சிம்மம் மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Simmam

சிம்மம் மார்ச் மாத ராசி பலன் 2021 பொதுப்பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த மாதத்தின் முதல் பகுதி சிறப்பாக இருக்கும் என்றாலும் இந்த மாதத்தின் இரண்டாவது பகுதியில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கிரகங்களின் சாதகமான நிலை காரணமாக உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் அதிர்ஷ்டகரமான சூழல் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களில் சிலருக்கு பணி மாற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிட்டும். பணியிடத்திலும் வீட்டிலும் மூத்தவர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்ளுங்கள். கடின உழைப்பின் மூலம் தான் பணம் ஈட்ட முயலும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். நீங்கள் எதிர்பார்க்கும் பூவீகச் சொத்துக்கள் இந்த மாதம் உங்கள் கைக்கு வந்து சேராது. அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.
காதல் /குடும்பம்:
இந்த மாதம் நீங்கள் அன்பிற்கும் காதலுக்கும் முக்கியத்துவம் அளிப்பீர்கள். மாதத்தின் முதல் பகுதி நல்லுறவை வளர்த்துக் கொள்ள எதுவாக உள்ளது. எனவே இந்த நேரத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிக பணிகள் காரணமாக நீங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க இயலாமல் போகலாம். எனவே குடும்பத்திற்கென நேரம் ஒதுக்கி உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிநாட்டு பயணங்கள் காரணமாக நீங்கள் குடும்பத்தைப் பிரிய வேண்டிய சூழல் ஏற்படலாம்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நிகழும். குழந்தைப்பிறப்பு, திருமணம் போன்ற சுப நிகழ்சிகளுக்கான செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரும். செலவுகள் கை மீறிச் செல்வதால் சிறிது பதட்ட நிலை இருக்கும். குடும்ப விவகாரங்கள் மற்றும் பயணங்கள் குறித்த செலவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் நீங்கள் செலவுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். உங்கள் சொந்த செலவுகளை நீங்கள் கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை
வேலை:
நீங்கள் பணியிடத்தில் சரியான முடிவுகளை எடுத்து பணி செய்வதன் மூலமும் மற்றும் உங்கள் அணுகுமுறையை சரியான முறையில் மாற்றிக் கொள்வதன் மூலமும் வெற்றி வாய்ப்பினைப் பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். அது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். பணியிடத்தில் நீங்கள் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். பதவி உயர்வு உங்களை நாடி வரும். வேலை விஷயமாக நீங்கள் வெளி நாடு செல்வீர்கள்.
தொழில்:
சிம்ம அராசி அன்பர்களின் தொழில் இந்த மாதம் ஓரளவு அனுகூலமாக இருக்கும். சிறிய அளவிலான ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் உயரும். மென்பொருள் துறை மற்றும் சமூக ஊடகத் துறையில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் சிம்ம ராசி தொழில் செய்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். அதே சமயம் அவர்கள் தங்களின் பொறுப்புகளை நிர்வகிக்கும் வலிமையைப் பெறுவார்கள். ஊக்கத்துடன் செயல்பட்டு தொழிலில் வெற்றி காண்பார்கள். உங்கள் வெற்றி மனதில் திருப்தியை ஏற்படுத்தும். மனதில் நிறைவு இருக்கும். பல் ஆச்சரியமான விஷயங்களை நீங்கள் சந்திப்பீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை
ஆரோக்கியம் :
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தவறான உணவு முறை காரணமாக அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காலையில் சூரிய நமஸ்காரம் மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம். துரித உணவு வகைகளை தவிர்த்து சாத்வீக உணவு உண்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாகச் செயல்பட இயலும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள்:
மாணவர்களுக்கு கல்வி அல்லது எதிர்காலம் குறித்த பதட்டங்கள் ஏதும் இருக்காது. விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம் போன்ற பாடங்களைப் பயிலும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயலாற்றுவார்கள். மாணவர்கள் இந்த மாதம் தேர்வுகளை சிறப்பாகச் செய்து அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துவார்கள். குறிப்பாக தாங்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெறுவார்கள்.
கல்வியில் மேன்மை அடைய : அங்காரகன் பூஜை
சுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 13, 14, 18, 19, 20, 23, 26, 27, 28, 29, 30
அசுப நாட்கள் : 6, 7, 8, 9, 10, 11, 12, 15, 16, 17, 21, 22, 24, 25, 31
