AstroVed Menu
AstroVed
search
search

துலாம் மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Thulam

dateFebruary 8, 2021

துலாம் மார்ச் மாத ராசி பலன் 2021 பொதுப்பலன்கள்:

துலாம் ராசி அன்பர்களுக்கு இது மிகச் சிறந்த மாதமாக இருக்கும். குடும்பம், குழந்தை மற்றும் உறவு என அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.  வீட்டில் உற்சாகம் பொங்கும். என்றாலும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் உறவு முறையில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் படைப்புத் திறன் மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலம் நீங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள்.  நீங்கள் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெற்று முன்னேற்றம் காண்பீர்கள். பணியில் இருக்கும் துலாம் ராசி அன்பர்கள் பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சிறந்த மனிதர்களின் நட்பைப் பெறுவீர்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.

காதல் / குடும்ப உறவு:

குடும்ப உறுப்பினர்களுடனான உறவு முறை இந்த மாதம் திருப்தி தரும் வகையில் இருக்கும். குறிப்பாக இந்த மாதத்தின் முதல் பகுதியில்.  உங்கள் வாழ்க்கைத் துணையின் சில விருப்பங்களை நீங்கள் நிறைவேற்ற வேண்டிய சூழல் இருக்கும்.  இதனால் குடும்பத்தில் சில வாக்குவாதங்கள் எழும். உங்கள் குழந்தைகளுடனான உறவில் நெருக்கம் ஏற்படும். நீங்கள் அவர்களுக்கு சிறந்த ஆலோசகராக விளங்குவீர்கள். அதிக அன்பு, அன்பிற்கு உரியவர்களின் மேல் ஆதிக்கம் செலுத்தவும் வைக்கும். இது அமைதியைக் குலைக்கும். எனவே குடும்பத்தில்  அமைதி நிலவ நீங்கள்  கவனமுடன் செயல்பட வேண்டும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை 

நிதிநிலை:

இந்த மாத நடுப் பகுதி வரை பணப் புழக்கம் சீராக இருக்கும்.  அதன் பிறகு உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாக வரும். இது உங்களுக்கு மனப் பதட்டத்தை ஏற்படுத்தும். என்றாலும் தொழில் அல்லது வியாபாரம் மூலம்  நீங்கள் பணம் ஈட்டுவீர்கள். வீடு மராமத்து. வெள்ளையடித்தல், வீட்டிற்குத் தேவையான மரச் சாமான்கள் வாங்குதல் என நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். மேலும் உங்கள் குழந்தகளின் படிப்பு மற்றும் அவர்களின் தேவைகளுக்கு நீங்கள் பணம் செலவு செய்வீர்கள்.  எனவே நீங்கள் சிறிது சிக்கனத்தைக் கடைபிடித்து உங்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்கால நலத்திற்காக சேமிப்பையும் மேற்கொள்ள வேண்டும். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை 

வேலை:

பணி புரிபவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற சூழ்நிலை இருக்கும். பணியிடத்தில் உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பணியிடத்தில் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். ஆனால் மேலதிகாரிகளிடம் நீங்கள் கவனமாகப் பேச வேண்டும். உங்கள் தவறான பேச்சு உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும். அலுவலகத்தில் சில சிறிய பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. அதை சமாளிக்கும் வகையில் நீங்கள் சமயோசிதமாக நடந்து கொள்வது சிறப்பு. நீங்கள் உங்கள் பேச்சாற்றலை சரியாகப் பயன்படுத்தினால் வெற்றி காண்பீர்கள். 

தொழில்:

கூட்டுத் தொழில் உங்களுக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் உங்கள் தொழில் நன்றாக வளரக் காண்பீர்கள். உங்கள் கூட்டாளிகள் உங்களுக்கு உதவி புரிவார்கள். புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும். உங்கள் திறமை மற்றும் தைரியம் காரணமாக நீங்கள் சிறப்புற விளங்குவீர்கள். உங்களில் சிலர் தொழிலில் அந்நிய மொழியைப் பயன்படுத்தி சிறந்த வளர்ச்சி காண்பீர்கள். 

தொழில் வல்லுனர்கள்:

துலாம் ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்புற செயல்படுவார்கள். உங்கள் மேலதிகாரிகள் அல்லது வாடிக்கையாளர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் அல்லது மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் நீங்கள் புதிய பணிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். உங்கள் மேலதிகாரி உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். 

உங்கள் வேலை மற்றும் தொழிலில் மேன்மை காண : சுக்கிரன் பூஜை 

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நீங்கள் மனதளவில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் அதிக பணிகளை மேற்கொள்வீர்கள். இதனால் கூட உங்கள்ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். போதிய ஒய்வு, முறையான உணவு, போதிய தூக்கம் மேற்கொள்ளுங்கள் 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை

மாணவர்கள்:

மாணவர்கள் சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் பொறுப்புடன் செயல்பட்டால் வெற்றி வாய்ப்புகள் உங்களை நாடி வரும். உங்கள் பொறுப் புகளை நீங்கள் சரிவர மேற்கொள்ள வேண்டும். சில தடைகளும் தாமதங்களும் உங்கள் வெற்றிப் பாதையில் தடைக்கல்லாக இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள். சக மாணவர்களுடன் நீங்கள் சிறந்த உறவை பராமரிப்பீர்கள். 
நீங்கள் கல்வியில் மேன்மை அடைய : அங்காரகன் பூஜை 

சுப நாட்கள் :  6, 7, 8, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 24 
அசுப நாட்கள் :  1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 25, 23, 26, 27, 28, 29, 30, 31


banner

Leave a Reply