இவர்கள் சற்று பருமனான உடலும், மாநிறமும், அழகிய தலையும் சுருண்ட முடியும் பெரிய கண்களும் உடையவர்கள். பெண்கள் வட்டமான அழகான முகமும், நீண்ட அழகிய கூந்தலும்,விரிந்த உதடும் தூக்கலான மூக்கும், நீளமான பாதங்களும் கொண்டவர்கள்.
மகர ராசிக்காரர்கள் சிறந்த வகையில் கல்வி கற்பார்கள். இவார்கள் எப்பொழுதும் சிந்தனை செய்து கொண்டே இருப்பார்கள். உயர்ந்த குணமும் பெரியோர்களை மதிக்கும் போக்கும் உடையவர்கள். தன்னைப் போல பிறரை நினைப்பவர்கள். எந்த செயலை செய்தாலும்அதில் வெற்றி கிடைக்கும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். தடைகளைக் கண்டு மனம் தளராதவர்கள். வேகமான செயல்பாடு உடையவர்கள். மற்றவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பார்கள். வெளியில் வீரன் போன்ற பேச்சு செயல் இருந்தாலும் உள்ளுக்குள் பயப்படுவார்கள்.
இவர்களின் குடும்பம் செல்வம் மற்றும் செல்வாக்கு நிறைந்ததாக இருக்கும். அதிக குழந்தைகள் இவர்களுக்கு உண்டு. மனைவியிடம் அதிக பிரியமாக நடந்து கொள்வார்கள். அதே சமயத்தில் தனக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வமும் கொண்டவர்கள்.
மகர ராசிக்காரர்கள் பிறக்கும் போதே செல்வ வளமான குடும்பத்தில் பிறப்பார்கள். நடுத்தர வயதில் சில சிரமங்களை அனுபவித்தாலும் பிற்காலத்தில் பெரிய அந்தஸ்தையும் செல்வ சுகத்தையும் பெறுவார்கள்.
நம்பிக்கையுடனும், நாணயத்துடனும் வாழ்வார்கள். கிடைக்காததை நினைத்து வருத்தப்படமாட்டர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வார்கள். தன்னை அண்டியோருக்கு அடைக்கலம் தருவார்கள். தன்னைச் சார்ந்தவர்களின் நலன்களில் அக்கறை கொள்பவர்கள். குறிப்பிட்ட காலத்தில் தனக்கென்று ஒரு தொழிலை ஏற்படுத்தி இரவு பகல் பாராது உழைப்பார்கள்.

Leave a Reply