விருச்சிகம் ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Viruchigam Rasi Palan 2020

விருச்சிகம் ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இது, ஏற்ற இறக்கங்களும், கலவையான பலன்களும் நிறைந்த மாதமாக அமையும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை அல்லது தொழில் இரண்டுமே சவால்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் கவனக்குறைவு காரணமாக நீங்கள் பணியில் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். வியாபாரத்தில் இலாபங்கள் பாதிக்கப்படலாம் அல்லது தாமதமாகலாம். குடும்பத்திலும் பல சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் காரணமாகவும் நீங்கள் செலவுகளை சந்திக்க நேரலாம். எனவே, இந்தக் காலகட்டத்தில் நீங்கள் திடமாக நின்று மிகவும் கடினமாகப் போராட வேண்டியிருக்கும். ஆனால், நீங்கள் விரும்பினால், நிலைமையை உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள உங்களால் இயலும். மேலும், இந்த கடினமான அனுபவங்கள் உங்களுக்குத் தைரியத்தையும், உறுதியான மனநிலையையும் அளிக்கும். எனவே, நம்பிக்கையுடன் செயல்படுங்கள். திருமணத்திற்குக் காத்திருக்கும் சிலருக்கு, இப்பொழுது திருமணம் கை கூடி வரும் வாய்ப்புள்ளது.ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதலர்கள் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். எனினும், அவர்கள் உறவு சிறப்பாகவே இருக்கும். நீங்கள், உங்கள் வாழ்க்கைத் துணையின் மீது ஆதிக்கம் செலுத்த முயலலாம். இதனை நீங்கள் தவிர்த்து விடுவது நல்லது. மற்றபடி, இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான காலமாகவே இருக்கும்.
நிதி நிலை:
உங்கள் வருமானம் ஓரளவு சீராக இருக்கும். ஆனால், உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக, நீங்கள் அதிகம் செலவு செய்ய நேரிடும்.. பொழுது போக்கு மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கான செலவுகளும் மிக அதிகமாக இருக்கும். எனவே, பண விஷயங்களில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பண விஷயத்தில், யாருக்கும், எந்த உறுதிமொழியையும் அளித்து விட வேண்டாம்.
வேலை:
பணியில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். உங்களில் சிலர், இப்பொழுது, வேலை இழப்பதற்கான சில சாத்தியக் கூறுகளும் உள்ளன. எனவே, மிகவும் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அளிக்கப்படும் பொறுப்புகளை, அவற்றின் தேவையறிந்து, முறையாக முடிக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தரக்கூடும். இதனால் உங்களுக்குத் திருப்தியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
தொழில்:
உங்கள் இலக்குகளை அடைவதற்காக, நீங்கள் போராடி வெற்றி காண்பீர்கள். தொழிலில் சில முன்னேற்றங்களையும் அடைவீர்கள். உங்களில் சிலர், தொழிலை விரிவு படுத்துவதிலும், மேன்மைப் படுத்துவதிலும் கவனம் செலுத்துவீர்கள். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நன்மையும் வந்து சேரும்.
தொழில் வல்லுனர்கள்:
விருச்சிக ராசி தொழில் வல்லுநர்கள், இந்தக் காலகட்டத்தில், உணர்ச்சி வசப்பட்டு, திடீரென, சில முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. இது பணியில் உங்கள் இயல்பான மனநிலையை பாதித்து, கவனத்தை திசை திருப்பி விடலாம். எனவே, இது போன்ற போக்குகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும்.
ஆரோக்கியம்:
உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கும். முன்பே உங்களை பாதித்துள்ள நோய்களிலிருந்தும், இப்பொழுது உங்களுக்குக் குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. எளிய உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்ய முயற்சி செய்யுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை மேலும் சீராக்க உதவும்.
மாணவர்கள்:
நீங்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினால், அதற்காக, உங்கள் பாடங்களைப் படிக்க, அதிக நேரத்தையும், ஆற்றலையும் செலவிட வேண்டியிருக்கும். பெற்றோரின் உதவியுடன், உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற, இதுவும் உங்களுக்குத் துணை புரியும். உங்கள் கல்வித் திறன் கண்டு, பெற்றவர்களும் உங்களைக் குறித்துப், பெருமிதம் கொள்ளக் கூடும்.
சுப தினங்கள் : 11,12,13,21,22,25,26
அசுப தினங்கள் : 1,14,15,19,20,27,28,29
பரிகாரம்:
ஆலயம் சென்று முருகன் மற்றும் துர்க்கை வழிபாடு மற்றும் பூஜை செய்தல்.
செவ்வாய், சனி, குரு மற்றும் ராகு, கேது பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்தல்.
சித்தர் சமாதி சென்று சேவை ஆற்றுதல். பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.
