AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

Ruthratcham Uses in Tamil | ருத்ராட்சம் பயன்கள்

dateSeptember 9, 2023

ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் என்ற பெயருள்ள மரத்தின் விதை. இது சிவனின் கண் என போற்றப்படுகின்றது.ருத்ரனின் அக்ஷம் ருத்ராட்சம் எனப்படும். சிவனின் கண்களில் இருந்து  விழுந்த நீர்த் துளிகள் பூமியில் எங்கெல்லாம் சிதறியதோ அங்கெல்லாம் ருத்ராட்ச  மரங்கள் வளர்ந்தன. இவை இமய மலைப் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. ருத்ராட்சம் சிவனின் மறு உருவமாக கருதப்படுகிறது. ருத்ரனான சிவனின் அருளை பெறுவதற்கே நாம் ருத்ராட்சம் அணிகிறோம். ருத்ராட்சம் இருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் இருக்கும்.   

ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம் என்பதில் தனிப்பட்ட  விதிமுறைகள் ஏதும் இல்லை. ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் அணியலாம். கழுத்தில் அல்லது கைகளில் அணியலாம். நமது உடல் தான் கோவில். எனவே ருத்ராட்சத்தை உடலில் ஒரு பாகமாக அணிய வேண்டும். அணிவதற்கு முன் இறைவனின் திருவடி முன் வைத்து நமசிவாய என்று சொல்லி அதற்கு அபிஷேகம் செய்து பின் அதனை அணிந்து கொள்ள வேண்டும். ருத்ராட்சத்தை சிகப்பு நிற நூலில் கட்டி அணிய வேண்டும். இதை அணிவதன் மூலம் மன தூய்மை கிடைக்கும். 

Ruthratcham Uses in Tamil
 
ருத்ராட்சத்தின் வகைகள் மற்றும் பலன்கள்:

ருத்ராட்சத்தில் காணப்படும் கோடுகளின் எண்ணிக்கைகளைக் கொண்டு அவை  எத்தனை முக ருத்ராட்சம் என்பதைக் கண்டறியலாம். எல்லா  ருத்ராட்சங்களும் பொதுவான நல்ல பலன்களை அளிக்கும். என்றாலும்  ஒவ்வொரு முகத்திற்கும் தனிப்பட்ட பலன் உண்டு. அவற்றைப் பற்றிக் காண்போம்.

ஒரு முகம்:

இதனை ஏக முக ருத்ராட்சம் என்றும் கூறுவார்கள். இது கிடைப்பதற்கு மிகவும் அரிதானது.  இதனை தொட்டு வணங்குவதன் மூலம் பாவங்கள் அகலும். மோட்சம் தரக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது. 

இரண்டு முக ருத்ராட்சம் :

இது அர்த்த நாரீஸ்வர ஸ்வரூபத்திற்கு சமமானது. சிவன் சக்தி இணைந்த ருத்ராட்சமாக பார்க்கப்படுகிறது .இது சந்திரனோடு தொடர்புடையது. பாவத்தை நீக்கவல்ல இந்த இரு முக ருத்ராட்சம், ஆண் - பெண் என இருவர் தம்பதியராக ஒருநிலை அடைவதைப் போல, ஒரு நிலைத் தன்மை அடைய மிகவும் உகந்தது.குன்டலி சக்தியை எழுப்பும் தன்மைய கொண்டது. செல்வம் மற்றும் மன அமைதியை அளிக்க வல்லது. 

மூன்று முகம் ருத்ராட்சம்

சோமன், சூரியன், மற்றும் அக்னி என்று மூன்று கண்களைக் குறிக்கக் கூடிய ருத்ராட்சம். இது செவ்வாய் கிரகத்தோடு தொடர்புடையது; இந்த ருத்ராட்சத்தை ஆளும் கோளாக செவ்வாய் பகவான் உள்ளார். தீயானது எல்லா கெட்டதையும் தன்னில் போட்டாலும், அது தூய்மையாக இருப்பது போல, இதை அணியும் நபருக்கு வாழ்வில் இருக்கும் அனைத்து தவறுகளிலிருந்து விலகி துய்மை நிலை அடைவார்.

