மகரம் பொதுப்பலன்கள்:விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். என்றாலும் நீங்கள் தனித்திருப்பது போல உணர்வீர்கள். இது வெறும் உணர்வு தான். இறைவழிபாடு மற்றும் தியானம் ஆறுதல் தரும்.
மகரம் வேலை / தொழில்: பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். என்றாலும் பணியில் சில தவறுகள் செய்வீர்கள். இது உங்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும்.
மகரம் காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் அகந்தைப்போக்கை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
மகரம் பணம் / நிதிநிலைமை: இன்று அதிக பண வரவிற்கான வாய்ப்பு குறைவு. குடும்பப் பொறுப்பு காரணமாக இன்று அதிக பணச் செலவை எதிர்கொள்ள நேரும்.
மகரம் ஆரோக்கியம்: நீங்கள் அமைதியாக இருப்பதன் மூலம் அல்லது இசை கேட்பதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இன்று உங்களுக்கு தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.