ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Rishabam

ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2021 பொதுப்பலன்கள்:
ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிடைக்கும். குறிப்பாக உறவுமுறை, வேலை, ஆரோக்கியம் மற்றும் செல்வம் சார்ந்த வகைகளில் ஓரளவே சாதகமான பலன்கள் கிட்டும். பணியிடத்திலும் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். என்றாலும் உங்கள் நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களிடம் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த மாதம் அதிர்ஷ்டமான சூழ்நிலையையும் நீங்கள் சந்திப்பீர்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றியும் காண்பீர்கள். ஆன்மீக எண்ணங்கள் உங்கள் மனதில் அதிகரிக்கும். உங்களில் சிலர் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பினையும் பெறுவீர்கள். அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது
காதல் / குடும்பம்:
கிரகங்களின் சாதகமான நிலை காரணமாக உங்களில் சிலருக்கு காதல் மலரும். ஆனால் உங்கள் வார்த்தைகளை நீங்கள் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து இருப்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். அதிக பணிகள் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் நேரம் செலவழிக்க இயலாமல் போகும். எனவே நீங்கள் உங்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலையுடன் சமாளித்து செல்ல வேண்டும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் செல்வமும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வில் பொங்கிப் பெருகும். உங்கள் முதலீடுகள் நிரந்தர மற்றும் நீடித்த வளர்ச்சி காணும். மார்ச் மாத இடைப் பகுதியில் இருந்து உங்கள் நிதிநிலை மேம்படும். நீங்கள் கடன்களை அடைப்பீர்கள். உங்கள் தகவல் தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை
வேலை:
இந்த மாதம் பணியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். சக பணியாளர்களின் அங்கீகாரம் பெறுவீர்கள். நீங்கள் பெயரும் புகழும் பெற கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் எதிர் கால திட்டங்கள் குறித்து உங்கள் மேலதிகாரிகளிடம் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி காண இயலும். வேலை சம்பந்தமான பயணங்களில் சில தடைகள் இருந்தாலும் அதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தாமதங்கள் உங்களுக்கு சில ஏமாற்றத்தை அளிக்கும். பொதுவாக இந்த மாதம் வெற்றிக்கு வழிகாட்டும். நீங்கள் பணியில் பிரகாசிக்க வழி வகுக்கும்.
தொழில்:
கூட்டுத் தொழிலில் சில பதட்டமான நிலை இருக்கும். சில சட்டப் பிரச்சினைகள் எழும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் அமைதியுடன் செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் உங்கள் தொழில் நட்பு வட்டம் விரிவாகும். முன்னேற்றங்களும் லாபமும் கிட்டும். நீங்கள் சந்தோஷமாக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சில ஆச்சரியங்களை சந்திப்பீர்கள். பணியிடத்தில் நீங்கள் தலைமைப் பொறுப்பு ஏற்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் வருத்தமும் கோபமும் படாதீர்கள். நம்பிக்கையுடன் மேற்கொண்டு செயலாற்றுங்கள். நீங்கள் அரசுத் துறை மற்றும் படைப்புத் துறையில் பணியாற்றுபவர் என்றால் நீங்கள் சிறந்த வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். நீங்கள் திடீர் ஆதாயம் பெறுவீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : குரு பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் பதட்டப்படாமல் அமைதியாக செயலாற்ற வேண்டும். தியானம் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் மன அமைதியைப் பெற இயலும். உடற் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க இயலும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட :ருத்ரன் பூஜை
மாணவர்கள் :
மாணவர்களுக்கு இந்த மாதம் ஓரளவு சிறந்த மாதமாக இருக்கும். இதுவே அவர்களின் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். புத்திசாலித்தனமாக செயல்படுவதன் மூலம் மாணவர்கள் வெற்றி காண்பார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை
சுப நாட்கள் : 2, 3, 4, 5, 6, 14, 15, 16, 17, 20, 23, 26, 27, 28, 29, 30
அசுப நாட்கள் : 1, 7, 8, 9, 10, 11, 12, 13, 18, 19, 21, 22, 24, 25, 31
