கடகம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Kadagam Rasi Palan 2020

கடகம் ஜூன் மாத பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்களே! தொழில் சார்ந்த பணிகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய மாதமாக இது இருக்கும். பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இது போன்ற தருணங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். தவிர, பொதுவாக நீங்கள் இப்பொழுது மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும், சாதாரண பலன்களே கிட்டக்கூடும். குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடுகள் எழுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், உங்கள் அனைத்துப் பணிகளையும் உங்களால் சிறந்த முறையில் கையாள முடியும். சிலர், சிறு பயணங்களையும் மேற்கொள்ளலாம். இதனால் செலவுகளும் ஏற்படலாம். எனினும், பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
கடகம் ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதலர்களுக்கு மனநிம்மதி இல்லாமல் போகலாம். காதல் விவகாரங்களில் தடங்கல், மனக்கசப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனும் கவனமாக இருக்கவேண்டிய நேரம் இது. குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு பராமரிப்பதும் அவசியம்.
கடகம் ஜூன் மாத நிதி நிலை:
நிதி தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் தரும். தொழில் மூலமும் லாபம் வந்தடையும். தாய் வழியில் ஆதாயங்களையும் எதிர்பார்க்கலாம். எனினும், இந்தக் காலகட்டத்தில் வீண் விரையங்களும் ஏற்படலாம். சிக்கனத்துடன் இருந்தால், இது போன்ற விரயங்களைத் தவிர்க்கலாம்.
கடகம் ஜூன் மாத வேலை:
வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனால், அவ்வாறு நடக்க, இதற்கான வாய்ப்புகளை நீங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அத்துடன், உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நட்புடன் பழகுவதும், முடிந்தவரை உங்கள் அனைத்துப் பணிகளையும், நிலுவையில் வைக்காமல், விரைவாக முடிப்பதும் அவசியம்.
கடகம் ஜூன் மாத தொழில்:
தொழில் வாய்ப்புகள் சுமாராக இருக்கும். தொழில் ரீதியான போட்டிகள் காரணமாக, நீங்கள் பல சவால்களை சந்திக்க நேரலாம். குறிப்பாக, நிலம் தொடர்பான தொழில்கள், பலவகைத் துன்பங்களைத் தரலாம். எனினும், தொழிலில் நீங்கள் காட்டும் திறமையின் காரணமாக, பிறர் உங்களது முக்கியத்துவத்தை உணரும் வாய்ப்பு ஏற்படும்.
கடகம் ஜூன் மாத தொழில் வல்லுநர்:
கடக ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது அனுகூலமான மாதமாக அமைய, அவர்கள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். எனினும், பணியிடத்தில் உங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டும் வகையில், உங்கள் செயல்பாடு அமையும். சிலருக்கும் பதவி உயர்வு வாய்ப்புகளும், வேறு சிலருக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
கடகம் ஜூன் மாத ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். இருப்பினும், உடல் நலனில் அக்கறை தேவை. வாதம் அல்லது வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கடகம் ஜூன் மாத மாணவர்கள்:
படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும் இது சரியான நேரம் எனலாம். உங்கள் திறந்த மனம் மற்றும் பரந்த மனப்பான்மை, உங்களுடைய தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் செயல் திறனால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
சுப தினங்கள் : 1,7,8,17,18,19,20
அசுப தினங்கள் : 2,3,11,12,21,22,23,24,30
பரிகாரம்
திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சந்திரன், சனி, குரு, ராகு, கேதுவுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
ஏழைகளின் திருமணத்திற்கு உதவுதல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தல்.
