மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதத்தின் முதல் பாதியில் சிறந்த பலன்கள் கிட்டும். அனைத்து விஷயங்களும் உங்கள் விருப்பம் போல நடக்கும். இந்த மாதம் நன்மையான பலன்கள் நிதானமாக கிடைத்தாலும் நீடித்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் பொருளாதார நிலையும் சீராக இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பயிலும் மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக கல்வி பயில்வார்கள். நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலம் விரும்பும் அன்பர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவார்கள். இளைய உடன் பிறப்புகள் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள்.உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும்.