AstroVed Menu
AstroVed
search
search

மிதுனம் மே மாத ராசி பலன் 2021 | May Matha Mithunam Rasi Palan 2021

dateApril 2, 2021

மிதுனம் மே மாத பொதுப்பலன் 2021:

மிதுன ராசி அன்பர்களே! உங்கள் வாழ்க்கைப் பாதையில் மேடும் பள்ளமும் இருக்கும். அதாவது   வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில சவால்களை சந்திக்க நேரும். அதே சமயத்தில் சில அதிர்ஷ்டகரமான சூழ்நிலைகளையும் சந்திப்பீர்கள்.  உங்கள் நிதிநிலையிலும் ஏற்ற இறக்க நிலைகள் இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். இல்லற வாழ்க்கை இனிதாக இருக்கும். என்றாலும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வந்து போகும். எனவே  நீங்கள்  உங்களின் பொன்னான உங்கள் நேரத்தை குடும்பத்துடன் செலவிட வேண்டும். அதன் மூலம் உறவில் நல்லிணக்கத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். இந்த மாதம் மிதுன ராசி மாணவர்கள்  வாழ்வில் பல புதிய திருப்பங்கள் நிகழும். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். இதனால் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியது அவசியம். வாக்குவாதங்களில் ஈடுபடுவதன் மூலம் சில பிரிவினைகள் ஏற்படும். கோபத்தை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்ப சூழ்நிலை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். கணவன் மனைவி  பிரச்சினை குழந்தைகளை பாதிக்காமல் இருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் மீது நீங்கள் அதிக அளவில் அக்கறை செலுத்த வேண்டும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

உங்களின் பொருளாதார நிலை இந்த மாதம் சாதாரணமாகத் தான் இருக்கும். அதிக அளவில் வருமானம் காண இயலாது. எனவே  பொருளாதார வகையில் முன்னேற்றம் என்பது  இந்த மாதம் அரிதாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர் விருப்பத்திற்கு இணங்க நீங்கள் கடன் வாங்குவீர்கள். இதனால் வீட்டில் அமைதியற்ற சூழ்நிலை இருக்கும். புதிய முதலீடு அல்லது முயற்சிகளை இப்பொழுது நீங்கள் மேற்கொள்ள வேண்டாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை 

வேலை :.

உத்தியோகத்தில் இருக்கும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. அலுவலகத்தில்  உயர்  அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரும், அதிக பணிகள்உங்களுக்கு சலிப்பை அளிக்கலாம். சக பணியாளர்களில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படலாம். மேலதிகாரிகளுடன் நல்லுறவு வளர்ப்பதன் மூலம் நீங்கள் சற்று  ஆறுதல் அடையலாம். 

தொழில் :

இந்த மாதத்தைப் பொறுத்தவரை தொழிலில் சாதகமான பலன்கள் சிறிது குறைவாகவே இருக்கும். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் மந்தமுடன் செயல்படுவார்கள். அதனால் பணிகளில் தாமதம் ஏற்படும். அவர்களை நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அந்த ஊக்கம் ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு போன்ற வகையில் இருக்கலாம். இது அவர்களை உற்சாகப்படுத்தி திறமையுடன் செயலாற்ற வைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறப்புடன் செயல்படுவார்கள். 

தொழில் வல்லுனர்கள் :

இந்த மாத ஆரம்பம் வரவேற்கத்தக்கதாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிட்டும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  பணியில் சில சவால்களை நீங்கள் மேற்கொள்ள நேரும். என்றாலும் அதை நீங்கள் வெற்றி கொள்வீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும். 

உங்கள் வேலை மற்றும் தொழிலில் மேம்பட : புதன் பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்ற போதிலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையைக் குறைக்கும் நபர்களுடன் சிறிது தள்ளியே இருங்கள். ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான மனம் அவசியம். எனவே உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். 
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : ருத்ரன் பூஜை 

மாணவர்கள் :

.மாணவர்களைப்  பொறுத்தவரை இந்த மாதம் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிட்டும் உங்கள் மேல்படிப்பு, எதிர்காலம் பற்றிய முடிவுகளை  எடுப்பதில் சில குழப்பங்கள் ஏற்படும். வணிகவியல், பத்திரிகைத் துறை போன்றவற்றில் இருப்பவர்கள் சில தொய்வுகளைக் காண்பார்கள்.  மேல்படிப்பிற்கு முயற்சி செய்பவர்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்க வேண்டும். 

கல்வியில் மேன்மை பெற : சனி பூஜை 

சுப தேதிகள் : 7, 8, 9, 10, 13, 14, 15, 19, 21, 22, 23, 24, 29, 30, 31.
அசுப தேதிகள் : 1, 2, 3, 4, 5, 6, 12, 13, 16, 17, 18, 20, 25, 26, 27, 28.

Leave a Reply