AstroVed Menu
AstroVed
search
search

தனுசு மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Dhanusu

dateFebruary 8, 2021

தனுசு மார்ச் மாத ராசி பலன் 2021 பொதுப்பலன்கள் :

இந்த மாதம் உங்களுக்கு ஓரளவு அதிர்ஷ்டம் காணப்படும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் உள்ளது. குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரச்சினைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.  உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஆனால் கடன் விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்குவதும் கொடுப்பதும் கூடாது. நீங்கள் பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  என்றாலும் சிறு சிறு உபாதைகள் வந்து நீங்கும். மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.

காதல் / குடும்ப உறவு :

இளம் வயது தனுசு ராசி அன்பர்களே! உங்கள் காதலுக்கு உங்கள் நண்பர்கள் துணை புரிவார்கள்.  உங்கள்காதல் குறித்த முடிவுகளை நீங்கள் அவசரப்படாமல் எடுக்க வேண்டும். திருமணம் ஆன தம்பதிகள் இடையே ஒற்றுமை இருக்கும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண :  சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

பணப் புழக்கம் சரளமாக இருக்கும். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கடினமாகவும் உழைப்பீர்கள்.  உங்கள் பண விஷயங்களில்  நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். நிதிநிலை விஷயங்களில் நீங்கள் சுதந்திரமாகச் செயல்பட விரும்புவீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் 

வேலை:

புதிய பணியில் சேருபவர்கள் தங்கள் பணியிடத்தில் சில பதட்டமான சூழ்நிலையை சந்திப்பார்கள்.  பணி நிமித்தமாக  வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். அதன் மூலம் நீங்கள் சில அசௌகரியங்களைச் சந்திப்பீர்கள். உங்கள் நேரம் தவறாமை மற்றும் பணியாற்றும் திறன் கண்டு உங்கள் மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். சக பணியாளர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக விளங்குவீர்கள்.

தொழில்:

தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் குறிப்பாக மாதத்தின் இரண்டாவது அரைப் பகுதி சிறப்பானதாக இருக்கும். முதலீட்டாளர்கள் மூலம் செய்யப்படும் தொழில் முதலீடுகள் குறித்து நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். உங்கள் பழைய நண்பர் ஒருவர் மூலம் தொழில் குறித்த ஆலோசனைகளை நீங்கள் பெறுவீர்கள்.தொழில் என்றால்  போட்டியாளர்கள் இருக்கத் தான் செய்வார்கள். அதைப் பற்றி வருத்தப்படமால் நீங்கள் முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றி காண்பீர்கள். 

தொழில் வல்லுனர்கள்:

உங்கள் நேர்மை மற்றும் விடா முயற்சி மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்கள் மேலதிகாரிகள் மேற்கொள்ளும் புதிய பணிகளுக்கான முயற்சிகளுக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள். இந்த மாதத்தின் இடைப் பகுதியில் சில புதிய பணி வாய்புகள் உங்களை நாடிவரும்.  எனவே எந்த வேலையை ஒப்புக் கொள்வது என்ற குழப்பம் ஏற்படலாம். நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள்.  

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை 

ஆரோக்கியம்:
 
கிரக நிலைகள் இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே சென்ற மாதத்தில் உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. உணவு முறையில் கவனம் தேவை. எண்ணெய் பதார்த்தங்களை உட்கொள்ளாதீர்கள். உடற்பயிற்சி மற்றும் தியானம் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் காத்துக் கொள்ள முடியும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :விஷ்ணு பூஜை 

மாணவர்கள்:

மாணவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி கூடும். உங்களின் இயல்பான புத்திசாலித்தனம் பிரகாசிக்கும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நன்மை தரும். நீங்கள் உங்கள் இளைய உடன் பிறப்புகளுக்கு உதவி புரிவீர்கள். அதன் மூலம் நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். கவனம் சிதற விடாமல் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் பிரகாசமான வாழ்வைப் பெறுவீர்கள். 

கல்வியில் மேன்மை அடைய : அங்காரகன் பூஜை

சுப நாட்கள் :   4, 5, 6, 8, 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 26, 27, 28 
அசுப நாட்கள் :  1, 2, 3, 7, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 23, 29, 30, 31


banner

Leave a Reply