சிம்மம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Simmam Rasi Palan 2020

சிம்மம் ஜூன் மாத பொதுப்பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களுக்கு, இது நன்மைகள் தரும் மாதமாக அமையும். தொழில் தொடர்பான எல்லா நடவடிக்கைகளும் சிறப்பாக நடைபெறும். தொலைதூரத் தொடர்புகள் புதிய நட்புகளை உருவாக்கித் தரக் கூடும். இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவை அளிக்கும். தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகளும் உருவாகலாம். எனவே, கடினமாக உழைத்து, அதிக உற்பத்தித் திறனை அடையும் காலம் இது, எனலாம். ஆயினும், சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். எனினும், எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். குடும்ப விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
சிம்மம் ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
காதல், மண வாழ்க்கை போன்றவற்றிற்கு, இது நல்ல காலம் எனலாம். உங்கள் காதலும், உறவும் உண்மையானதாக இருக்கும் இப்பொழுது, அன்புக்குறியவர்களுடன் நேரத்தை இனிமையாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். திருமணமாகாதவர்கள் புண்ணியத் தலங்களுக்கு சென்று வர, திருமணம் கைகூடும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம் ஜூன் மாத நிதி நிலை
இந்த மாதம் நிதி நிலை சிறப்பாக இருக்கும். செய்தொழிலில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, படிப்படியான பொருளாதார முன்னேற்றத்தையும், இப்பொழுது நீங்கள் எதிர்பார்க்கலாம். இதனால், உங்கள் சேமிப்பைப் பெருக்குவதற்கு, இது மிகச் சரியான நேரம் எனலாம்.
சிம்மம் ஜூன் மாத வேலை
பணியில் உள்ளவர்களுக்கு, நன்மையும், தீமையும் சமமாக ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். அலுவலகத்தில், பல பிரச்சனைகள் வந்து விலகும் வாய்ப்புள்ளது. எனினும், சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நட்புடன் பழகுவது நன்மை தரும்.
சிம்மம் ஜூன் மாத தொழில்
உங்களது தைரியமான அணுகுமுறையும், சுதந்திர இயல்பும், உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். எனவே, உங்கள் தொழில் முன்னேற்றம் சிறப்பாக அமையும் வாய்ப்புள்ளது. எனினும், உங்களுக்கு வெற்றி தாமதமாகக் கிடைக்கக் கூடும்.
சிம்மம் ஜூன் மாத தொழில் வல்லுநர்கள்
சிம்ம ராசி தொழில் வல்லுநர்களின் செயல்திறன், இந்த மாதம் அவர்களுக்கு, நன்மையான பலன்களைப் பெற்றுத் தரும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை நன்கு வெளிப்படுத்தும் வகையில், உங்கள் செயல்பாடு அமையும். இதன் மூலம், நீங்கள் அதிக தன்னம்பிக்கையைப் பெறுவீர்கள்.
சிம்மம் ஜூன் மாத ஆரோக்கியம்
உங்கள் உடல் நிலை நன்றாகவே காணப்படுகிறது. உடலில் சிறு பிரச்சனை ஏதாவது ஏற்பட்டாலும், அதுவும் உடனே குணமாகிவிடும். எனினும், சிலருக்கு சளி, கபம் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்பட்டு விலகக் கூடும். எண்ணெய் உணவு உட்கொள்வதன் காரணமாக சில செரிமானப் பிரச்சனைகளும் வந்து, போக வாய்ப்புள்ளது. எனினும் கவலை வேண்டாம்.
சிம்மம் ஜூன் மாத மாணவர்கள்
மாணவர்களுக்கு இது ஒரு சாதாரண காலமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் படிப்பு சீரான போக்கில் செல்லும். எனினும், நண்பர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதும், அவர்களுடன் நட்புடன் பழகுவதும், மேலும் நன்மை பயக்கும்.
சுப தினங்கள் : 7,8,17,18,22,23
அசுப தினங்கள் : 9,10,11,14,15,16,24,25
சிம்மம் ஜூன் மாத பரிகாரம்
சிவபெருமான் மற்றும் விநாயகபெருமான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சூரியன், சனி, குரு, ராகு, கேதுவுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், கோவில்களுக்கு திருப்பணி செய்தல் மற்றும் அன்னதானம் செய்தல்.
