
https://www.youtube.com/embed/TlvB1gBh5XA
நிதி நிலைமை
இந்த ஆண்டு நிதி நிலைமை உங்களுக்கு சாதகமாக உள்ளது. நல்ல வருமானம் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும்.கடனாளிகள் கழுத்தை நெருக்கினாலும், குரு பகவானின் அருளால் கடன் அடைக்க பல வழிகள் கிடைக்கும். ஊதாரித்தனத்தை நீக்கினால் நீங்கள் நன்கு செயல்படுவீர்கள்.உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். ஜனவரி முதல் மே வரையிலான காலக் கட்டங்களில் உங்கள் தந்தையாருக்கு மருத்துவ செலவு செய்ய நேரிடும். ஜனவரி முதல் மே மாதம் வரை இட மாற்றம் மற்றும் பயணங்கள் தொடர்பான கூடுதல் செலவுகளுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.இந்த ஆண்டில் வீடு, சொத்துகள் மற்றும் வாகனங்கள் வாங்குவீர்கள் சிறிது தாமதத்திற்குப் பின் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
மாணவர்கள்
மாணவர்கள் திறமையுடன் செயலாற்ற இயலாது. இருப்பினும், வெற்றி இன்னும் சாத்தியம். ஆண்டு முழுவதும் நீங்கள் கவனச்சிதறல் மற்றும் வெளிவட்டார பழக்கங்களுக்கு ஆளாவீர்கள். உறுதியான நல்ல நண்பர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதன் மூலம் வெற்றி பெறலாம். அவர்களை உதாரணமாகக் கொண்டு செயல்படுங்கள்.மேல்படிப்பிற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் மே மாதத்திற்கு பிறகு வெற்றி பெறுவார்கள்.
ஆரோக்கியம்
நீங்கள் ஆண்டின் பெரும்பகுதியில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். எனினும், ஆண்டின் பிற்பகுதியில் சில சிறு நோய்கள் ஏற்படலாம். மனச் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சரியான உணவு உட்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். நோய்வாய் பட்டவர்களுக்கு மே, 2018 க்கு பிறகு சில நிவாரணம் கிடைக்கும்
ஓம் கேதவே நமஹ அல்லது ஓம் மிருத்யு புத்ராய நமஹஎன்ற கேது மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும் அனுகூலமான மாதங்கள் : மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் அனுகூலமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் டிசம்பர்
Leave a Reply