நான்கு முகம் ருத்ராட்சம்

இது பிரம்மாவைக் குறிக்கும் ருத்ராட்சம் ஆகும். இதனை ஆளக்கூடியவர் புதன் பகவான். இதனை அணிபவர் ஆக்க சக்தியை பெறுவார். தன்னுள் இருக்கும் அறிவுக்  கூர்மை, திறமை, சாதூர்யத்தை வெளிப்படுத்தக் கூடிய நிலை இருக்கும். இதனை தங்களின் வலது கையில் கட்டினால் மிக சிறப்பானது. எந்த போட்டியாளரோ, எதிரியோ அவர் முன் நிற்க முடியது.கவிஞர்கள். எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், நுண்கலை பயில்பவர்கள் இதனை அணிந்து கொள்ளலாம். 

ஐந்து முகம் ருத்ராட்சம்

இது சிவனின் ஐந்து முகங்களைக் குறிக்கும். ஐந்து முக ருத்ராட்சத்தை குரு பகவான் ஆளக்கூடியவர். இது மங்களத்தின் அடையாளமாக கருத்தப்படுகிறது. பாவத்தை தீர்க்கும். சிவ கடாட்சத்தை நமக்கு ஏற்படுத்தும். இதை அணிபவரின் ஆரோக்கியம் சிறப்பாகும். மனம் அமைதியடையும்.

ஆறு முகம் ருத்ராட்சம்

இது முருகப் பெருமானின் வடிவத்தோடு தொடர்புடையது. ஆறு முக ருத்ராட்சத்தை சுக்கிர பகவான் ஆளக்கூடியவர். பிரம்மஹத்தி தோஷம் நீக்க வல்ல ருத்ராட்சம்.  மெய்ஞானம் கிட்டும். நம்மை பரிசுத்தமாக்கும்.  நம் அறிவு மேம்படவும், தலைமைப் பண்பைப் பெறவும் இதை அணியலாம். சுக்கிரன் ஒருவரின் பிறப்பு உறுப்பை ஆள்வதால், ஆறு முக ருத்ராட்சம் தரிப்பதன் மூலம் நாம் இச்சைக்கு ஆளாகாமல் பேரின்பத்தை பெற வழியை தேடுவோம்.

ஏழு முகம் ருத்ராட்சம்

இது ஆதி சேஷனின் அம்சமாக கருதப்படுகிறது. சப்த கன்னிகளை குறிக்கக் கூடியது. ஏழு முக ருத்ராட்சத்தை சனி பகவான் ஆளக்கூடியவர். யோக சக்தியை தரக் கூடிய இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் எந்த ஒரு நிதி சிக்கலிலிருந்தும் வெளிவரலாம். நாக தோஷத்தை நீக்க வல்லது. 

எட்டு முகம் ருத்ராட்சம்

அஷ்ட கணபதி அருளை பெற்றுத் தரும் ருத்ராட்சம். எட்டு முக ருத்ராட்சத்தை ராகு பகவான் ஆளக்கூடியவர். இதனை அணிவோருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். அஷ்ட கணபதி, அஷ்ட லட்சுமி உள்ளிட்டோரின் அம்சமாக பார்க்கப்படுவதால் செல்வ வளம் கூடும்.அஷ்ட வசுக்களின் ஆசிகள் கிட்டும். அஷ்டமா சித்திகளை நமக்கு அருளும். 

ஒன்பது முகம் ருத்ராட்சம் :

பைரவரின் அருளைத் தரும் ருத்ராட்சம். ஒன்பது முக ருத்ராட்சத்தை கேது பகவான் ஆளக்கூடியவர். சக்தியின் அம்சமாக இது  பார்க்கப்படுகிறது. இதனால் உடல் மற்றும் மன சக்தி ஏற்படும். செயல் திறன் கூடும். பில்லி சூனியத்தை நீக்கும் ஆற்றல் மிக்கது. நவகிரக தோஷங்களை நீக்கும்.

