AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

தனுசு ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Dhanusu Rasi Palan 2020

dateMay 19, 2020

தனுசு  ஜூன் மாத பொதுப்பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களே! இது உங்களுக்கு ஒரு சாதகமான மாதமாக விளங்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக் கொள்ள இது மிகவும் உகந்த நேரம் எனலாம். பொதுவாக, இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் கையே ஒங்கி இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு இது சிறந்த காலமாகத் திகழும். சிலர், அவர்கள் விருப்பப்படி சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். அன்றாட நடவடிக்கைகளில் கூட, இப்பொழுது நீங்கள் காட்டும் தீவிர ஈடுபாடு, எல்லோரையும் ஈர்த்து, உங்களுடன் இணைந்து செயலாற்ற வைக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். சிலருக்கு நாகரீகமான பொருட்களின் மீது அதிக ஆர்வம் ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

தனுசு ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். அவருடன் நீங்கள், மகிழ்ச்சியாக நேரத்தை அனுபவிப்பீர்கள். பொதுவாக, உங்கள் எல்லாச் செயல்களுக்கும், இப்பொழுது, அதற்குரிய சரியான பலன்கள் கிடைக்கும். 

தனுசு ஜூன் மாத நிதி நிலை 

உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். அரசாங்கம் மற்றும் கலைத் துறை போன்றவற்றின் மூலம் பண வரவுகள் ஏற்படும். இதனால், உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும். எனினும், பணம் தொடர்பான எந்த நடவடிக்கைகளில் இறங்குவதற்கு முன்பாகவும், இரண்டு முறை யோசித்துச் செய்யவும்.  

தனுசு ஜூன் மாத வேலை 

இது, வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் காலமாகும். இந்த நேரத்தில் முடிவுகள், பொதுவாக, உங்களுக்குச் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகள் உங்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பார்கள். நீங்கள் பிறருடன் சுமூகமாக நடந்து கொள்வதும், உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

தனுசு ஜூன் மாத தொழில் 

வியாபாரத்தில் எவ்வித முடிவையும் எடுப்பதற்கு முன்னர், நன்கு யோசித்தே செயலாற்ற வேண்டும். இந்த நேரத்தில், உங்களுக்குத் தெரியாமல் தொழில் தொடர்பான விஷயங்களில் சிலர் உங்களை ஏமாற்ற நினைக்கலாம். எச்சரிக்கையாக இருக்கவும். புதிதாக, கூட்டு வர்த்தகம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.   

தனுசு ஜூன் மாத தொழில் வல்லுனர்களுக்கு 

இந்த மாதம், தனுசு ராசி தொழில் வல்லுநர்களின் நடவடிக்கைகள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். இதன் மூலம், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாகச் செயலாற்ற முடியும். நீங்கள் எதிர்பார்த்த பலன்களையும் இதன் மூலம் பெற முடியும். 

 தனுசு ஜூன் மாத ஆரோக்கியம் 

இந்தக் காலகட்டத்தில், சிறு உடல் உபாதைகள் வந்து விலகும் வாய்ப்புள்ளது. பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். எனவே, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எனினும், உங்கள் வெற்றி மற்றும் சந்தோஷம் உங்களுக்கு நல்ல உடல் நிலையைத் தரும். மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க முடியும்.  

 தனுசு ஜூன் மாத மாணவர்கள் 

மாணவர்கள் பெரும்பாலும், படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் வெளியே செல்வதில் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு படிப்பது நன்மை தரும். உங்களில் சிலர், சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவீர்கள். 

சுப தினங்கள் : 3,4,17,18,26,27,30 
அசுப தினங்கள் :  5,6,19,20,21,24,25

பரிகாரம்

ஸ்ரீ ராமபிரான் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை, ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
குரு, சனி, ராகு, கேதுவுக்கு பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல், இனிப்பு பண்டங்களை கோவிலில் தானம் செய்தல்


banner

Leave a Reply