கன்னி ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Kanni Rasi Palan 2021

கன்னி ஜூலை மாத பொதுப்பலன்கள் 2021 :
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் நன்மை தீமை என இரண்டும் சேர்ந்த கலப்புப் பலன்கள் கிட்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்ற இறக்கமான பலன்கள் இருப்பது போல உத்தியோகம் மற்றும் தொழில் இரண்டிலும் நன்மை தீமை என இரண்டும் கலந்த பலன்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் நீங்கள் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லுறவை பராமரிக்க இயலும். உத்தியோகத்தில் நல்ல பலன்களை நீங்கள் எதிர்பார்க்க இயலும். பணியிடச் சூழல் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். பணி நிமித்தமான அலைச்சல்கள் அதிகம் இருக்கும். இதனால் நீங்கள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவாக இருக்கும். அதன் காரணமாக உறவில் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரும். உங்கள் பொருளாதார நிலை சீராக இருக்கும் இந்த மாதம் நீங்கள் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
கன்னி ஜூலை மாத காதல் / குடும்பம்:
கன்னி ராசி இளம் வயது அன்பர்களின் மனதில் காதல் அரும்பு மலரும். அதிக பணிகள் காரணமாக குடும்பத்தாருடன் சேர்ந்து இயலாத நிலை இருக்கும். மேலும் பணி நிமித்தமான பயணங்கள் காரணமாக ஏற்படும் சோர்வு காரணமாக நீங்கள் தனிமையை விரும்புவீர்கள். அன்பர்களின் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் உறவில் நல்லிணகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : குரு பூஜை
கன்னி ஜூலை மாத நிதிநிலை :
இந்த மாதம் நீங்கள் பணம் சம்பந்தமான சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். ஸ்திரம் இல்லாத நிதிநிலை காரணமாக பண விஷயங்களில் சில தடுமாற்றங்கள் இருக்கும். செலவுகளை உங்களால் கட்டுப்படுத்த இயலாது. தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் உங்களால் சேமிக்க இயலாது. நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை
கன்னி ஜூலை மாத வேலை:
பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் கூட நீங்கள் அதனை சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள். நீங்கள் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். பணியிடத்தில் அதிக பொறுப்புகள் இருக்கும். நீங்கள் பணியில் ஏற்படும் பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள். உங்கள் தகவல் தொடர்புத் திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் நீங்கள் நல்லுறவு வளர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் உங்களுக்கு கவனக் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கன்னி ஜூலை மாத தொழில் :
தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அதே சமயத்தில் நீங்கள் கவனமாகவும் செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்தால் நீங்கள் எதையும் வெற்றி கொள்வீர்கள்.
கன்னி ஜூலை மாத தொழில் வல்லுனர்கள் :
கன்னி ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயல்படுவார்கள். அதன் மூலம் தொழில் செய்யும் இடத்தில் நீங்கள் பெயரும் புகழும் பெறுவா\ர்கள். தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட இது உங்களுக்கு உற்சாகம் அளிக்கும்.
உங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை
கன்னி ஜூலை மாத ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் அதிக பணிகள் காரணமாக உங்கள் மனதில் பதட்ட நிலை இருக்கும். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
கன்னி ஜூலை மாத மாணவர்கள் :
மாணவர்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம் ஆகும். என்றாலும் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். இது நாள் வரை இருந்து வந்த மந்த நிலை நீங்கும். கல்விக்கான கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் இப்பொழுது அது கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.
கல்வியில் முன்னேற்றம் காண : சனி பூஜை
சுப நாட்கள் : 4, 5, 6, 12, 14, 13, 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 26, 27.
அசுப நாட்கள் : 1, 2, 3, 7, 8, 9, 10, 11, 21, 22, 23, 28, 29, 30, 31.
