AstroVed Menu
AstroVed
search
search
x

Mesham Rasi Guru Peyarchi Palangal 2020 to 2021 - மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

dateAugust 19, 2020

கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 2ஆம் வீடு, 4ஆம் வீடு, மற்றும் 6ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 2 ஆம் வீடு என்பது, செல்வம், குடும்பம், பேச்சு, பொருட்செல்வம், சொத்து, துணிமணிகள், கோபம், உணவு உட்கொள்வது ஆகியவற்றைக் குறிக்கிறது. 4 ஆம் வீடு, வசதிகள், தாய், கல்வி, இல்லம், நிலம், சொத்து, வாகனங்கள், ஆடம்பரப் பொருட்கள் போன்றவற்றைக் குறிக்கிறது. 6 ஆம் வீடு என்பது, கடன், நோய், போட்டி, பிரச்சனை, சந்தேகம், தோல்வி, துயரம் மற்றும் பலவீனத்தைக் குறிக்கிறது.

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி என்று கூற இயலாது என்றாலும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கிணங்க மனது வைத்தால் உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேற்றங்களைக் காண இயலும். உங்கள் முயற்சிகளில் மந்தத் தன்மை இருக்கும் என்பதால் நீங்கள் மன வலிமையை வளர்ததுக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் மனதில் தோன்றும் வெறுப்புணர்வு காரணமாக பணியில் கூட நீங்கள் ஆர்வமுடன் செயலாற்றுவதைக் கடினமாக உணர்வீர்கள். தொழில் செய்யும் மேஷ ராசி அன்பர்கள் வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்யும் வகையில் நடந்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தாமதம் ஆனாலும் நிச்சயம் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

mesham-rasi-guru-peyarchi-palangal-tamil-2020-to-2021

நிதி விசயங்கள் உங்களுக்கு சாதகமான வகையில் இருக்க வாய்ப்பில்லை. ஆடம்பர செலவுகளை நீங்கள் மேற்கொள்வீர்கள் என்பதால் சேமிப்புகளுக்கான வாய்ப்பும் குறைவு. அசையாச்சொத்து வாங்கல் விற்றல், வண்டி வாகனம் வாங்கல் விற்றல், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற விஷயங்கள் உங்களுக்கு லாபகரமாக அமையாது என்பதால் இந்த முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது.

நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் மனதில் சோர்வு ஏற்படா வண்ணம் காத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்திற்கு இடம் அளிக்காதீர்கள். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள். குடும்ப உறவுகளில் பிரச்சினை ஏற்படும் என்பதால் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

வேலை, தொழில்

வேலையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்தாலும், இடையே தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எனவே, இப்பொழுது நீங்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் பதவி உயர்வு, உதிய உயர்வு, சாதகமான இடமாற்றம் போன்றவற்றையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இவை உங்களுக்குக் கிடைக்கும் என்றாலும், அதில் தாமதம் ஏற்படலாம். தொழிலிலும் பல பிரச்சனைகள் ஏற்படலாம். புதிய வியாபார முயற்சிகளை நன்கு பரிசீலித்தே மேற்கொள்ள வேண்டும். கூட்டுத் தொழிலிலும் அதிக செலவுகளோ, நஷ்டங்களோ ஏற்படலாம்.

நிதி

உங்கள் நிதி நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் சேமிப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம். உங்கள் செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் பணப்பற்றாக்குறை ஏற்படும். கடனை திருப்பிச் செலுத்துவது கடினமாக அமையும் என்பதால், கடன் வாங்கும் விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

குடும்பம்

குடும்ப உறவுகளில் சலசலப்பும், சச்சரவுகளும் தலை தூக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். வயதில் மூத்த உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். எனவே உங்கள் மனதில் தனிமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு மனச் சோர்வு ஏற்பட வாய்புள்ளது. எனவே நீங்கள் அனுசரித்து, விட்டுக் கொடுத்து அமைதியுடன் நடந்து கொள்வது நல்லது.

கல்வி

கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள முழு முயற்சி எடுக்க வேண்டும். விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்க, வெளி நாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணங்கள் ஈடேற இந்தக் காலக் கட்டம் அவ்வளவு உசிதமாக இல்லை. விடா முயற்சி மற்றும் கவனம் மட்டுமே உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

காதலும், திருமண வாழ்க்கையும்

திருமணமான தம்பதியர் தங்கள் வாழ்வில் பரஸ்பரம நெருக்கம் மற்றும் அன்னியோன்யமாக இருக்க இந்த காலக் கட்டம் ஏற்றதாக இருக்காது. உங்கள் கோபமே உங்களுக்கு சத்ருவாக விளங்கும். வீணான வாக்கு வாதங்களில் நீங்கள் ஈடுபட வாய்ப்புள்ளது.இந்தச் சூழ்நிலையில் நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. மனதில் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காட்டும் பரிவும் பாசமும் நல்லுறவை வளர்க்க உதவும்.

ஆரோக்கியம்

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்பது போல நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வருமுன் காப்பது நல்லது என்பதை உணர்ந்து நீங்கள் நோய் வருவதற்கு முன்பே உங்கள் உடல் நலத்தை காத்துக் கொள்ள வேண்டும். இதயம், நுரையீரல் முதலிய பகுதிகளில் கவனம் தேவை. கால் முட்டியில் வலி இருக்கலாம். எனினும் விரைவில் குணமாகிவிடும். குடும்ப உறுப்பினர் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

எளிய பரிகாரங்கள்

  • பௌர்ணமி அன்று, பகவான் சத்ய நாராயணர் புராணம் கேட்கவும்
  • மஞ்சள் நிற அணிகலன்கள் அல்லது தங்கம் அணியவும்
  • மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிற ஆடைகளை ஏழைகளுக்கு தானம் செய்யவும்
  • உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பசுக்களுக்கு வெல்லம் அளிக்கவும்
  • எந்த சுப நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பும், தொடர்ந்து 8 நாட்களுக்கு, ஆலயங்களுக்கு, மஞ்சள் பொடி அளிக்கவும் (இதை நீங்கள் வியாழக்கிழமை அன்றோ, அல்லது பூரட்டாதி, விசாகம், புனர்பூசம் நட்சத்திர நாட்களிலோ தொடங்கலாம்.)

banner

Leave a Reply

    ;