AstroVed Menu
AstroVed
search
search

மிதுனம் மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Mithunam

dateFebruary 4, 2021

மிதுனம் மார்ச் மாத ராசி பலன் 2021 பொதுப் பலன்கள்: 

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் பல விஷயங்களில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வேலை போன்றவற்றில் நீங்கள் சிறந்த மாறுதல்களைக் காண்பீர்கள்.  உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் நீங்கள் சிறந்த மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் வாக்கு வாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. பணியிடத்தில் சில பதட்டமான சூழ்நிலயை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும் நீங்கள் சில நன்மையான பலன்களைப் பெறுவீர்கள். அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.

   

காதல் / குடும்ப உறவு:

இளம் வயது மிதுன ராசி அன்பர்கள் தங்களுக்கேற்ற துணையைக் கண்டு கொள்ளும்  மாதமாக இந்த  மாதம் இருக்கும்.  உங்கள் மனதில் எழும் காதல் தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக இருக்கும். உங்களுக்கேற்ற துணையை நீங்கள் பணியிடம் அல்லது ஆலயம் போன்ற இடங்களில் கண்டு கொள்வீர்கள்.  திருமணமான தம்பதிகள் மனதில் ஆன்மீக எண்ணங்களை வளர்த்துக்  கொள்வதன் மூலம் இனிய நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை:

நீங்கள் குடும்பத்தில் மட்டுமன்றி பணியிடத்திலும் எதிர்பாராத ஆதாயங்களைப் பெறும் வகையில் கிரக நிலைகள் அமைந்துள்ளன. என்றாலும் நிதிநிலையைப் பொறுத்தவரை நீங்கள் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். திடீர் செல்வ வளம் பெறும் வாய்ப்பும் உங்களில் சிலருக்கு ஏற்படும். பணம் சேமிக்கும் விஷயங்களில் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்வது சிறப்பு. அவர்களின் ஆலோசனை உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். பூர்வீகச் சொத்துக்கள் உங்களில் சிலருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

உங்கள் நிதிநிலை மேம்பட :  சூரியன் பூஜை 

வேலை:

பணி செய்யும் மிதுன ராசி அன்பர்கள் சில சவால்கள் மற்றும் பின்னடைவுகளை சந்திக்க நேரும். என்றாலும் இந்த மாத நடுவில் உங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். உங்கள் தைரியம் மற்றும் திறமை மூலம் நீங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் தகவல் தொடர்பு திறமைக் குறைபாடு காரணமாக நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். பணியிடத்தில் நீங்கள் பல புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள நேரும்.  உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தை நீங்கள் மேலதிகாரிகளிடம் இருந்து பெறுவீர்கள். 

தொழில்:

கூட்டுத் தொழில் மூலம் நீங்கள் நன்மை தீமை என இரண்டும் கலந்த பலன்களைப் பெறுவீர்கள். புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்துக் கொடுக்க அல்லது உங்கள் லட்சியங்களை அடைய நீங்கள் சில சிரமங்களை சந்திப்பீர்கள். நீங்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத திசையில் இருந்து தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். என்றலும் நீங்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். 

தொழில் வல்லுனர்கள்:

மிதுன ராசி தொழில் வல்லுனர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். ஆனால் சிறிது பதட்டமான நிலையும் காணப்படும். பணிகள் மலை போல வந்து குவியும். எனவே குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற வாக்கு வாதங்களில் நீங்கள் ஈடுபடாதீர்கள். உங்கள் பேச்சு மற்றும் செயலில் கவனம் தேவை. 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை 

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பதட்டம் காரணமாக இனம் புரியாத உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். என்றாலும் அது பெரிய அளவில் பயம் தரும் வகையில் இருக்க வாய்ப்பில்லை. அதிக பணிகள் காரணமாக ஏற்படும் பதட்ட நிலை குறையும். யோகா மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் காத்துக் கொள்ள இயலும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :ருத்ரன் பூஜை 

மாணவர்கள்:

மிதுன ராசி மாணவர்கள் சென்ற மாதத்தை விட இந்த மாதம் சிறப்பாக இருப்பதாகக் கருதுவார்கள். என்றாலும் சிறிது ஊக்கம் குறைந்தவர்களாக காணப்படுவார்கள். மாணவர்கள் மனதில் தேவைற்ற பதட்டம் ஏற்படும். என்றாலும் புத்திசாலித் தனத்துடன் செயல்படுவார்கள். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் முயற்சிகளின் மூலம் அதனைப் பெறுவார்கள்.  வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் சில தடைகள் மற்றும் தடங்கல்களை சந்திப்பார்கள். ஆனால் திடீர் அதிர்ஷ்டத்தையும் நீங்கள் சந்திப்பீர்கள்.  

கல்வியில் மேன்மை அடைய : சனி பூஜை 

சுப நாட்கள் : 6, 7, 8, 9, 10, 11, 12, 16, 17, 18, 19, 26, 27, 28, 30, 31
அசுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 13, 14, 15, 20 21, 22, 23, 24, 29


banner

Leave a Reply