AstroVed Menu
AstroVed
search
search

துலாம் ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Thulam Rasi Palan 2021

dateJune 3, 2021

துலாம் ஜூலை மாத பொதுப்பலன் 2021 :

துலாம் ராசி அன்பர்களே! இது உங்களுக்கு வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். அதிர்ஷ்டங்கள் மூலம் நீங்கள் பல நல்ல பலன்கள் மற்றும் லாபங்களைக் காண்பீர்கள். இருந்தாலும் சில  கிரக நிலைகள் காரணமாக உங்கள் உறவுகளில் சில பிரச்சினைகள் எழும். குடும்ப அங்கத்தினர்கள், உறுப்பினர்கள், வாழ்க்கைத்துணை வழி உறவுகள் போன்றவர்களுடன்  சில கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் ஏற்படும்.  பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நமது பேச்சு தான் காரணமாக அமைகின்றது. எனவே உங்கள் பேச்சில் கவனம் தேவை. உங்கள் குழந்தைகளிடம் நல்லுறவு காணப்படும். உங்கள் புத்திசாலித்தனம் இந்த மாதம் வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் உங்கள் பேச்சுத் திறன் கை கொடுக்கும். அதன் மூலம்  நீங்கள் வெற்றி காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.  உங்களில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கூட கிட்டும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் செய்வர்களுக்கும் இந்த மாதம் நல்ல பலன்கள் கிட்டும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிட்டும். தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்க நிபுணர்களின் ஆலோசனைகள் கிட்டும். நீங்கள் படைப்பாற்றலுடன் செயல்பட்டு வெற்றியும் காண்பீர்கள்.  மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

துலாம் ஜூலை மாத காதல் / குடும்பம் :

இந்த மாதம் நீங்கள் அன்பிற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். காதல் மற்றும் குடும்ப உறவுகள் குறித்த முடிவுகளை சிறப்பாக எடுப்பீர்கள். நீங்கள் திருமணத்திற்குக் காத்திருப்பவர் என்றால் உங்களுக்கு ஏற்ற துணை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணமான தம்பதிகள் ஆன்மீக யாத்திரை செல்லும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். அனாவசியமான பேச்சுக்கள், வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும். பணியையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சமன்படுத்தி நடத்திச் செல்ல வேண்டும். குழந்தைகளுடனான உறவு மேம்படும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

துலாம் ஜூலை மாத  நிதிநிலை :

உங்கள் நிதிநிலை இந்த மாதம் திருப்திகரமான வகையில் இருக்கும். இந்த மாதம் கையில் பணப்புழக்கம்  சரளமாக இருக்கும். பணம் பற்றாக்குறை குறித்த பதட்டம் எதுவும் இருக்காது. உங்கள் வருமானம் பெருகும். இந்த மாதம் அதிர்ஷ்டம்  உங்கள் பக்கம் உள்ளது. வங்கியில் சேமிப்புத் தொகை அதிகரிக்கும். குழந்தை மற்றும் குடும்பத்திற்காகப் பணம் செலவு செய்வீர்கள். எந்தவித பதட்டமும் இன்றி உங்கள் கடன் தொகைகளை அடைத்து முடிப்பீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருஹஸ்பதி பூஜை 

துலாம் ஜூலை மாத தொழில் :

இந்த மாதம் :உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவர் என்றால் கூட்டாளிகள் மூலம் லாபம் அடைவீர்கள். உங்கள் தொழிலிலும் லாபம் காண்பீர்கள். தொழில் சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களில் உங்கள் கருத்துகளுக்கு வரவேற்பு இருக்கும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிட்டும். வாடிக்கையாளர்களின் ஆதரவு காரணமாக உங்கள் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். 

துலாம் ஜூலை மாத தொழில் வல்லுனர்கள் :  

துலாம் ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் உங்கள் தொழில் சார்ந்த மேற்பார்வை பணிகளை கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல் திறன்  பிறர் பின்பற்றும் வகையில் இருக்கும். தொழில் முன்னேற்றம் மூலம் நீங்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் இந்த மாதம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் கிட்டும். பிறர் உங்களின் ஆலோசனைகளை நாடுவார்கள். 

வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சூரியன் பூஜை 

துலாம் ஜூலை மாத ஆரோக்கியம் :

இந்த மாதம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும்.  உங்கள் மனம் சிறப்பாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க முடியும். மனப் பதட்டத்தை தவிர்ப்பதன் மூலம்  உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும். தியானம் மற்றும் உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள்  சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள உதவும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட  : சனி பூஜை

துலாம் ஜூலை மாத மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர் உங்களுக்கு உதவிகரமாகவும் வழிகாட்டியாகவும் இருப்பார்கள். மாணவ மாணவியர்களின்  படைப்பாற்றல் அதிகரிக்கும். கலை, இசை, நாடகம், நாட்டியம் போன்ற கல்வி சாரா துறைகளிலும் மாணவர்கள் சாதனைகளைப் புரிவார்கள். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் இந்த மாதம் கிடைக்கும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பிரகாசிக்க முடியும். 

கல்வியில் மேன்மை பெற : புதன் பூஜை 

சுப நாட்கள் :  8, 9, 10, 11, 12, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 30.
அசுப நாட்கள் : 1,2,3, 4, 5, 6, 7, 13, 14, 15, 16, 20, 23, 17, 18, 19, 31


banner

Leave a Reply