தனுசு ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Dhanusu Rasi Palan 2021

தனுசு ஜூலை மாத பொதுப்பலன் 2021 :
தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும் கடந்த மாதத்தில் இருந்து வந்த பின்னடைவுகளைத் தாண்டி இந்த மாதம் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் அதில் நீங்கள் சில தடைகள் மற்றும் தாமதங்களை சந்திக்க நேரும். உங்கள் பண வரவு அதிகரிக்கும். இதனால் உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் அமைதி இருக்கும் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணி நிமித்தமான பயணங்களை மேற்கொள்ள் நேரும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
தனுசு ஜூலை மாத காதல் / குடும்பம் :
இளம் வயது தனுசு ராசி அன்பர்கள் மனதில் காதல் மலரும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தம்பதிகள் இடையே ஒற்றுமை இருக்கும். விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வீர்கள்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை
தனுசு ஜூலை மாத நிதிநிலை :
இந்த மாதம் உங்கள் பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை இருக்கும். உங்கள் வருமானம் ஈட்டும் திறன் அதிகரிக்கும். நீங்கள் அதிக வருமானம் ஈட்டுவீர்கள். நீங்கள் ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆன்மீக யாத்திரை மற்றும் தான தருமங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆசையை நிறைவேற்ற வீடு அல்லது கார் வாங்குவீர்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை
தனுசு ஜூலை மாத வேலை :
உத்தியோகத்தில் இருக்கும் தனுசு ராசி அன்பர்கள் உங்கள் உத்தியோகத்தில் இந்த மாதம் முன்னேற்றம் காண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆனால் உங்கள் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். உங்கள் மேலதிகாரி மற்றும் சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் பெற்றாலும் அதிகாரப் பூர்வமான அங்கீகாரம் கிடைக்க கால தாமதம் ஆகும். சக பணியாளர்கள் சிலர் உங்கள் மீது பொறாமை கொள்ளவும் வாய்ப்பு உண்டு.
தனுசு ஜூலை மாத தொழில் :
தொழில் மற்றும் வியாபாரம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் அல்லது தொழில் குறித்த முடிவுகள் எதையும் எடுக்காதீர்கள். தொழிலில் ஏற்ற இறக்க நிலை இருக்கும். திடீர் வரவு ஆதாயம் அல்லது திடீர் சரிவு அல்லது நஷ்டம் இருக்கும். புதிய தொழிலை மேற்கொள்வீர்கள். புதிய கூட்டுத் தொழில் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.
தனுசு ஜூலை மாத தொழில் வல்லுனர்கள் :
தனுசு ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தொழிலில் பொறுப்புடன் செயல்படுவார்கள். இதனால் முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் திறமை கண்டு உடன் பணிபுரிவோர் பாராட்டுவது மட்டுமின்றி உங்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.
வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை
தனுசு ஜூலை மாத ஆரோக்கியம் :
இந்த மாதம் நீங்கள் சில ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எனவே உங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சூரிய குளியல் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும். ஆன்மீக நாட்டம் உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : விஷ்ணு பூஜை
தனுசு ஜூலை மாத மாணவர்கள் :
தனுசு ராசி மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும் என்பதால் மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். தியானம் மேற்கொள்வதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். மாணவர்களின் முயற்சிக்கு ஆசிரியரின் அங்கீகாரம் கிட்டும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதல்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
சுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 7, 6, 16, 17, 18, 19, 26, 27, 28, 29, 30, 31.
அசுப நாட்கள் : 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 20, 21, 22, 23, 24, 25.
