AstroVed Menu
AstroVed
search
search

கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 (Kumbam Rasi Guru Peyarchi Palangal Tamil 2021 to 2022

dateSeptember 28, 2021

கும்ப ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும்.  குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால், கும்ப ராசியிலேயே கோள்சார குரு சஞ்சாரம் செய்யப்போகிறார். இவ்வாறு ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடப் போவது திருமணம் தாமதம் ஆனவர்களுக்குத் திருமணத்தையும், புத்திர பாக்கியம் தடை பட்டவர்களுக்கு புத்திர பாக்கியத்தையும் ஏற்படுத்தித் தரப் போகிறார்.  அது மட்டும் அல்லாமல்  உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உத்தியோக உயர்வுடன் கூடிய வேலை மாற்றத்தையும், சகலவிதமான சௌபாக்கியங்கள் மற்றும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்க சாதகமானதாக இந்த குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது.

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

குடும்பம்: 

குடும்பத்தில் குதூகலம் இருக்கும். குல தெய்வ வழிபாடும், தெய்வ அனுக்கிரகமும் கிட்டும். குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன்  சுமுகமான உறவு காணப்படும். குழந்தைப் பேறு வேண்டி தவம் கிடந்தவர்கள் தங்கள் எண்ணம் ஈடேறக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவார்கள். நண்பர்கள்  உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை இருக்கும். 

குடும்பத்தில் நல்லுறவு நீடிக்க அஷ்ட லக்ஷ்மி பூஜை

ஆரோக்கியம்:

இந்தப் பெயர்ச்சிக் காலக் கட்டத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற மேலும் நேரம் தவறிய உணவு காரணமாக வயிற்றுப்புண் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சரியான உணவு மற்றும்  முறையான ஒய்வு மற்றும் சிறிய அளவிலான உடற்பயிற்சி மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறந்த முறையில் காத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை

காதல் / திருமணம்:

கும்ப ராசி இளம் வயது அன்பர்களுக்கு தங்கள் காதல் முயற்சிகள் கை கூடும். நீண்ட காலமாக திருமண முயற்சி கை கூடாதவர்களுக்கு இந்தக் காலக் கட்டத்தில் திருமணம் நடை பெறும் கணவன் மனைவி உறவு சுமுகமாக நல்லுறவாக இருக்கும். தம்பதிகள்  வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் ஒற்றுமை கூடி மகிழ்ச்சி அடைவார்கள். 

காதலில் வெற்றி மற்றும் திருமணத் தடை நீங்க கணேஷ பூஜை

நிதி நிலை:

உங்கள் பொருளாதாரம் நீங்கள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை நாடி வரும். பூர்வீகச் சொத்துக்கள் வகையில் ஆதாயம் கிடைக்கப் பெறும். அனைத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். ஊக வணிகங்களான பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் நல்ல தன லாபங்களை எதிர்பார்க்கலாம். வரவுக்கேற்ற செலவுகளையும் நீங்கள் சந்திக்க நேரும்.  

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை / தொழில்:

பணியிடச் சூழல் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் அதிக பணிகளை மேற்கொள்ள நேரும். தனியார் துறை அலுவலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு பெயரும் புகழும் பெறுவார்கள் சக ஊழியர்களின் ஆதரவும், நல்லிணக்கமும் கிடைக்கும். சுயதொழிலில் ஏற்றம் ஏற்படும். அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். கூட்டுத் தொழில் செய்பவர்களின் தன நிலை ஏற்றம் மிகுந்து காணப்படும். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் காண முருகன் பூஜை

கல்வி:

பள்ளி மாணவர்களுக்கு கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் நாட்டம் செல்லும். அனைத்துத் துறை மாணவர்களும்  தேர்வுகளை சிறப்பான முறையில் எழுதி வெற்றி காண்பார்கள். 

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

  • குலதெய்வக் கோவிலில் அன்னதானம் செய்வது சிறப்பு.   
  • வியாழக்கிழமைகளில் பசுவிற்கு வாழைப்பழம் உண்ணக் கொடுக்கலாம். 
  • கோவில் அர்ச்சகர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம். 

banner

Leave a Reply