மேஷம் பொதுப்பலன்கள்:இன்று செய்ய வேண்டிய காரியங்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம். உங்கள் அணுகுமுறையில் அமைதியும் உறுதியும் அவசியம்.
மேஷம் வேலை / தொழில்: இன்று பணிகள் சுமுகமாக நடப்பதற்கு சாத்தியமான நாளாக அமையாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது.
மேஷம் காதல் / திருமணம்:உங்கள் துணை உங்களை உதாசீன்படுத்துவதன் காரணமாக உங்களுக்கு எரிச்சல் ஏற்படும்.உங்கள் எரிச்சல் உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துவீர்கள்.
மேஷம் பணம் / நிதிநிலைமை: நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது. அதனால் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வந்தாலும் பயனுள்ள வகையில் அதை பயன்படுத்த முடியாது.
மேஷம் ஆரோக்கியம்: கண்கள் மற்றும் தொண்டை எரிச்சல்கள் போன்ற பாதிப்புகளுக்கு இன்று சிகிச்சை தேவைப்படலாம். உங்கள் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.