AstroVed Menu
AstroVed
search
search

கன்னி மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Kanni

dateFebruary 4, 2021

கன்னி மார்ச் மாத ராசி பலன் 2021 பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். உங்களில் சிலர் பணி  நிமித்தமான மாற்றங்களை சந்திப்பீர்கள். நீங்கள் இந்த மாதம் நிதி சம்பந்தமான சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். என்றாலும் நீங்கள் வீடு, அலுவலகம் மற்றும் நிதி சார்ந்த பிரச்சினைகளை எளிதில் தீர்ப்பீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் பொன்னான நேரத்தை கழிப்பீர்கள். வீட்டில் உங்கள் பொறுப்புகளை சரிவர செய்வதன் மூலம் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவீர்கள்.அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.

காதல்/ குடும்ப உறவு:

நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவர் என்றால் உங்களுக்கு ஏற்ற துணையை நீங்கள் உங்கள் பணியிடத்தில் காணப் பெறுவீர்கள். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் அறிந்து நடந்து கொள்ள வேண்டும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை 

நிதிநிலை:

இந்த மாதம் நிதிநிலையைப் பொறுத்தவரை நீங்கள் நன்மையும் தீமையும் கலந்த பலன்களைப் பெறுவீர்கள். முதலீடு குறித்த விஷயங்களில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்காதீர்கள். மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு உங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை 

வேலை :

பணியிடத்தில் நீங்கள் அனுசரணையுடனும் ஒத்துழைப்புடனும் பணியாற்றுவீர்கள். பதவி உயர்விற்காக இத்தனை காலம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் நல்ல பலன்கள் கிட்டும். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் படைப்பாற்றல் மற்றும் கடின உழைப்பைப் பாராட்டுவர்கள். பணி நிமித்தமான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தால் உள்ளூர் பயணத்தை மேற்கொள்ளுங்கள். வெளிநாட்டுப் பயணங்களை தள்ளிப் போடுங்கள். இறைவன் அருளால் உங்கள் பயணங்கள் மூலம் நல்ல பலன்களைக் காண்பீர்கள். 

தொழில்:

உங்களின் யதார்த்த சிந்தனையும்  உங்கள் வேலை செய்யும் பாங்கும் தொழிலில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வென்று வெற்றி காண வழி வகுக்கும். தொழிலில் மதிப்பு மற்றும் மரியாதையைப் பெறுவீர்கள். புதிய தொழில் வாய்ப்பு உங்களை நாடி வரும். தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் பலன் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி சிறப்பாக செயலாற்றுவதன் மூலம் நீங்கள் வெற்றி காண இயலும். 

தொழில் வல்லுனர்கள்:

விருச்சிக ராசி தொழில் வல்லுனர்கள் ஆரோக்கியமான வலுவான மன நிலையுடன் தொழில் செய்வார்கள். இதன் மூலம் தன்னம்பிக்கை பெருகும். மேலதிகாரிகள் மற்றும் சக  பணியாளர்களுடன் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்களில் சிலர் தொழில் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பாக செயலாற்றுவீர்கள். `

வேலை மற்றும் தொழிலில் மேன்மை அடைய :புதன் பூஜை 

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் தினசரிப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வீர்கள்.  உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவார்கள். சில சமயம் நீங்கள் உணர்ச்சி வசப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும் வகையில் நீங்கள் சிறிது ஓய்வை நாடுங்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள்:

மாணவர்கள் இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கக் காண்பார்கள். கல்வியில் கவனம் செலுத்திப் படிப்பார்கள். சில மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவார்கள்.  சிறிய உடல் உபாதைகள் காரணமாக உங்கள் படிப்பில் சிறிது மந்த நிலை இருக்கும்.  முறையான தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம், உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொண்டு உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். 

கல்வியில் மேன்மை அடைய :  சனி பூஜை 

சுப நாட்கள் :  1, 2, 3, 8, 9, 10, 11, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 27
அசுப நாட்கள் : 4, 5, 6, 7, 15, 16, 17, 12, 13, 14, 21, 27, 28, 29, 30, 31


banner

Leave a Reply