பொதுப்பலன்:
உங்கள் ராசியிலிருந்து 8 ஆம் வீடாகிய மிதுன ராசியில் குருவின் இந்த பெயர்ச்சி நிகழும். இந்தப் பெயர்ச்சியானது 15 மே 2025 காலை 02:30 மணி முதல் 2 ஜூன் 2026 வரை இருக்கும். இந்தப் பெயர்ச்சியின் போது, உங்கள் ராசிக்கு 12வது வீடு, 2வது வீடு மற்றும் 4வது வீட்டில் குருவின் பார்வை இருக்கும்.
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த காலக்கட்டத்தில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இருக்கும். ஸ்திரமான முன்னேற்றத்துடன் நீங்கள் படிப்படியாக வளர்ச்சி காண்பீர்கள். பணியிடச் சூழல் சுமுகமாக இருக்கும். நீங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். பணியிடத்தில் அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். மேலும் அவர்கள் அனைவரும் அனுகூலமான தகவல்தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
குடும்பத்தில் உறவு நிலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்வீர்கள். பரஸ்பரம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். ஒத்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பசுமையான நினைவுகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்கள் குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் வயது மூத்த உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் குடும்பப் பிணைப்பு நெருக்கமாக இருக்கும். முன்பை விட அதிகமாக பணத்தை சேமிப்பீர்கள். லாபகரமான முதலீடுகளை மேற்கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் காரணமாக உங்கள் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
உங்கள் ஆரோக்கியம் படிப்படியாக சீராகும். சீரான வாழ்க்கை முறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சியின் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆற்றல் நிறைந்தவராகவும், சுறுசுறுப்பாகவும் உணர்வீர்கள்.
மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வதற்கான சிறந்த வாய்ப்புகள் இருக்கும். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவீர்கள். ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்.
உத்தியோகம்
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் முன்னேறத்தை எதிர்பார்க்கலாம். பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் சிறந்த முறையில் முன்னேற்றம் காணலாம். இந்தக் காலகட்டத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு அளிக்கும் பணிகளை நீங்கள் விரைவாக முடித்து அளிப்பீர்கள். நீங்கள் ஆர்வமுடன், ஈடுபாட்டுடன் பணி புரிவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிட்டலாம். ஊதிய உயர்வு பெறும் வாய்ப்பும் உள்ளது. எனவே பணியிடச் சூழல் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். உங்களின் உற்சாக மனப்பான்மை உங்கள் பணிகளை எளிதாக்கும். மொத்தத்தில், இந்த காலக்கட்டத்தில் உத்தியோக ரீதியாக நிறைவுடன் பிரகாசிப்பீர்கள். நீங்கள் சக ஊழியர்களுடன் லாபகரமான தொடர்புகளை அனுபவிப்பீர்கள்.
காதல் / குடும்ப உறவு
குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். நீங்கள் வெளிப்படையாகப் பேசுவீர்கள். உங்கள் பேச்சில் அன்பும் மரியாதையும் வெளிப்படும். இது நீடித்த உறவை உருவாக்க உதவிகரமாக இருக்கும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். இது உங்கள் உறவின் பிணைப்பை மேலும் அதிகரிக்கும். உறவில் ஆதரவு மற்றும் புரிந்துணர்வு இருக்கும். காதலர்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் அன்புக்குரியவருடன் சேர்ந்து மகிழ்ச்சி நிறைந்த அழகான தருணங்களை நீங்கள் உருவாக்குவீர்கள். இருவருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்டிருப்பீர்கள். இது இருவரையும் இணைக்கும் பாதையாக செயல்படும், இது இருவருக்கும் இடையே நல்ல உறவை உருவாக்க அனுமதிக்கும். ஒவ்வொரு நாளும் உங்கள் அன்பையும் நம்பிக்கையையும் மேம்படுத்துவீர்கள்.
திருமண வாழ்க்கை :-
கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும். இருவருக்கும் இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும். இருவரும் இணைந்து மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் நீங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பரஸ்பரம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வீர்கள். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். இந்த பிணைப்பு உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே திருமண உறவை உறுதிப்படுத்தும்.
நிதிநிலை
உங்கள் நிதிநிலை இந்த காலக்கட்டத்தில், சிறப்பாகவும் வரவேற்கத்தக்க வகையிலும் இருக்கும். முதலீடுகள் குறித்த சரியான முடிவுகளை இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கலாம். உங்கள் வருமானம் உயரலாம். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகளும் உங்களுக்குக் கிட்டும். உங்கள் நிதிநிலை மேம்பட உங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆதரவு அளிப்பார்கள். அவர்களின் ஆதரவு உங்களை முதலீடு சார்ந்த விஷயங்களில் ஊக்குவிக்கும். உங்கள் வருமானத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும். நீங்கள் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்புகள் இருக்கும். மொத்தத்தில் இந்தக் காலக்கட்டம் எதிர்காலத்தில் நிதிநிலையில் முன்னேற்றம் காண்பதற்கான சாதகமான அடித்தளத்தை வழங்கலாம்.
மாணவர்கள்
ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். இளங்கலை பட்டதாரி மாணவர்களும் மிகச் சிறந்த முறையில் கல்வி பயிலவும் தேர்ச்சி பெறுவதையும் தங்கள் இலக்காகக் கொண்டு முயற்சிகளை மேற்கொள்வார்கள். முதுகலை பயிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு தங்கள் தங்கள் துறைகளில் நற்பெயர் பெறுவார்கள். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு விசாவிற்கு விண்ணப்பிக்க இந்த காலகட்டம் நல்ல வாய்ப்பை வழங்கும். பிஎச்.டி. மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைகளை சமர்பிக்க கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியம்
பயணத்தின் போது அல்லது புதிய சூழலில் நீங்கள் சில சிறிய உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தோல் மற்றும் செரிமான பிரச்சனைகள், வீக்கம் அல்லது ஜுரம் போன்ற உபாதைகள் இருக்கலாம். இந்தப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற அதிக நீரைப் பருகுங்கள். போதுமான தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் மேம்படுத்த உதவும். உண்ணும் உணவிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வெளிப்புற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply