கடகம் மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Kadagam

கடகம் மார்ச் மாத ராசி பலன் 2021 பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக, சாதகமான பலன்களைப் பெறும் மாதமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் நன் மதிப்பு பெருகும். இந்த மாதம் உங்கள் பொலிவு கூடும். அழகு அதிகரிக்கும். வளர்ச்சியும முன்னேற்றமும் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை. உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் உங்கள் தந்தை வழி உறவுகளிடம் நீங்கள் புரிதலுடன் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் அவர்கள் வீட்டாருடன் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடினமான பிரச்சினைகளில் இருந்து குரு பகவான் உங்களை காபாற்றுவார். அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.
காதல்/ குடும்ப உறவு:
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் வாக்கு வாதங்களை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பணி மாற்றம் குறித்த விஷயத்தில் வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவு செய்ய வேண்டும். அதன் மூலம் நீங்கள் நல்லிணக்க உறவை பாதுகாத்துக் கொள்ள இயலும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : குரு பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்களில் சிலர் பதவி உயர்வு மூலம் உங்கள் வருமானம் உயரக் காண்பீர்கள். என்றாலும் சில எதிர்பாராத பின்னடைவுகள் உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். உங்கள் முதலீடுகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பிறருக்கு கடன் அளிக்கும் விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி குபேர பூஜை
வேலை:
இந்த மாதம் நீங்கள் வேலையின் மூலம் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். மார்ச் மாத நடுவில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக நீங்கள் வங்கி மற்றும் அரசுச் துறையில்பணி புரிபவர் என்றால் அதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள்.
தொழில் :
தொழில் செய்யும் கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். கூட்டுத் தொழில் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு தொழில் ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். நீங்கள் தற்போது மேற்கொள்ளும் தொழிலுடன் வேறொரு தொழிலையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தொழில் சார்ந்த ஒப்பந்தங்களில் நீங்கள் கையொப்பம் இடுமுன் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் வல்லுனர்கள்:
கடினமாக உழைக்கும் கடக ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தொழிலுக்குரிய அங்கீகாரம் பெறுவார்கள். தொழில் குறித்த எந்தவொரு விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். யதார்த்த நிலை உணர்ந்து நடந்து கொள்வது நன்மை அளிக்கும்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : அங்காரகன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும் என்றாலும், பெரிய அளவிலான உடல் உபாதைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்கு மன பலத்தை அளிக்கும். அதன் மூலம் உங்கள் உடல் பலம் சிறப்பாக இருக்கும். சோம்பலைக் கை விட்டு நீங்கள் யோகா தியானம் போன்றவை மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரிய ன் பூஜை
மாணவர்கள்:
இந்த மாதம் உங்களுக்கு சிறந்த மாதமாக இருக்கும். என்றாலும் நீங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். கல்வியில் வெற்றி பெற நீங்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று வேலையும் கிடைக்கப் பெறுவார்கள்.
மாணவர்கள் கல்வியில் மேம்பட : குரு பூஜை
சுப நாட்கள் : 4, 5, 6, 8, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 31
அசுப நாட்கள் : 1, 2, 3, 7, 9, 10, 11, 12, 13, 14, 26, 27, 28, 29, 30
