AstroVed Menu
AstroVed
search
search
x

Rishabam Rasi Guru Peyarchi Palangal 2020 to 2021 - ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

dateAugust 19, 2020

கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 1ஆம் வீடு, 3ஆம் வீடு, மற்றும் 5 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. முதல் வீடு என்பது, திறமை, குணநலங்கள், பொதுவான வாழ்க்கை ஆகியவற்றையும்; 3 ஆம் வீடு என்பது, தகவல் தொடர்பு, துணிவு, கடவுள் நம்பிக்கை, இளைய உடன் பிறப்புக்கள், அண்டை அயலார் போன்றவற்றையும்; 5 ஆம் வீடு, குழந்தைகள், பூர்வ புண்ணியம், அறிவாற்றல், அன்பு, நினைவாற்றல், ஊக வணிகம் போன்றவற்றையும் குறிக்கிறது. ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்தப் பெயர்ச்சி பல வகைகளில் அதிர்ஷ்டம் அளிக்கும் பெயர்ச்சியாக அமையும். குடும்பத்தில் பெற்றோர் மற்றும் வயதில் மூத்த உறுப்பினர்களுடன் நல்லுறவு அமையும். அவர்களின் பரிபூரண ஆசிகளைப் பெற்று மகிழ்வீர்கள்.

பணி புரியும் இடத்தில் மேலதிகாரிகளுடனும் நல்லுறவு மேம்படும். அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இளைய உடன்பிறப்புகள், சக ஊழியர்கள், அண்டை அயலார் ஆகியவர்களுடன் தற்காலிகமாக உறவு சற்றே சீர்கெடலாம் என்பதால், கவனம் தேவை. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவிலும் இறை அருளால் வெற்றி பெறுவீர்கள். உங்கள் மனதில் தன்னம்பிக்கை பெருகும். அறிவாற்றல் மேம்படும். கற்பனை வளம் பொங்கும். நீங்கள் பிறருடன் அன்புடன் பழகுவீர்கள். உங்கள் மனதில் கருணை இரக்கம் போன்ற நல்ல குணங்கள் மேம்படும். மொத்தத்தில் உங்கள் வாழ்க்கைப் பயணம் இந்தப் பெயர்ச்சியில் வெற்றிகரமாக அமையும்.

rishabam-rasi-guru-peyarchi-palangal-tamil-2020-to-2021

நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சல் மற்றும் கால தாமதத்திற்குப் பிறகே வெற்றி கிட்டும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. மற்றவர்களுடன் பழகுவது, சமூக பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் சற்று பின்னடைவு இருக்கும். பொதுப் பயன்பாட்டு கருவிகள், சமூக வலை தளங்கள் போன்றவற்றின் மூலம் நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரும். நேரத்தை பொன் போல கருதிச் செயலாற்ற வேண்டும். உங்கள் வருமானமும் கணிசமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது.

வேலை, தொழில்

பணியிடத்தில் நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்புற செயலாற்ற இயலாத நிலை இருக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்காது. தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் போட்டி மற்றும் பொறாமைகளை சந்திக்க நேரும். கடன் பிரச்சினைகள் தலை தூக்கும் கடன் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பல சவால்களை நீங்கள் சந்திக்க நேரும். விற்பனை மற்றும் அதன் மூலம் லாபமும் நீங்கள் எதிர் பார்க்கும் அளவில் இருக்காது..

நிதி

உங்கள நிதிநிலைமை ஓரளவே சீராக இருக்கும். உங்கள் வருமானம் நிலையாக இருக்காது. மேலும் வருமானம் உங்கள் தேவைகளை நிறைவேற்றப் போதிய அளவு இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் அதிக லாபம் காண இயலாது. அதிக கடன்களை வாங்க வேண்டாம். இதற்கு பதிலாக, நீங்கள் முன்பு வாங்கியுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கவனம் செலுத்துவது நல்லது.

குடும்பம்

பொதுவாக குடும்பத்தில் குதூகலம் நிறைந்து இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். என்றாலும் கணவன் மனைவி இடையே அன்பும் அரவணைப்பும் உங்கள் பந்தத்தை நெருக்கமாக்கும். அன்னியோன்யம் கூடும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீங்களும் அவர்களுடன் உங்கள் நேரத்தைப் பகிர்ந்து கொள்வீர்கள். மூத்தவர்கள், குடும்பத்தில் நல்லுறவு நிலவ, மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். மற்ற உறவினர்களுடன் நெருக்கம் சாதாரணமாக இருந்தாலும், அவர்களிடமிருந்து அதிக ஒத்துழைப்பை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

கல்வி

கல்வி பயிலும் ரிஷப ராசி மாணவ மாணவிகளுக்கு இந்தப் பெயர்ச்சி, மிகவும் சாதகமாக இருக்கும். என்ற போதிலும் உங்கள் கடின உழைப்பும் அவசியம் தேவைப்படும். உங்கள் முயற்சிகள் யாவும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் கலந்து கொண்டால், அவற்றில் வெற்றி காண, நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

காதலும், திருமண வாழ்க்கையும்

ரிஷப ராசி காதலர்கள் இந்த பெயர்ச்சிக் காலத்தில் இனிமையான தருணங்களை சந்திப்பார்கள். பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக் கொடுத்துச் செல்வதும் உங்கள் உறவை வலுப்படுத்தும். திருமணமான தம்பதிகளும் வாத விவாதங்களில் ஈடுபடாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது உறவை பலப்படுத்தும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ரிஷப ராசி அன்பர்கள் மிகுந்த கவனமுடன் தங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயிறு, கால் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படலாம். அஜீரணம், அமிலத்தன்மை போன்ற சாதாரண பிரச்சனைகளும், சரியாக கவனிக்கப்படாவிட்டால் மருத்துவமனை நாட வேண்டி வரும். எனவே கவனம் தேவை. வருமுன் காப்பது நல்லது என்பதை உணர்ந்து உங்களை தற்காத்துக் கொள்வது நல்லது.

எளிய பரிகாரங்கள்

  • ‘ஒம் நமோ வாசஸ்பதயே நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
  • மஞ்சள் நிற மங்கல நூலை, மணிக்கட்டில் அணியவும்
  • அனைவரிடமும், மரியாதையும், அன்பும் காட்டவும்
  • உங்கள் பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, குழந்தைகளை மதித்து நடக்கவும்
  • வயது முதிர்ந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்யவும்
  • வாழைப்பழம், வெல்லம், தேன் ஆகியவற்றை தானம் செய்யவும்
  • ஆலய அர்ச்சகர்களுக்கும், அந்தணர்களுக்கும், முடிந்த அளவு தானம் செய்யவும்
  • பசுக்கள், பறவைகள் ஆகியவற்றிற்கு உணவளிக்கவும்
  • அரச மரத்திற்குத் தண்ணீர் ஊற்றவும்

banner

Leave a Reply