Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

Magaram Rasi Guru Peyarchi Palangal 2020 to 2021 - மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள்

August 19, 2020 | Total Views : 1,201
Zoom In Zoom Out Print

கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 5ஆம் வீடு, 7ஆம் வீடு, மற்றும் 9 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 5 ஆம் வீடு என்பது, அன்பு, குழந்தைகள், அறிவாற்றல், நம்பிக்கை போன்றவற்றையும், 7 ஆம் வீடு, துணை, தொழில், கூட்டாளி, பொதுத் தொடர்பு ஆகியவற்றையும், 9 ஆம் வீடு, புகழ், செல்வம் போன்றவற்றையும் குறிக்கிறது.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் நேர்மையுடன் செயல்படுவீர்கள். சமயத்தை அனுசரித்தும் சவாலான தருணங்களையும் எளிதில் எதிர் கொண்டு கடந்து விடுவீர்கள். குறைந்த முயற்சியிலும் நிறைந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவு இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை நாடி வரும் என்று கூறலாம். ஆனால் சுயநல எண்ணத்துடன் உங்களை நாடி வருபவர்களிடம் சிறிது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் அணுகுமுறை யதார்த்தமானதாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் அங்கீகாரமும் புகழும் பெறுவீர்கள். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படுவீர்கள். அதன் மூலம் பல சமூக சேவைகளையும் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வீர்கள். உணவு முறையிலும் நீங்கள் கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும்.

magaram-rasi-guru-peyarchi-palangal-tamil-2020-to-2021

வேலை, தொழில்

நீங்கள் பணி புரிபவராக இருந்தால் உங்களுக்கு பணி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் இந்த மாற்றத்தை துணிவுடன் மேற்கொள்வீர்கள். இந்த மாற்றம் உங்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைய வாய்ப்புள்ளது. அதன் மூலம் எதிர்பாராத பல நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு வெற்றியும் திருப்தியும் அளிக்கும். உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மனதில் உற்சாகம் பொங்கும். தொழில் செய்யும் மகர ராசி அன்பர்களுக்கு புதிய தொழிலுக்கான பல வாய்ப்புகள் வந்து சேரும். உங்கள் துறையில் தொழில் செய்பவர்களுக்கு நீங்கள் சிறந்த போட்டியாளராக விளங்குவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நிதி

உங்கள் நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள இது உகந்த காலக் கட்டம் ஆகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை நீங்கள் அதிகப்படுத்தினால் அதிக பலன்களைப் பெற முடியும். பொருளாதாரம் சார்ந்த உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். சில புதிய நிகழ்வுகள் உங்களுக்கு நன்மை விளைவிக்கும். உங்கள் வருமானம் உங்கள் குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதுமானதாக இருக்கும்.

குடும்பம்

குடும்ப உறவுகளை சரியான முறையில் பராமரிக்க இது உகந்த நேரம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சுமுகமான உறவை பராமரிக்க நீங்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் பொது நிகழ்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

கல்வி

கல்வி பயிலும் மாணவர்கள் நம்பிக்கையுடன் செயல்படும் காலக் கட்டம். பாடங்களை நன்கு புரிந்து கொண்டு படிப்பீர்கள். ஆசிரியர்களின் வழி காட்டுதல்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும். நீங்களும் விடா முயற்சியுடன் செயல் பட வேண்டும். அதன் மூலம் பயனடைந்து நீங்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். கல்வி அறிவு மட்டுமன்றி பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள இது உங்களுக்கு உகந்த காலம் ஆகும்.

காதலும், திருமண வாழ்க்கையும்

திருமணமான தம்பதியர் பரஸ்பரம் அன்னியோன்யமாகப் பழகுவீர்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கான துணையை அமைத்துக் கொள்ள ஏற்ற தருனமாக இந்த பெயர்ச்சி காலக் கட்டம் அமையும். காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்றிக் கொள்ளவும் இந்தக் காலக் கட்டம் சிறந்த நேரமாக இருக்கும்.

ஆரோக்கியம்

மகர ராசி அன்பர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்தக் காலக் கட்டம் சிறந்த நேரமாக அமையும். என்றாலும் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் உங்கள் உணவு முறையில் சிறந்த கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் அஜீரணக் கோளாறுகளை தவிர்க்க இயலும். பயணத்தின் போது ஒவ்வாமை ஏற்படாத வண்ணம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. முறையான ஓய்வும் மன அமைதியும் ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவை.

எளிய பரிகாரங்கள்

  • சுதர்சன கவசம் ஸ்லோகம் ஜபம் செய்யவும்
  • முன்னோர்களை வழிபடவும்
  • வேலையிலிருந்து, இடையிடையே ஓய்வு எடுத்துக் கொண்டு, அதன் மூலம், மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்
  • குடும்பத்தின் மீது உரிய கவனம் செலுத்தவும்
  • தேவையான ஓய்வு, தியானம் போன்றவை, புத்துணர்ச்சி பெற உதவும்
banner

Leave a Reply

Submit Comment