகையிலும் வரும் பண வரவு உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். புதிதாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிட்டும்.
நீண்ட கால நிலுவைப் பணம் எளிதாக உங்களை நாடி வரும். குறைந்த முயற்சியில் நிதி உதவி எளிதாகக் கிடைக்கும். எனினும் செலவினங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு மகிழ்ச்சிகரமான பயணங்கள், புனித யாத்திரைகள் மற்றும் தான தருமங்களுக்கான செலவுகள் தவிர்க்க முடியாதவை. உங்களில் சிலர் கடனை சிறிது சிறிதாக அடைப்பீர்கள். லாபங்களுக்கான வாய்ப்புகள் இருந்தாலும் தவறான அணுகு முறையால்நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
https://www.youtube.com/embed/TlvB1gBh5XA
மாணவர்கள்
உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களே வெற்றி உங்கள் பக்கம். எந்த தடையுமின்றி உங்கள் படிப்பு சென்றாலும் , சக மாணவர்களால் நேரம் வீனடிக்கப்ப டாமலும் கவனம் சிதறாமலும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். போட்டி தேர்வுகளில் மே மாதத்திற்குப் பிறகு வெற்றி கிடைக்கும்.
சில மாணவர்கள் தனிப்பட்டோர் வேலை வாய்ப்புகளை பெறுவார்கள்
ஆரோக்கியம்
ஆண்டின் துவக்கத்தில் நல்ல ஆரோக்கியம் காணப்படும். சரியாக பராமரிக்காவிட்டால் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது. உடல் நலத்தை பாதுகாக்க தொடர்ந்து முறையான உடற்பயிற்சி செய்யவும். அதிக உழைப்பு காரணமாக சரியான நேரத்தில் சாப்பிட முடியாது. அதனால் பல அசௌகரியங்கள் ஏற்படலாம். தலை வலி மற்றும் உடல் வலி போன்ற உபாதைகள் ஏற்படலாம். நீங்கள் தோல்வியடைந்தால் அமைதியற்ற நிலையில் இருப்பதை தவிர்க்கவும், சிறந்த காலத்திற்கு சிறந்த நம்பிக்கையுடன் காத்திருக்கவும். . உங்களை கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். சிறந்த இசையைக் கேளுங்கள். பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.
தினமும் நல்லதையே நினையுங்கள்
ஆசிரியர் மற்றும் குருமார்களின் ஆசி பெறுங்கள்
உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்
மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ணத்துடன் இருங்கள்.
ஓம் தும் துர்கையே நமஹ
என்ற ராகு மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.
அனுகூலமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல், மே மற்றும் நவம்பர்
அனுகூலமற்ற மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், மற்றும் டிசம்பர்