உயரமான தோற்றமும் சதைப் பிடிப்பு இல்லாத ஒல்லியான தேகமும் இல்லாத பார்ப்பதற்கே சராசரி தோற்றம். எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கும் சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். முகம் நீள் வட்டமாக இருக்கும். நீண்ட கழுத்தும், அடர்ந்த புருவமும், மெல்லிய கண்களும், நீண்ட கைகளும் கூரிய பார்வையும் உடையவர்கள். முகத்தில் பிரகாசம் இருக்கும். பித்த சம்பந்தமான வியாதி உடையவர்கள். தைரியமானவர்கள்.
இவர்கள் எப்போதும் சிந்தனை வயப்பட்டவர்களாக இருப்பார்கள். தம் சிந்தனைகளை செயல்படுத்த நினைப்பார்கள். இவர்கள் எதையும் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். எளிதில் மாறும் போக்கு இவர்களின் சிறப்புத் தன்மை. எனவே சூழ்நிலைக்கேற்ப இவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள். ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும் பிரயாணங்களில் விருப்பம் உள்ளவர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நலனில் அக்கறை கொள்வார்கள். இவர்களிடம் யாருக்கும் அடி பணியாத தன்மை இருக்கும். இவர்கள் குழந்தைகள் மீது பாசம் மிக்கவர்கள்.
மிதுன ராசியில் பிறந்தவர்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்வார்கள். சோம்பேறித்தனமாக இருக்க விரும்ப மாட்டார்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்கள் குணத்தை மாற்றி கொள்வார்கள். இவர்களுடன் நெருங்கி பழகினால் மட்டுமே இவர்களை பற்றி புரிந்து கொள்ள முடியும். பழகுவதற்கு சற்று கடினமானவர்களாக இருப்பார்கள். இவர்களை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதை பொறுப்புடன் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு அபாரஞாபக சக்தி இருக்கும். எதையும் சொன்ன அல்லது கேட்ட மாத்திரத்தில் அதை கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
எப்போதும் விழிப்புணர்வுடனும், கவனமுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவார்கள். தனது தகுதிக்கு சமமானவர்களிடம் பழகுவார்கள். விரும்பியவற்றை வெறியுடன் அடைபவர்கள். இவர்கள் தங்கள் உடன் பிறந்தோரின் உயர்வுக்காக உதவுவார்கள். தனது நிலையை வெளிப்படையாக பேசுவார்கள் தனக்கு பிடிக்காத விஷயங்களில் மௌனமாக விலகிச் சென்றுவிடுவார்கள். இவர்கள் புகழை அதிகம் விரும்புவார்கள். கருணை மிக்கவர்கள். பெற்றோரை நேசிப்பார்கள். உறவினர்களை மதிப்பவர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்வார்கள்.
எழுத்து, கல்வித்துறையில் ஆர்வமும் திறமையும் பெற்றிருப்பார்கள். செல்வத்துடனும் செல்வாக்குடனும் தங்களது திறமையினால் முன்னேற்றம் அடைவார்கள். https://www.astroved.com/tamil/

Leave a Reply