மிதுன ராசி பொதுப்பலன்கள் :
மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் பொறுமையை சோதிக்கும் வண்ணம் சில விஷயங்கள் நடக்கும். யானைக்கு தும்பிக்கை என்பது போல நீங்கள் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்துங்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதாரண பலன்களைக் காண்பீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை தெளிவான நீரோட்டம் போல அமைதியாக ஓடும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிறந்த ஆரோக்கியமான நிலையில் இருப்பார்கள். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும் உங்கள் ஆரோக்கியம் படிப்படியாக சீராகும். இந்த மாதம் உங்கள் செலவுகளும் சிறிது அதிகமாக காணப்படும். எனவே உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இந்த மாதம் நீங்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். தொழில் ரீதியாக நீங்கள் நன்மை அடைவதற்கான வாய்ப்புகளும் இப்பொழுது கிட்டும். உடன் பணி புரிபவர்களின் தவறான அபிப்பிராயங்கள் மற்றும் தவறான புரிதல்கள் உங்கள் முயற்சிகள் மூலம் விலகும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
மிதுன ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
மிதுன ராசி அன்பர்களின் காதல் வாழ்க்கை இந்த மாதம் நன்றாக இருக்கும். உறவில் நல்லிணக்கம் காணப்படும். நீங்கள் உங்களின் காதல் உறவை திருமண உறவாக மாற்ற எடுக்கும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். திருமணமான தம்பதியர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கைத் துணை உடனான உறவு உறுதியாக இருக்கும். சமூகத்தில் உங்கள் தொடர்பு சிறப்பாக இருக்கும். மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
மிதுன ராசி நிதி :
மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை இருக்கும். எனவே நிதி சம்பந்தமான எந்தஒரு விஷயத்திலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நண்பர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். பிறருக்கு நீங்கள் கடன் கொடுத்திருந்தால் இந்த மாதம் அவற்றை திரும்பப் பெறுவீர்கள்.
மிதுன ராசி வேலை :
மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஒரு சாதாரண மாதமாக இருக்கும். நீங்கள் கடினமாக பணி செய்ய வேண்டிய காலக் கட்டமாக இந்த மாதம் இருக்கும். இருந்தாலும் உங்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் பூர்த்தி ஆகும். செய்வதையே திரும்பத் திரும்ப செய்ய வேண்டியிருக்கிறதே என்று வருத்தம் கொள்ளாதீர்கள். இந்த மாதம் பணியில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
மிதுன ராசி தொழில்:
மிதுன ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்களின் தொழிலில் சிறந்த பலன்களை காண்பதற்கு பொறுப்புகளை பிறரிடம் அளிக்காமல் தாங்களே எடுத்து செயல்பட வேண்டும். இந்த மாதம் தொழில் ஒப்பந்தங்களை தவிர்க்கவும். அதிக பொறுப்புகள் காரணமாக நீங்கள் சில பணிகளை தள்ளிப் போட வேண்டியிருக்கும்.
மிதுன ராசி தொழில் வல்லுநர்
மிதுன ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் மிகச் சிறந்த பலன்கள் காண இயலாது. ஓரளவு சாதாரண பலன்களே கிட்டும். சில பணிகளை முடிப்பதற்கு தடைகளும் தாமதங்களும் ஏற்படும். என்றாலும் நீங்கள் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் அவற்றை வெற்றி கொள்ளலாம். தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறலாம். சமய ஸந்தர்பம் அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுங்கள்.
மிதுன ராசி ஆரோக்கியம் :
மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். பிரச்சினைகள் ஏதுமின்றி வாழ்க்கை தெளிவான நீரோட்டம் போல ஓடும். என்றாலும் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டுவது கூடாது. உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைக்க நீங்கள் நன்றாக உண்டு, உறங்கி வேலைக்கு நடுவில் ஓய்விற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்.
மிதுன ராசி மாணவர்கள் :
மிதுன ராசி மானவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். கல்வியில் கவனம் செலுத்தவும் அதன் மூலம் சிறந்த அனுபவத்தை பெறுவதற்கும் இந்த மாதம் உங்களுக்கு உகந்த மாதமாக இருக்கும். உங்கள் தனித் திறமைகளை வெளிக் கொணரும் மாதமாக இந்த மாதம் அமையும். நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். உங்கள் செயல்திறன் கண்டு உங்கள் பெற்றோர் மகிழ்ச்சி அடைவார்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
சுப தினங்கள் : 1,13,14,22,23,27,28
அசுப தினங்கள் : 2,3,15,16,19,20,21
மிதுன ராசி பரிகாரம்:
ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
ஸ்ரீ புதன் பகவான், சனி, ராகு, கேது ஹோமம் மற்றும் வழிபாடு செய்தல்.
ஏழை, எளியோரின் திருமணத்திற்கு உதவி செய்தல். பாம்பு புற்றிற்க்கு பால் வார்த்தல்.

Leave a Reply