AstroVed Menu
AstroVed
search
search

துலாம் ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Thulam Rasi Palan 2020

dateJune 9, 2020

துலாம் ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

துலாம் ராசி அன்பர்களே! பொதுவாக இந்த மாதம் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பணி புரிபவர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள்.  தொழில் முனைவோர், அவர்களது கடின உழைப்பு மற்றும் இடைவிடாத தொடர் முயற்சிகளின் பயனாக லாபம் ஈட்டுவார்கள். ஆனால் தொழிலில் குறுகிய காலத்திற்கு, சற்றே மந்த நிலை நிலவும் வாய்ப்பும் உள்ளது. உங்களில் சிலருக்கு  தாயின் மூலம் ஆதாயம் கிட்டலாம். இளைய உடன் பிறப்புகளிடமிருந்தும் நீங்கள் நன்மைகளை எதிர்பார்க்கலாம். தந்தையின் ஆரோக்கியமும் இந்த நேரத்தில் மேம்படக்கூடும். ஆனால் காதல் விவகாரங்களை கவனமாக கையாள வேண்டியிருக்கும். கணவன்-மனைவி இடையேயான பிணைப்பும் சீராக இல்லாமல் போகலாம். சில குடும்ப உறுப்பினர்கள் அல்லது மற்ற உறவினர்களுடன் நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. எனவே, எச்சரிக்கை தேவை. இருப்பினும், உங்களில் சிலரை நோக்கி,  அதிர்ஷ்டக் காற்றும் வீசக் கூடும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண உறவு

உங்கள் கணவன் அல்லது மனைவியுடனான உறவில், நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஒரு சிலர், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தற்காலிகமாகப் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனால், சில காலம், நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கக் கூட முடியாமல் போகலாம். குடும்பத்தினருடன் மோதல் மற்றும் சச்சரவு நிலவும் வாய்ப்புள்ளது. அல்லது நீங்கள் அவர்கள் மீது, வழக்குத் தொடர வேண்டிய நிலை கூட ஏற்படலாம். எனவே,  எச்சரிக்கையாக இருக்கவும்.  

நிதி நிலை:

உங்கள் பொருளாதார நிலை சிறப்பாகவே காணப்படுகிறது. உங்கள் தாயிடமிருந்து நீங்கள் இப்பொழுது, சில ஆதாயங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. உங்கள் செலவுகளை நீங்கள் கவனமாகத் திட்டமிட்டுச் செய்வதன் மூலமும், தேவையற்ற செலவுகள் சிலவற்றைக் குறைத்துக் கொள்வதன் மூலமும், உங்கள் கடன்களை கூட இப்பொழுது நீங்கள் அடைக்க முடியும்.

வேலை  :

அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு, இது, நம்பிக்கைக்குரிய மற்றும் முற்போக்கான காலமாக இருக்கக் கூடும். உங்கள் செயல்பாடு, உங்கள் எதிர்பார்ப்புக்களின் படி அமையும். அதே நேரம், உங்கள் நேர்மையும், வேலையில் நீங்கள் காட்டும் ஈடுபாடும்,  மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். பணியிடத்தில் உங்கள் தகுதியை நிரூபிக்க, ஒரு நல்ல வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். 

தொழில் :

உங்கள் தொழில் முன்னேற்றம், உங்கள் திறமையைப் பொறுத்து அமையும். நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்க, தாமதம் ஆகலாம். எனினும், இப்பொழுது நீங்கள் வெற்றி பெறுவதும், பாராட்டு மற்றும் அங்கீகாரம் பெறுவதும் உறுதி எனலாம். பொதுவாக, இந்த நேரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் சரி, அதில் நீங்கள் சிறந்து விளங்கும் வாய்ப்பு உள்ளது. 

தொழில் வல்லுனர் :

துலாம் ராசி தொழில் வல்லுநர்கள், இப்பொழுது தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவது நல்லது. ஏனெனில், உங்களது சிறந்த செயல்பாட்டிற்கு உரிய, நல்ல பலன்களை அடைவதற்கு இந்த மாதம், மிகவும் உகந்த நேரம் ஆகும். கால நேரம் மற்றும் நிலவும் சூழ்நிலைகள் போன்றவற்றின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல நீங்கள் உங்கள் திட்டங்களை செயல்படுத்துவது அவசியம். இதன் மூலம், நீங்கள் அதிக நன்மைகளைப் பெறும் வாய்ப்பு உருவாகும். 

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். எனவே நீங்கள்,  கண்டிப்பான உணவு முறையைப் பின்பற்றுவது சிறந்தது. மேலும், தினமும் சில உடற்பயிற்சிகளைச் செய்வதும் நல்லது. இது உங்களை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். 

மாணவர்கள் :

கல்வி முன்னேற்றம் சாதாரணமாக இருக்கும். சிறந்த பலன்களைக் காண, இப்பொழுது நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எனினும், விடாமுயற்சியின் மூலமும், பாடங்களை நன்கு புரிந்து கொண்டு படிப்பதன் வழியாகவும், நீங்கள், உங்கள் அறிவை நன்கு வளர்த்துக் கொள்ள இயலும். 

சுப தினங்கள்   :  9,10,19,20,23,24
அசுப தினங்கள் :  11,12,13,16,17,18,25,26

பரிகாரம்:

ஆலயம் சென்று பகவான் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்குப் பூஜை செய்து  வழிபடுதல். 
சுக்கிரன், சனி, குரு, ராகு மற்றும் கேது பகவானுக்குப் பூஜை மற்றும் ஹோமம் செய்தல். 
ரத்த தானம் செய்தல். ஏழை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி செய்தல்.  


banner

Leave a Reply