AstroVed Menu
AstroVed
search
search

மகரம் மார்ச் மாத ராசி பலன் 2021 | March Month Rasi Palan 2021 Magaram

dateFebruary 8, 2021

மகரம் மார்ச் மாத ராசி பலன் 2021 பொதுப்பலன்கள்:

இந்த மாதம் நீங்கள் பல மாற்றங்களைக் காணும் மாதமாக இருக்கும். உங்களிடம் ஆற்றல் நிறைந்து இருக்கும். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். விஷயங்கள் யாவும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நீங்கள் குடும்பம், காதல் பணம் போன்ற எல்லா விஷயங்களிலும்  வெற்றி காண்பீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்கள் இந்த மாதம் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான தாரக மந்திரமாகக் கொள்ள  வேண்டும். மாணவர்கள் இந்த மாதம்  சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.

காதல் / குடும்பம்:

இந்த மாதம் உங்கள் மனதில் சில குழப்பங்கள் வந்து போகும். உங்கள் அன்பையும் பாசத்தையும் எவ்வாறு வெளிக் காட்டுவது  என்பதில் குழப்பமான நிலை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்ள வேண்டும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை:

நிதிநிலையில் ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்கு பதட்டத்தை அளிக்கும். லாபம் குறைவாக இருக்கும். இது உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், இது நிரந்தரமானதல்ல என்பது உங்களுக்கு சற்று ஆறுதலான விஷயம். நீங்கள் தேவைக்கு மட்டும் செலவுகளை மேற்கொள்ளுங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.

உங்கள் நிதிநிலை மேம்பட: அங்காரகன் பூஜை 

வேலை:

நீங்கள் பணியிடத்தில் படைப்பாற்றல் மிளிரும் வகையில் செயல்படுவீர்கள். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். புது வேலை தேடுபவர்கள் தங்கள் சொந்த ஊரில் வேலை கிடைக்கப் பெறுவார்கள். பணியிடத்தில்  மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் அது கிடைப்பதில் சற்று தாமதம் இருக்கும். எனவே நீங்கள் பொறுமை காக்க வேண்டும். 

தொழில்:

நீங்கள் உங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி செயலாற்றினால் கூட்டுத் தொழில் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  ஆனால் நீங்கள் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். எனவே கவனம் தேவை. வெளிநாட்டு தொழில் மேற்கொண்டிருப்பவர்கள் கவனமாகக் கையாள வேண்டும்.
 
தொழில் வல்லுனர்கள்:

மிகப் பெரிய தொழில்வாய்ப்பு ஒன்று உங்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். அதை திறமையுடன் முடித்துக் கொடுப்பதில் சிறிது பதட்ட நிலை இருக்கும். நீங்கள் தொழில் புரியும் இடத்தில் போட்டி நிலவும். எனவே  உங்கள் தொழிலில் பிரகாசிக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். போட்டி இருக்கலாம். பொறாமை மற்றும் பழிவாங்குவது போன்ற செயல்களில் நீங்கள் ஈடுபடுவது கூடாது. 

உங்கள் வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சனி பூஜை 

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ சிக்கிச்சை எதுவும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருக்காது என்றாலும் நீங்கள் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. அதிக பணிகள் காரணமாக தலைவலி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள உதவும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : குரு பூஜை 

மாணவர்கள்:

மாணவர்களுக்கு இது மிகச் சிறந்த மாதமாக இருக்கும். அவர்களின் கனவுகளும் இலட்சியங்களும் நிறைவேறும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளை சிறப்பாக எழுதி முடிப்பார்கள். மாணவர்கள் தாங்கள் விரும்பும் பள்ளி அல்லது கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் சுதந்திரமாகச் செயல்பட விரும்புவார்கள். கல்லூரி முடிக்கும் மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். 

கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை 

சுப நாட்கள் :  1, 2, 3, 4, 11, 12, 13, 16, 19, 20, 22, 21, 30, 31
அசுப நாட்கள் :  5, 6, 7, 8, 9, 10, 14, 15, 17, 18, 23, 24, 25, 26, 27, 28, 29


banner

Leave a Reply