AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் மே மாத ராசி பலன் 2021 | May Matha Mesham Rasi Palan 2021

dateApril 2, 2021

மேஷம் மே மாத பொதுப்பலன் 2021:

மேஷ ராசி அன்பர்களே !  இந்த மாதம் நீங்கள் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.  பண வரவு நன்றாக இருக்கும். கையில் சரளமாகப் பணம் புழங்கும். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் இருந்தாலும்  ஒரு சில அசௌகரியங்களும் இருக்கும்.  நீங்கள் உத்தியோகம் செய்பவராக இருந்தால் நீங்கள் சிறப்பாகச் செயலாற்றி பெயரும் புகழும் பெறுவீர்கள். நீங்கள் சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவராக இருந்தால் சிறிது நிதானமாகச் செயல்பட வேண்டும். பொறுமை மிகவும்  அவசியம். தொழிலில் ஏற்படும் தடைகளைப் பொறுமையுடன் களைந்து முன்னேற வேண்டிய சூழல் இருக்கும். மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கவனமுடன் படிப்பார்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும் என்பதால் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

திருமணத்திற்குக் காத்திருக்கும் இளம் வயது மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான  பலன்கள் கிட்டும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை  இருக்கும். என்றாலும் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். குடும்பத்தில் வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும்.  உங்கள் உறவை நல்லுறவாக ஆக்கிக் கொள்ள வெளியிடங்களுக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசியுங்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை 

நிதிநிலை :

திட்டமிட்டு பணத்தை செலவு செய்வதன் மூலம் சேமிப்பை உயர்த்த முடியும் என்பத கருத்தில் கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். உங்கள் பட்ஜெட்டிற்குள் செலவுகளை வரையறை செய்து கொள்ளுங்கள். இந்த மாதம் ஆடம்பர செலவுகளைச் மேற்கொள்ள விரும்புவீர்கள். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர் கால நலன் கருதி பணத்தை சேமித்து வைப்பது அல்லது இருக்கும் பணத்தில் சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். பிறருக்கு பணத்தைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். 

உங்கள் நிதிநிலை மேம்பட :குபேரன் பூஜை 

வேலை :

உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் மாதம் இது. அந்த மாற்றங்கள் நீங்கள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும்.  உங்கள் படைப்புத் திறன் மூலம் நீங்கள் புதுமையாக யோசித்து உங்கள் கருத்துக்களை பணியிடத்தில் கூறுவீர்கள். எனவே   பணியிடத்தில் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். அனைவரும் உங்களைப் புகழ்வார்கள். பணியிடத்தில் நீங்கள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.  

தொழில் :

நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது போல உங்கள் தொழில் மூலம் கிடைக்கும் பலனும் இரண்டு விதமாக இருக்கும்.  உங்களுக்கு  இந்த மாதம் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிட்டும்.  நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். என்றாலும் அதற்குரிய பலன்கள் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கும்.  நீங்கள் பொறுமையுடன் காத்திருந்தால் சிறந்த வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். உங்கள் பணியாளர்களுடன் சில பிரச்சினைகள் வந்து போகும். அவர்கள் கவனம் சிதற வாய்புகள் உண்டு.  உங்கள் தொழிலில் முன்னேற்றத்திற்கு அவர்களின் முயற்சி போதுமான  அளவு இருக்காது. எனவே நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிட்டாது.  

தொழில் வல்லுனர்கள் :

நீங்கள் தனியார் நிறுவனத்தில் பணி புரிபவர் என்றால், பணியிடத்தில் உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் வந்து சேரும். அந்த வாய்ப்புகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் திறமைக்கு சோதனையான காலக் கட்டமாக இந்த மாதம் இருக்கும். தொழில் சம்பந்தமாக நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டிய  சந்தர்ப்பம் அமையும்.  இதன் மூலம் நீங்கள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். 
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  சிறிய உடல் உபாதைகள் என்றாலும் அதனை நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடாது. சிக்கல் ஏற்படாமல் இருக்க மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுங்கள். தியானப் பயிற்சி மற்றும்  உடற் பயிற்சி உங்கள் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள உதவும். இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் ஆரோக்கியம் சற்று மேம்படும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :  அங்காரகன் பூஜை 

மாணவர்கள் :

ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயின்று உயர் கல்விக்கு முன்னேறுவார்கள்.  மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதன் மூலம் கவனிப்புத் திறன் கூடும்.  தேர்வுகளையும்  சிறந்த முறையில் எழுதி அதிக  மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்கள்  குடும்ப சூழ்நிலை காரணமாக தங்கள் படிப்பில் கவனக்  குறைவு ஏற்படும். இதனால் மந்த நிலை ஏற்படும். மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமும் நட்புடன் அணுக வேண்டும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை நண்பர்களாக பாவித்து பழகுவதன் மூலம் அவர்கள் வெளிப்படையாகப் பேசி மனதை தெளிவாக வைத்துக் கொள்வார்கள். 

கல்வியில் முன்னேற்றம் காண :  ஹனுமான் பூஜை 
 
சுப தேதிகள் :  1, 2, 3, 4, 7, 8, 9, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 30.
அசுப தேதிகள் :   5, 6, 10, 11, 12, 13, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 31.

Leave a Reply