மகர ராசி அன்பர்களுக்குத் தொழில் மற்றும் பணிவாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு நவம்பர் மாதம் சாதகமாக அமையலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றிபெற்று, பணியில் அடுத்த நிலைக்கு முன்னேறக்கூடும். தொழிலில் ஏற்படும் சாதனைகள் பொருளாதார வளர்ச்சியையும் சமூகத்தில் நற்பெயரையும் பெற்றுத் தரலாம். விருப்பங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.
எதிரிகளை வென்று, சிரமங்களைச் சமாளிப்பதற்குத் தேவையான தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கலாம். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்கள் பணிவாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்குத் துணைபுரியும்.
இருப்பினும், செவ்வாய் ஏழாம் வீட்டில் பலவீனமாகச் சஞ்சரிப்பதால் கூட்டுச் செயல்பாடுகள் மூலமாகப் பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க, மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் உங்கள் பணிகளை நீங்களே மேற்கொள்வது நல்லது. தொழில் கூட்டாளிகள் மூலமாகப் பின்னடைவும் இழப்பும் ஏற்படக்கூடும். எனவே, கூட்டுத் தொழில் நடவடிக்கைகளில் கவனமாக இருப்பது அவசியம்.
உங்கள் ராசி அதிபதியான சனி வக்ர நிலையில் இருப்பதால், மிகவும் கடுமையான அல்லது மாற்ற முடியாத விதிமுறைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்து, சூழ்நிலைக்கேற்ப நெகிழ்வுடன் செயல்படுவது பணிவாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தாமதங்களைக் குறைக்க உதவும்.
குடும்பத்திலுள்ள வயதானவர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கான மருத்துவச் சிகிச்சைகளால் செலவுகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்கள் மூலமாக நிதி இழப்புகளும் உண்டாக வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வது இழப்புகளின் தாக்கத்தைக் குறைத்து மனநிறைவை வழங்கலாம்.
ஐந்தாம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் நீச ராசியில் பலவீனமாக இருப்பதால் காதல் உறவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. உறவு முறிவைத் தவிர்க்கப் பொறுமையுடன் இருந்து, அன்புக்குரியவருடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திருமணமாகாதவர்களுக்கு ஏற்ற துணையைக் கண்டறிவதிலும் திருமணம் நடைபெறுவதிலும் தாமதம் ஏற்படலாம். திருமண வாழ்க்கையிலும் வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கத்தைப் பேணுவது சிரமமாக இருக்கலாம்.
பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் முன்னேற்றம் அடைந்து தங்களுடைய இலக்குகளை நிறைவேற்றுவதற்கு இந்த மாதம் சாதகமாக அமையலாம்.