விருச்சிகம் ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Viruchigam Rasi Palan 2021

விருச்சிகம் ஜூலை மாத பொதுப்பலன் 2021:
விருச்சிக ராசி அன்பர்களே! உங்கள் குடும்ப வாழ்க்கை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மேலும் உத்தியோகம் மற்றும் தொழில் மூலமும் நீங்கள் சிறந்த ஆதாயங்களைப் பெறுவீர்கள். எனவே உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கிரகங்கள் உங்கள் ராசிக்கு நல்ல நிலையில் இருப்பதால் வீட்டில் மங்களகரமான நிகச்சிகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும். வீட்டில் விருந்து விசேஷங்கள் என்று வீடு கலகலப்பாக இருக்கும். குடும்ப உறவுகள் சீராக இருக்கும் என்றாலும் உங்கள் உடன் பிறப்பகளுடனான உறவில் சில சவாலான சூழ்நிலயை நீங்கள் சந்திக்க நேரும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. பணியிடத்திலும் நீங்கள் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். தொழில், வியாபாரம் மற்றும் கூட்டுத் தொழில் சிறப்பாக நடைபெறும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
விருச்சிகம் ஜூலை மாத காதல் / குடும்பம்:
இந்த மாதம் வேலைப் பளு அதிகமாக இருக்கும். குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க இயலாத நிலை கூட நீங்கள் சந்திக்க நேரும். இதனால் உறவில் சுமுக நிலை சீர்கேடும். எனவே நீங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் வேலை இரண்டையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அனுசரித்துச் செல்வதன் மூலம் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் எடுக்கும் எந்தவொரு முக்கியமான முடிவுகளையும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கலந்து ஆலோசித்து மேற்கொள்ளுங்கள்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை
விருச்சிகம் ஜூலை மாத நிதிநிலை :
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் பண வரவு பெருகும் வகையில் கிரக நிலைகள் அமைந்துள்ளன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் ஆகும். உங்கள் உத்தியோகம் மூலம் நீங்கள் வருமானம் ஈட்டும் திறன் அதிகமாகும். உத்தியோகத்தில் கிடைக்கும் அங்கீகாரம் மூலம் பதவி உயர்வும் பண உயர்வும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான சிக்கல்கள் இப்பொழுது தீரும். என்றாலும் அதற்காக நீங்கள் தேவையற்ற செலவுகளையும் நஷ்டங்களையும் சந்திக்க நேரும். எனவே உங்கள் செலவுகளில் கவனம் தேவை. எதிர்கால நலன் கருதி சேமிப்பை மேற்கொள்ளுங்கள்.
நிதிநிலையில் முன்னேற்றம் பெற : குபேரன் பூஜை
விருச்சிகம் ஜூலை மாத வேலை :
பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தின் மூலம் இந்த மாதம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் தைரியமாக துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமை கண்டு மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் எந்தவொரு முடிவையும் நீங்கள் யோசித்து எடுக்க வேண்டும். தேவையிலாமல் பேசுவது கூடாது. உங்கள் வார்த்தைகளை உங்கள் மேலதிகாரிகள் தவறாகப் புரிந்து கொள்ள நேரும். ஈகோ காரணமாக நீங்கள் பின்னடைவுகளை சந்திக்க நேரும்.
விருச்சிகம் ஜூலை மாத தொழில்:
இந்த மாதம் தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு முன்னேற்றம் காண இயலாது. தொழிலில் முன்னேற நீங்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக பலன் கிடைக்காவிடாலும் இதன் பலன் பிற்காலங்களில் கிடைக்கும். எனவே முயற்சிகளை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் முயற்சிகளின் மூலம் தொழிலில் திடீர் வெற்றியை நீங்கள் எதிர்பார்க்கலாம். தொழிலில் ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள்.
விருச்சிகம் ஜூலை மாத தொழில் வல்லுனர்கள் :
தனுசு ராசி தொழில் வல்லுனர்கள் செயல் திறன் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நீங்கள் கடின முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கான காரணத்தை அவர்கள் அறிந்து கொள்ள விரும்புவார்கள். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு மற்றும் வாக்கு வாதம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளுங்கள். தொழில் சார்ந்த பணிகளுக்கு இடையில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளியுங்கள்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை
விருச்சிகம் ஜூலை மாத ஆரோக்கியம்:
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். உங்கள் மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே நீங்கள் அமைதியாகச் செயல்பட வேண்டும். பதட்டத்தைத் தவிர்க்க வேண்டும். பதட்டம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். சிறிய உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
விருச்சிகம் ஜூலை மாத மாணவர்கள் :
மாணவர்கள் மனதில் ஒரு மந்த நிலை காணப்படும். மனதை ஓருமுகப் படுத்தி நன்றாகக் கல்வி பயில முயல்வதன் மூலம் வெற்றிக்ளைக் காணலாம். மாணவர்கள் இந்த மாதம் ஒரு சில சிறு சிறு பிரச்சினைகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் எளிதில் சமாளித்து முன்னேறுவார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
கல்வியில் முன்னேற்றம் காண : அங்காரகன் பூஜை
சுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 7, 8,17, 18, 23, 25, 26, 27, 28, 29,
அசுப நாட்கள் : 9, 10, 11, 12, 13 14, 15, 16, 20, 19, 21, 22, 24, 30, 31
