விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Viruchigam

விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2021 பொதுப்பலன்கள்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு சவால்கள் மிக்கதாக இருக்கும். அவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். என்றாலும் இந்த மாதத்தின் இடைப் பகுதியில் நிலைமை ஓரளவு சீராகும். வீட்டில் விருந்து விசேஷங்களும் நடைபெறும். உங்களில் சிலர் வீடு, மனை, பூமி போன்ற சொத்துக்களை வாங்குவீர்கள். நீங்கள் கடன் வேண்டி விண்ணப்பித்திருந்தால் அவை கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.
காதல் / குடும்ப உறவு:
நீங்கள் உங்கள் பணிகளை விட அன்பிற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினைகளை நீங்கள் சந்திப்பீர்கள். அதனால் உங்களுக்கு பதட்டம் ஏற்படும். உங்கள் தன்னம்பிக்கை காரணமாக நீங்கள் தைரியமாக செயல்படுவீர்கள். உங்கள் பக்குவ மனப்பான்மை உங்களை அன்பு மிக்கவராய் மாற்றும். குடும்ப நல்லுறவில் முன்னேற்றம் காணப்படும்.
நிதிநிலை:
உங்கள் பண விஷயங்களில் நீங்கள் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். அதிகமாக பணத்தை செலவு செய்யவும் மாட்டீர்கள். கஞ்சத்தனமாகவும் இருக்க மாட்டீர்கள். சமநிலை வகிப்பீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். உங்கள் மனதில் காணப்படும் தைரியம் உங்களை சிறப்புற நிர்வகிக்க வைக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : குபேரன் பூஜை
வேலை:
பணியில் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும். நீங்கள் பணியில் அதீத கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் எடுக்கும் சில முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பணியில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளவும் நீங்கள் முனைவீர்கள். அதன் மூலம் நிலைமை சீராகும். எனவே நீங்கள் பொறுமையுடன் பணியாற்ற வேண்டும்.
தொழில்:
நீங்கள் உங்கள் தொழிலில் மிதமான வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் காண நீங்கள் யோசித்துச் செயல்பட வேண்டும். கூட்டுத் தொழில் சுமுகமாக நடை பெறவும் அதில் லாபம் காணவும் நீங்கள் கவனம் சிதறாமல் செயல்பட வேண்டும். நிலுவைத் தொகைகள் வருவதில் சில தாமதங்கள் ஏற்படும். சில போராட்டங்களுக்குப் பிறகு தான் அந்தப் பணம் உங்களுக்கு கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் நிமித்தமாக நீங்கள் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதிலும் சில தடைகளையும் தாமதங்களையும் சந்திப்பீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
விருச்சிக ராசி தொழில் வல்லுனர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். என்றாலும் உங்கள் தொழில் சம்பந்தமான பணிகளை விரைந்து முடிக்கும் மின்னணு சாதனங்கள் பழுது காரணமாக நீங்கள் சில எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரும். இது உங்கள் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தும். உங்கள் அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கவில்லையே என்ற ஏமாற்ற நிலை இருக்கும். இதனால் நீங்கள் சிறப்புற செயலாற்ற இயலாத நிலை இருக்கும். என்றாலும் நீங்கள் இந்த நிலையை சமாளிப்பீர்கள்.
வேலை அல்லது தொழிலில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இந்த மாத கடைசி பகுதியில் . நீங்கள் உற்சாகமாக உணர்வீர்கள். என்றாலும் சிறு உடல் உபாதைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். சத்தான ஆகாரத்தை உட்கொள்ளுங்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
மாணவர்கள்:
மாணவர்கள் மாணவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிக கவனம் செலுத்தி படிப்பதன் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். உங்கள் பெற்றோர் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க : அங்காரக பூஜை
சுப நாட்கள் : 9, 10, 11, 12, 13 15, 19, 20, 23, 25, 28, 29, 30, 31
அசுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 14, 16, 17, 18, 21, 22, 24, 26, 27
