AstroVed Menu
AstroVed
search
search

மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 (Meenam Rasi Guru Peyarchi Palangal Tamil 2021 to 2022)

dateSeptember 28, 2021

மீன ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது மீன ராசிக்கு விரைய ஸ்தானமாக அமைவதால் நிலம், வீடு மற்றும் வண்டி வாங்குவதற்காக செலவினங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம், வாழ்வில் எதிர்பாராத நன்மை தரும் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தி தருவதாக இந்த குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது. கோள்சார குருவானவர் பன்னிரெண்டாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக சுகஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக உத்தியோக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தையும் பார்வையிடப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது மீன ராசியைச் சார்ந்தவர்களுக்கு சொத்து சேர்க்கைகளையும், வெளிநாட்டு வாழ்கையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக  அமையப்போகிறது.   

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

குடும்பம்: 

குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின்  நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகள்  நலனில் அக்கறை செலுத்த வேண்டும். தன்னலம் பாராத உங்கள் செயல் குடும்ப உறுப்பினர்களின் அன்பை பெற்றுத் தரும். பொறுமையும் பேச்சில் நிதானமும் தேவை. தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் குடம்ப அமைதி காக்கப்படும். 

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நல்லிணக்கம் கூட சிவன் பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம். எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருங்கள்.  கண் அல்லது தூக்கக் குறைபாடுகள் போன்ற உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரலாம்.  உங்கள் தேக நலனுக்காக நீங்கள் சில மருத்துவ செலவுகளை மேற்கொள்ள நேரும். 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

காதல் / திருமணம்:

மீன ராசி இளம் வயதினர் தங்கள் காதல் உறவு கை கூட கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரும். தன்னலமற்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி உறவிலும் கருத்து வேறுபாடுகள் காரணமாக முரண்பட்ட நிலை இருக்கும். பொறுமை அவசியம். பேசும் வார்த்தைகளில் கவனம் அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்த்தல் அவசியம்.  

கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை

நிதி நிலை:

உங்கள் நிதிநிலை திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வாய்ப்பில்லை. உங்கள் இலக்கை எட்ட நீங்கள் கடுமையாகப் போராட மற்றும் உழைக்க வேண்டியிருக்கும். என்றாலும் உங்கள் கடின முயற்சிக்கான வெற்றியை பெற்று நீங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். அசையாச் சொத்துக்களை வாங்கும் வகையில் பணத்தை செலவு செய்வீர்கள். சேமிப்பின் அவசியம் உணர்ந்து பணத்தை சேமிக்க முயலுங்கள். 

தன நிலையில் ஏற்றம் உண்டாக சுக்கிரன் பூஜை

வேலை / தொழில்:

பணியிடச் சூழல் மந்தமாக காணப்படும். உங்கள் முன்னேற்றமும் மந்த நிலையில் இருக்கும். இது உங்களுக்கு வருத்தம் அளிக்கும் வகையில் இருக்கும். நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். என்றாலும் அதற்கான பலன் பெற இது சரியான தருணமாக இருக்க வாய்ப்பில்லை. தொழில் செய்பவர்கள் போட்டியாளர்களை சந்திக்க நேரும். வாடிக்கையாளர்களைக் கவர அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். என்றாலும் நல்ல லாபம்  கிட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்களின் கூட்டாளி மூலம் லாபமும் ஆதாயமும் காண்பார்கள். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் உண்டாக சனி பூஜை

கல்வி:

மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும். மனதை ஒருமுகப் படுத்திப் படிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை மாணவர்கள் தங்கள் இலக்கில் கவனம் செலுத்தி தங்கள் உழைப்பின் மூலம் வெற்றிக் கனியைப் பறிப்பார்கள். . 

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

  • தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் வாங்குவது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்.   
  • வியாழக்கிழமைகளில் மஞ்சள் ஆடை அணிவது நல்லது. 
  • வியாழக்கிழமைகளில் சிவாலயம் சென்று வருவது சிறப்பு.

banner

Leave a Reply