பத்து முகம் ருத்ராட்சம் :

மகா விஷ்ணுவின் அம்சமாக பத்துமுக ருத்ராட்சம் பார்க்கப்படுகிறது. இது கோள்களினால் எற்படும் தீவினைகளிலிருந்து காக்கின்றது.ஆபத்து மற்றும் பீடைகளை நீக்க வல்லது. புண்ணியத்தைப்  பெற்றத் தரும்.  இதை அணிபவரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக செழிக்கும்,

பதினொன்று முகம் ருத்ராட்சம் :

ஏகாதச ருத்ராடசமான இதனை ருத்ர ரூபம் என்று  கூறலாம்.  இது அசுவமேத யாகம் செய்த பலனை அளிக்கும்.  சிவஞான சித்தியை அளிக்கும். அனுமனின் அம்சமாக 11முக ருத்ராட்சம் பார்க்கப்படுகின்றது. இதை அணிவதால் நேர்மையான பாதையை கடைப்பிடிப்பதோடு, எதிர்த்து வரும் தீய சக்திகளிலிருந்து காக்க வல்லது. துணிவையும், வெற்றியையும் தர வல்லது. 

மொத்தம் 38 வகை ருத்ராட்சங்கள் உள்ளன தற்போது 1, 11, 7, 8, 9 முக ருத்ராட்சம் அபூர்வமாகக் கிடைக்கின்றன. இவை மிக அதிக விலை கொண்டதாக உள்ளது.

கெளரி சங்கர் ருத்ராட்சம் :

இரண்டு ருத்ராட்சங்கள் இணைந்து இருக்கும். இதன் பெயரே இதன் தன்மை பற்றிக் கூறும்.  கெளரி சங்கர் ருத்ராட்சம் அணிவதன் மூலம் , அம்மை, அப்பன் நம்முடன்  சேர்த்து இருக்கக் கூடிய பலனை தரும். வாழ்வில் எல்லா நலன்களும் கிட்டும். 

எளிதாகக் கிடைக்கும் ருத்ராட்சம் :

தற்போது, பெரும்பாலும் 5 முகம், 6 முகம் கொண்ட ருத்ராட்சம் அதிகளவில் கிடைக்கின்றன. இதனால் மிக அரிதான விலை உயர்வாக சொல்லப்படும் ருத்ராட்சங்களை வாங்க முடியாதவர்கள்  குறைவான விலையில் கிடைக்கும் 5 அல்லது 6 முக ருத்ராட்சத்தை வாங்கி அணிந்து சிவபெருமானின் அருள் பெறலாம்.

எந்த நட்சத்திரகாரர்கள் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது:

அசுவினி – 9 முகம் 
பரணி - 6 அல்லது 13 முகம் 
கார்த்திகை - 12 முகம்
ரோகினி -  2 முகம்  
மிருகசீரிடம் – 3 முகம்  
திருவாதிரை – 8  முகம் 
புனர்பூசம்  - 5 முகம் 
பூசம்- 7 முகம் 
ஆயில்யம் – 4 முகம் 
மகம் – 9 முகம் 
பூரம்  -6  அல்லது  13 முகம் 
உத்திரம் – 12 முகம்  
அஸ்தம் – 2  முகம்  
சித்திரை - 3 முகம் 
சுவாதி  - 8  முகம் 
விசாகம் – 5 முகம்
அனுஷம் – 7 முகம் 
கேட்டை – 4 முகம் 
மூலம் – 9 முகம் 
பூராடம் -  6 அல்லது  13 முகம் 
உத்திராடம் -  12 முகம் 
திருவோணம் – 2  முகம் 
அவிட்டம் – 3  முகம்
சதயம் – 8 முகம் 
பூரட்டாதி – 5 முகம்  
உத்திரட்டாதி  - 7 முகம்  
ரேவதி - 4 முகம் 


banner

Leave a Reply