பொதுப்பலன் :
உங்கள் ராசியிலிருந்து 11 ஆம் வீடாகிய மிதுனத்தில் மே 15, 2025 அன்று குரு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி ஜூன் 2, 2026 அன்று வரை இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் ராசிக்கு 3வது வீடு, 5வது வீடு மற்றும் 7வது வீட்டில் குருபகவானின் பார்வை இருக்கும்.
பணியிடச் சூழல் சிரமம் அளிக்கும் வகையில் இருக்கும். சில தடைகள் காரணமாக உங்களால் சிறப்பாக பணியாற்ற இயலாமால் போகலாம். எனவே நீங்கள் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உங்கள் அலுவலக நிர்வாகத்துடன் சுமுகமான உறவைப் பேணுவது இன்றியமையாதது. அது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். பணியிடத்தில் எழும் சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்க தகவல் தொடர்பு திறம்பட இருக்க வேண்டும்.
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்ததாக இருக்கலாம். குடும்பத்தில் காணப்படும் இதமான சூழல் உங்கள் உறவை மேலும் உறுதிப்படுத்தும். இருவருக்கும் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். குழந்தைகளுடனான உங்கள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் துணையுடனான தொடர்பு உற்சாகமாகவும் ரொமாண்டிக்காகவும் இருக்கும். உங்கள் பொருளாதார நிலை சீராக இருக்கலாம். உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பாகவோ முதலீடாகவோ ஆக்கிக் கொள்ளுங்கள். தோள்பட்டை வலி மற்றும் முழங்கால்களில் வலி போன்ற சிறு அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக எடை தூக்குவதைத் தவிர்க்க வேண்டும். பள்ளி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். சிறந்த மதிப்பெண்களைப் பெற முயற்சி மேற்கொள்வார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பெறுவார்கள்.
உத்தியோகம்
உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் இந்த காலகட்டத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். பணியிட சூழல் உங்களுக்கு எதிராக இருக்கலாம், எனவே பொறுமையாக இருங்கள். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் நல்லுறவைப் பேணுங்கள். நம்பத் தகுந்த வகையில் நடந்து கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு உங்கள் கடின உழைப்பு அவசியம். இந்த சவாலான காலக்கட்டத்தில் உங்கள் தகவல்தொடர்புகளில் கவனம் செலுத்துங்கள்.
காதல்/ குடும்ப உறவு
குடும்ப உறுப்பினர்களுடன் பழகுவது இந்த காலக்கட்டத்தில் சற்று கடினமாக இருக்கும். அவர்களைக் கையாள உங்களுக்கு பொறுமை தேவைப்படலாம். மற்றும் நீங்கள் அவர்களுடன் பழகும் போது அமைதி காப்பது நல்லது. குழந்தைகளுடனான உங்கள் உறவு அன்பும் பாசமும் நிறைந்ததாக இருக்கும். உங்களுக்கு இடையிலான பந்தம் மேம்படும் இந்த காலக்கட்டத்தில் அவர்களுடன் சிரித்துப் பழகவும், கட்டித் தழுவவும், புன்னகையைப் பகிர்ந்து கொள்ளவும் உங்களுக்கு நிறைய நேரம் இருக்லாம். காதலர்களுக்கு இடையேயான தொடர்பு சிறப்பாக இருக்கும். இந்த காலக்கட்டம் உங்கள் அன்பிற்கு அன்பை மேலும் மெருகூட்டக் கூடிய வகையில் உள்ளது.
திருமண வாழ்க்கை
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கலாம். இருவரும் பரஸ்பரம் நல்ல புரிதலை வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் நேசத்துக்குரிய நினைவுகளை உருவாக்குவீர்கள். நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் நேரம் மறக்கமுடியாததாகவும் திருப்திகரமாகவும் இருக்கும்.
நிதிநிலை
நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த காலக்கட்டம் வரவேற்கத்தக்க வகையில் உள்ளது. உங்கள் பணத்தை சாதுரியமாகக் கையாண்டால் உங்களால் சேமிக்க முடியும். பங்கு வர்த்தகம் மூலம் நீங்கள் ஆதாயம் காணலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் நிதி சார்ந்த முடிவுகள் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். நீங்கள் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுவீர்கள். அவசர நிலையின் போது உங்கள் சேமிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். நிதி ரீதியாக நல்ல முடிவுகளை எடுப்பதன் மூலம் தேவையான பாதுகாப்பு உங்களுக்கு இருக்கும்.
மாணவர்கள்
அனைத்து தரப்பு மாணவர்களும் இந்த காலக்கட்டத்தில் கடினமாக உழைத்துப் படிக்க வேண்டியிருக்கும். வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்ளவும், சரியான நேரத்தில் வீட்டுப் பாடங்களை சமர்ப்பிக்கவும், தேர்வுகளுக்கு நன்கு தயாராகவும் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சிலர் . கல்வி சாரா நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.மேலும் ஒரு சில மாணவர்கள் பகுதி நேர வேலை பார்த்து சம்பாதிக்கலாம். உங்களுக்கு தேவை என்றால் ஆசிரியர்கள், சக மாணவர்கள் அல்லது ஆன்லைன் ஆதாரங்களின் உதவியை நாடுங்கள்.
ஆரோக்கியம்
தோள்பட்டை வலி மற்றும் எப்போதாவது முழங்கால் வலி போன்ற சில சிறிய உடல் நல உபாதைகள் இருக்கலாம். இவை சமாளிக்கக்கூடியதாக இருக்கலாம். இந்த உபாதைகளைத் தவிர, உங்கள் பொது ஆரோக்கியம் சீராக இருக்கலாம். இந்த வலிகளுக்கு குறிப்பாக கவனம் செலுத்துங்கள். அதிக எடை தூக்குவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் இது உங்கள் தோள்கள் மற்றும் முழங்கால்களின் நிலையை மோசமாக்கும். இலகுவான நடவடிக்கைகள் மற்றும் மென்மையான உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கலாம்.

Leave a Reply