மேஷம் மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Mesham

மேஷம் மார்ச் மாத ராசி பலன் 2021:
மேஷ ராசி அன்பர்களே. முக்கியமான கிரகங்கள் எல்லாம் இந்த மாதம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் நிலையில் உள்ளது என்பதால் இந்த மாதம் உங்களுக்கு மிகவும் நல்ல நேரம் என்று தான் கூற வேண்டும். உங்கள் பேச்சு, நடவடிக்கை என அனைத்தின் மூலமும் நீங்கள் சாதகமான பலன்களைப் பெற இயலும் என்றாலும் நீங்கள் சிறிது கவனத்துடனும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். சாதகமான கிரக நிலைகள் காரணமாக நீங்கள் உங்கள் வாழ்வில் சிறந்த மாற்றங்களைக் காண்பீர்கள். பணி நிமித்தமாக நீங்கள் சில எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள்.அதன் மூலம் நீங்கள் முன்னேற்றமும் காண்பீர்கள். உங்கள் ஆழ்மன உணர்வுகளே உங்களுக்கு வழி காட்டியாக விளங்கும். இந்த மாதம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது
காதல் / குடும்பம்:
இளம் வயது மேஷ ராசி அன்பர்களே! உங்கள் மனதில் காதல் அரும்பு மலரும். நீங்கள் உங்கள் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதில் கவனம் அதிகம் செலுத்தினாலும் உங்கள் குடும்பத்திற்கென நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். பணிச்சுமை காரணமாக நீங்கள் அதிக அளவில் பணியில் ஈடுபட்டாலும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் உங்கள் அன்பைப் புரிய வைக்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பாலினத்தவரைக் கவரும் வகையில் உங்கள் தோற்றம் மிளிரும். நடை உடை பாவனைகள் பிரகாசிக்கும். இசை, கலை போன்றவற்றில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை
நிதிநிலை :
உங்கள் படைப்பாற்றல் மற்றும் புத்திகூர்மை மூலம் நீங்கள் முதன்மை வகிப்பீர்கள். பண விஷயத்தில் மிகப் பெரும் மாறுதலை நீங்கள் எதிர்கொள்வீர்கள். உங்கள் தொழில்மூலம் பணத்தைப் பெருக்குவீர்கள். இதன் மூலம் உங்கள் நிதிநிலை மேம்படும். நீங்கள் வாங்கிய கடனை அடைப்பீர்கள். வளமான
ஆடம்பரமான வாழ்வைப் பெறுவீர்கள். உங்கள் நிதிநிலை மேம்பட : குபேரன் பூஜை
வேலை:
உங்கள் பணியில் சிறந்த முன்னேற்றம் காணும் மாதமாக இந்த மாதம் இருக்கும். மேலதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்கள் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. பணியிடத்தில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். எனவே கவனம் அவசியம். பணி நிமித்தமான பயணங்கள் உங்களுக்கு நன்மை அளிக்கும். உங்கள் சொல் மற்றும் செயலில் நீங்கள் மிக்க கவனம் செலுத்த வேண்டும்.
தொழில்:
கூட்டுத் தொழில் சிறந்த திசையில் முன்னேற்றம் காணும். என்றாலும் இந்த மாத இடைப் பகுதிக்குப் பிறகு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வரும் மாதங்களில் நீங்கள் வெற்றி காண இந்த மாதம் உங்களுக்கு வழி வகுக்கும். வெளிநாட்டு வியாபார வாய்ப்பினைப் பெறுவீர்கள். கவனமின்மை காரணமாக சிறந்த லாபம் தரும் வாய்ப்பினை இழக்க நேரலாம். எனவே கவனம் தேவை.
தொழில் வல்லுனர்கள்:
மேஷ ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் கவனமாகச் செயல்பட வேண்டும். உங்களைச் சுற்றி பொறாமை மிக்கவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். பொது விழா மற்றும் விருந்து நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது உங்கள் பெயர் மற்றும் புகழுக்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.
வேலை மற்றும் தொழிலில் வெற்றி பெற : சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாத இடைப் பகுதி வரை உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரக பூஜை
மாணவர்கள்:
மாணவர்களுக்கு இது மிகவும் சிறந்த மாதமாக இருக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவதன் மூலம் சிறப்பாகக் கல்வி பயில முடியும். வெளிநாடு சென்று படிக்க முயலும் மாணவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி காண்பார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த மாதம் வெற்றி காண்பார்கள்.
கல்வியில் வெற்றி பெற : ஹனுமன் பூஜை
சுப நாட்கள் : 2, 3, 4 8, 9, 14, 15, 16, 17, 18 10, 11, 12, 13
அசுப நாட்கள் : 1, 5, 6, 19, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29 23, 30, 31
