AstroVed Menu
AstroVed
search
search

தனுசு ராசி பொதுவான குணங்கள், Dhanusu Rasi Character in Tamil

dateApril 28, 2020

தனுசு ராசிக்காரர்கள் நடுத்தரம் மற்றும் சற்று கூடுதலான உயரம் உடையவர்கள்.  நீண்ட கழுத்து, விரிந்த உதடுகள், நீண்ட விரல்கள், அடர்த்தியான கேசம், அடர்ந்த புருவம், வசீகர கண்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.  பெண்கள் சதைப் பிடிப்பான கன்னம், அழகான வரிசையான பற்கள், கூர்மையான கண்கள், அழகிய பாதம் உடையவர்கள்.

இவர்கள் தயாள குணம் கொண்டவர்கள். சுய கட்டுப்பாடு உடையவர்கள். நல்ல ஒழுக்கம் மற்றும் நாணயம் உடையவர்கள். இவர்கள் ஆன்மீகப் பற்று உடையவர்கள். அக்கறையுடன் உழைப்பவர்கள். குடும்பத்தில் பொறுப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தனித்தன்மையுடன் செயல்படுவார்கள். ஆலய வழிபாடுகளை மேற்கொள்பவர்கள். 

சிறு வயதில் இருந்தே சிறந்த கல்வியும் ஞானமும் பெறுவார்கள். நல்ல நண்பர்களை உடையவர்கள். பெரியவர்களிடம் பக்தி மற்றும் விசுவாசத்துடன் நடந்து கொள்வார்கள். தனக்கு சமமான அந்தஸ்து பதவி செல்வாக்கு உள்ளவர்களுடன் தான் நட்பு கொள்வார்கள். தனக்கு கீழ் அந்தஸ்தில் உள்ளவர்களிடம் வெறுப்புணர்ச்சி கொள்வார்கள். 

தனுசு ராசிக்காரர்கள் தங்கள் கல்வி அறிவு மற்றும் திறமை மூலம் உயர் பதவியை அடைவார்கள். அரசாங்க பதவி கூட பெறுவார்கள். அதிகாரம் மற்றும் அந்தஸ்துடன் இருப்பார்கள். பிறர் குற்றங்களை எளிதில் கண்டு கொள்வார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் தங்கள் நடுத்தர வயது காலங்களில் சில சிரமங்களை எதிர் கொள்வார்கள். ஆனால் வயதான காலத்தில் சந்தோஷமாக செல்வ சுகத்துடன் வாழ்வார்கள்.


banner

Leave a Reply