Kalahasti Pariharam Tamil | காளஹஸ்தி கோவில் பரிகாரம்
ராகு – கேது, நாக தோஷங்கள் நீங்க வேண்டுமா? இந்த வாயு ஸ்தலத்திற்கு சென்று பரிகாரம் மேற்கொள்ளுங்கள்
ஜாதாத்தில் ராகு-கேது மற்றும் நாக தோஷங்கள் இருப்பவர்கள் மற்றும் ராகு கேது கோட்சார சமயத்தில் பாதக பலன்களை அனுபவிப்பவர்கள் தங்கள் இன்னல்களை குறைத்துக் கொள்ள ஒரு அருமையான பரிகார ஸ்தலம் உள்ளது. அது ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் காளஹஸ்தி திருத்தலம் ஆகும்.
இந்த ஸ்தலத்தில் பரிகாரம் செய்வதன் மூலம் முக்கியமாக திருமணத் தடைகள் நீங்கும். சைவத் ஸ்தலமான ஸ்ரீ காளஹஸ்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு, ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரோடு அருள் பாலிக்கின்றார்.

அரச்சகர்கள் பூஜை செய்யும் முறை:
பொதுவாக எந்தவொரு ஆலயத்திலும் மூலவர் மற்றும் உற்சவரை தொட்டு பூஜை செய்ய அரச்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். என்றாலும் ஸ்ரீ காலஹஸ்தி திருத்தலத்தில் அர்ச்சகர்கள் கூட சிவலிங்கத்தை கைகளால் தொடாமல் பூஜை சடங்குகள் செய்வதாக கூறப்படுகிறது.
பரிகாரம் செய்யும் முறை:
- ராகு கேது தோஷம் மற்றும் நாக தோஷம் இருக்கிறதா என்று ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று அவர்கள் குறித்து அளிக்கும் நாளில், குறித்து அளிக்கும் நேரத்தில் இந்த பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
 - காளஹஸ்தியில் பரிகாரம் செய்வதற்கு முன்னதாக வீட்டிற்கு அருகில் இருக்கும் புற்றுக் கோவிலில் எட்டு வாரம் பால் ஊற்றி மஞ்சள் கயிறை கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும்.
 - ஒன்பதாவது வாரம் காலஹஸ்தி கோவிலில் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும்.
 - பெண்கள் வீட்டு விலக்கு நாளில் இவற்றை செய்தல் கூடாது.
 - காளஹஸ்தியில் பரிகாரம் செய்பவர்கள் முதல் நாளே கோவிலில் அல்லது கோவில் அருகில் வந்து தங்குவது சிறப்பு
 - பரிகாரம் செய்பவர்கள் அன்றைய தினம் உடலையும் மனதையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே குளித்து முடித்து தூய ஆடை அணிந்து கொண்டு பரிகார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
 - ஜோதிடர்கள் ஆலோசனை பெற்று சிறிய அளவிலான நாக விக்கிரகம் கொண்டு வந்து கோவில் உண்டியலில் சமர்பிக்க வேண்டும்.
 - பரிகாரம் முடியும் வரை ஆகாரம் எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
 - அர்ச்சகர்கள் சொல்படிகோவிலில் பூஜை செய்ய வேண்டும்.
 - பூஜை முடிந்த பிறகு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது.
 - பூஜை முடிந்த பிறகு வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும்.
 
இவ்வாறு பரிகாரங்கள் மேற்கொள்வதன் மூலம் ஜாதகத்தில் காணப்படும் ராகு கேது மற்றும் நாக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். அதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கும். தொழிலில் அபிவிருத்தி ஓங்கும். வாழ்வில் முன்னேற்றத்தில் காணப்படும் தடைகள் நீங்கும்.






      
      




