பொதுப்பலன்:
உங்கள் ராசியிலிருந்து 3 ஆம் வீடாகிய மிதுனத்தில் மே 15, 2025 அன்று குரு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி ஜூன் 2, 2026 அன்று வரை இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு மற்றும் 11வது வீட்டில் குருபகவானின் பார்வை இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பு நன்றாக இருக்கும். சுமுகமான உறவின் காரணமாக பிணைப்பு வலுப்படும். உங்கள் தரமான நேரத்தை அவர்களுடன் செலவிட்டு மகிழ்வீர்கள். இந்த தருணங்கள் உங்கள் வாழ்வில் பசுமையான நிகழ்வுகளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொழில்/உத்தியோக வாழ்க்கையில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் பொருளாதார நிலை ஏற்ற இரக்கமின்றி சீராக இருக்கலாம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் பண ஆதாயம் பெறலாம். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சரியாகக் கையாண்டால் உங்கள் சேமிப்பை மேம்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறலாம். இது அவர்களுக்கு கல்வியில் சாதகமான காலமாக இருக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கலாம்.
உத்தியோகம்
இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள், உங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் காணலாம். அதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். மேலும் உங்கள் தற்போதைய உத்தியோகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். சக ஊழியர்களுடனான உறவு சுமுகமாக இருக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் குழுப்பணி சீராக இயங்கும். உங்கள் பங்களிப்பை மேலதிகாரிகள் உணர்ந்து கொள்வார்கள். உங்களுக்கு பதவி உயர்வு வரலாம். மொத்தத்தில், இது உங்கள் உத்தியோகம் மற்றும் தொழில் பயணத்தில் ஒரு திருப்புமுனை காலம் என்று கூறலாம். பிறருடனான தொடர்புகளில் திருப்தி இருக்கும். இந்த வலுவான பிணைப்புகள் உங்கள் வேலையை மேலும் சுவாரஸ்யமாக்கும். இது உங்களுக்கு மிகவும் பலனளிக்கும் காலமாக இருக்கும் என்பதால், அதை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
காதல் / குடும்ப உறவு
குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுடன் நீங்கள் சுமுக உறவை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். இணக்கம் மற்றும் அரவணைப்பு குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவையும் புரிதலையும் பெறுவீர்கள். கூடுதலாக, உங்கள் துணையின் அன்பு உங்களுக்கு கிட்டும். மேலும் அவர்கள் உங்கள் மீது அக்கறை காட்டுவார்கள். நாளுக்கு நாள் உங்களிடையே நம்பிக்கையும் பாசமும் வளர்வதைக் காண்பீர்கள்.
திருமண வாழ்க்கை :-
இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் இருக்கும். நல்ல புரிந்துணர்வு இருக்கும். இருவரும் மகிழ்ச்சியான தரமான தருணங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
நிதிநிலை
இந்த காலகட்டத்தில் உங்கள் நிதிநிலை சீராக இருக்கும். நீங்கள் பொருளாதார ரீதியாக நன்றாக இருப்பீர்கள். கடந்த கால முதலீடுகள் மூலம் கணிசமான லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் உங்கள் செல்வம் மேம்படும். குடும்பம் மற்றும் நட்பு வட்டாரத்தின் சிறந்த ஆதரவு மூலம் உங்கள் பொருளாதார இலக்குகளை நீங்கள் அடைவீர்கள். உங்களின் வங்கி இருப்பை மேம்படுத்திக் கொள்ள அவர்களின் ஆதரவு உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் ஊக்கத்தை அளிக்கும்.
மாணவர்கள்
ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்கள் இருவரும் சிறப்பாக கல்வி பயில்வார்கள். இளங்கலை பட்டதாரிகள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். முதுகலைப் பட்டதாரிகளும் தங்கள் துறையில் சிறப்பாக வெற்றி காணலாம். வெளி நாடு செல்ல விரும்பும் மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க இதுவே சிறந்த நேரம். ஆராய்ச்சி மாணவர்கள் பல மணிநேரங்களை மிக ஆழமாக திட்டமிட்டு தங்கள் ஆய்வறிக்கைக்கு தயார்படுத்துவார்கள்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். வெளி உணவுகளை குறிப்பாக தெருவோர வியாபாரிகளின் உணவு மற்றும் துரித உணவைத் தவிர்க்கவும். இவை, பல உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்தலாம். தினசரி தியானம் மேற்கொள்வதன் மூலம் மன நலனை பாதுகாத்துக் கொள்ளலாம். இது மனதை ரிலாக்ஸ் ஆக்கும். தியானத்துடன் இணைந்த சரியான உணவு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்கும்.

Leave a Reply