AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் மே மாத ராசி பலன் 2021 | May Matha Rishabam Rasi Palan 2021

dateApril 2, 2021

ரிஷபம் மே மாத பொதுப்பலன் 2021:

ரிஷப ராசி அன்பர்களே! நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இந்த மாதம் உங்கள் வாழ்வில் நன்மை, தீமை என  இரண்டும் கலந்த பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். இந்த மாதம் நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். இதனால் வாழ்வின் பிற அம்சங்களில் உங்கள் நாட்டம் குறையும். குறிப்பாக உத்தியோகம் அல்லது தொழிலில் உங்கள் கவனம் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவ நீங்கள் அவர்களுடன் சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுக்கும் நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ள முயலுங்கள்.  இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் உங்கள் வருமானம் அதிகரிக்கும்.  பிறர் மூலம் நீங்கள் பணம் விஷயங்களில் ஆதாயம் பெறுவீர்கள் அல்லது பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கடந்த கால முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயல்படுவார்கள். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதம் போட்டியாளர்களை சந்திக்க நேரும்.  என்றாலும் அவர்களை முந்தும் விதத்தில் நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டு விற்பனையை உயர்த்துவீர்கள்.  சிறிய உடல் உபாதைகள் இருக்கும் என்றாலும் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். முன்னேற்றப் பாதையை நோக்கி நீங்கள் நடை  போடுவீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் உங்கள் பொருளாதாரம்  மற்றும் வேலை போன்றவற்றிற்கு  நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் என்ற காரணத்தினால் காதல், குடும்ப உறவு போன்றவை உங்களுக்கு இரண்டாம் பட்சமாகத் தான் இருக்கும். இதனால் குடும்பம், கணவன்-மனைவி  உறவில் லேசான சலசலப்பு மற்றும் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து விட்டுகொடுத்து நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் தக்க வைத்துக் கொள்ள வீட்டில் உள்ள மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.  

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கணிசமான வருமானத்தை ஈட்டுவீர்கள்.   இது உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தை அளிக்கும். இந்த மாத மத்தியில் திடீர் பணவரவு கூட ஏற்பட்டு உங்களை திக்கு முக்காட வைக்கலாம். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக விளங்கும் என்ற நம்பிக்கையை இந்த பண வரவு உங்களுக்கு உணர்த்தும். உங்கள் பெயரில் உள்ள கடன்களை இந்த மாதம் அடைத்து விடுவீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை 

வேலை:

பணியிடத்தில் நீங்கள் இந்த மாதம்  சிறப்பாகச் செயல்படுவீர்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் நல்லுறவை வளர்த்து நல்ல பெயரையும் பெறுவீர்கள். நீங்கள் திறமையாகப் பணியாற்றி நிர்வாகத்தின் விற்பனையை அதிகரிக்கச் செய்வீர்கள். உங்கள் திறமையான பணிக்கான ஊக்கத் தொகையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் வருமானமும் பெருகும்.  இந்த வகையில் உங்கள் பணிக்கு அங்கீகாரத்தை  நீங்கள் பெறுவீர்கள் என்றாலும் அதற்கு சிறிது காலம் நீங்கள் காத்திருக்க வேண்டும். எனவே அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்காதீர்கள். நீங்கள் சரியான முயற்சிகளை மேற்கொண்டாலும் அனைத்தும் சரியாக நடக்கும் என்று கனவு காணாதீர்கள். எந்தவொரு செயலையும் யோசித்து செய்ய வேண்டிய காலக் கட்டமாக இந்த மாதம் அமையும். 

தொழில் / வியாபாரம் :

இந்த மாத இடைப் பகுதியில் இருந்து உங்கள் தொழில் அல்லது வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உங்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு கிட்டு. புதிய தொழில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் பெரிய தொகை வருமானமாகக் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத் தொடர்பு கொண்டு வியாபாரத்தை புதுப்பித்துக் கொள்வார்கள். இந்த மாதம் நீங்கள் தொழில் மூலம் சிறப்பாக வருமானம் ஈட்டுவீர்கள்.  என்றாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பதற்கான முயற்சிகளை  நீங்கள் மேற்கொள்ள வேண்டும். 

தொழில் வல்லுனர்கள் :

பணியிடத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். முக்கியமான கோப்புகள் காணாமல் போவது அல்லது இடம் மாற்றி வைத்துத் தேடுவது போன்ற பிரச்சினைகள் இருக்கும். இதனால் பதட்டம் அதிகமாக இருக்கும். செய்த பணியைத் திரும்ப செய்ய வேண்டிய நிலை இருக்கும்.  இது உங்கள்  திறமையை பாதிக்கும் எனவே கவனமுடன் செயல்பட வேண்டிய மாதம் இது. 

உங்கள் வேலை மற்றும் தொழிலில் மேம்பட : குரு பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். என்றாலும்  சுவாசம் சம்பந்தமான ஆரோக்கியக் குறைபாடு உள்ளவர்களுக்கு அந்தப் பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்க  வாய்ப்பு உள்ளது. மாஸ்க் அணியாமல் எங்கும் வெளியில் செல்லாதீர்கள். இவற்றைத் தவிர வேறு எந்த தீவிர ஆரோக்கியப் பிரச்சினையும் உங்களுக்கு ஏற்படாது. சிறிய அளவில் உடல் பாதிப்பு இருந்தாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை கலந்துஆலோசியுங்கள். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : ருத்ரன் பூஜை 

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்களுக்கு பதட்டமற்ற நிலை இருக்கும். விஞ்ஞானம் மற்றும் ஐடி துறை சம்பந்தமான படிப்பில் உள்ளவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள். பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் கல்வி பயில்வார்கள். சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி வெற்றி காண்பார்கள். பெற்றோரிடம் இருந்து எதிர்பாராத வகையில் பரிசுகளையும் பெறுவார்கள். 

கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை 

சுப தேதிகள் : 1, 2,3, 4, 5, 6, 7, 16, 17, 20, 21, 22, 23, 26, 27, 28, 31.
அசுப தேதிகள் : 8, 9 10, 11, 12, 13, 14, 15, 18, 19, 24, 25, 29, 30.

Leave a Reply