கன்னி ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Kanni Rasi Palan 2020

கன்னி ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:
கன்னி ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம், நல்லவை மற்றும் அல்லாதவை என இரண்டு வகைப் பலன்களும் கலந்து கிடைக்கக் கூடும். உங்கள் வருமானம் சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் மூலம் லாபம் வந்து சேரும். உங்கள் உடல் ஆரோக்கியமும் மேம்படும். தந்தையின் உடல் நிலையும் சீராக இருக்கும். எனினும், தாய் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம். தொழில் வழக்கம் போல் தொடரும். எனினும், அங்கு லாபம் பெறுவதில் தடைகள் ஏற்படலாம். பணியில் இருப்பவர்களில் ஒரு சிலருக்கு, வேலையில் இடமாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்பொழுது சிலர், குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. சிலர் வாகனங்களையும் வாங்கக் கூடும். எனினும், திருமண வாழ்க்கையில் நீங்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். பொது வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அது வந்த வேகத்திலேயே மறைந்து விடும்.ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண உறவு:
காதல் உறவு சிறப்பாக இருக்கும் என்று கூற இயலாது. சில காதலர்களுக்கு இடையே கசப்பும் உருவாகக்கூடும். அதே நேரம், சில காதல் உறவுகள் திருமணத்தில் முடியும் வாய்ப்புகளும் உள்ளன. மணமானவர்களைப் பொறுத்தவரை, இப்போது உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை செலுத்துவது அவசியம்.
நிதி நிலை
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானமும், உங்கள் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் போதுமானதாக இருக்கும். தந்தை வழியாகவும் வருமானம் வர வாய்ப்புள்ளது. அரசாங்க வகையிலும் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
வேலை:
உங்கள் முழு நேரத்தையும், கவனத்தையும், இப்பொழுது நீங்கள், பணியில் அர்ப்பணிப்பது அவசியம். இதன் மூலம் பணியிடத்தில் உங்கள் செயல் திறன் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலமும், நீங்கள், உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
தொழில்:
உங்களது, வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை, தைரியமாக முடிவுவெடுக்கும் திறன் மற்றும் சுயமாக செயலாற்றுதல் போன்றவை, உங்கள் தொழில் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவக் கூடும். எனினும், சில நேரங்களில் வெற்றி தாமதமாகக் கிடைக்கலாம். ஆனால் வெற்றி உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். அது உங்களுக்கு, உரிய அங்கீகாரத்தையும், நீடித்த மரியாதையையும் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
தொழில் வல்லுனர்கள்:
கன்னி ராசி தொழில் வல்லுநர்களுக்கு இது, வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். உங்கள் திறமையான செயல்பாடு, நல்ல பாராட்டைப் பெற்றுத் தரும். பதவி உயர்வு வாய்ப்புகளும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்குப், புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
ஆரோக்கியம் :
வாழ்க்கையில் நீங்கள் பெற்ற வெற்றி மற்றும் மகிழ்ச்சி போன்றவை, உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாகப் பராமரிக்க உதவும். உங்களுக்கு முன்பு இருந்த நோய்கள் அல்லது உடல்நிலைச் சீர்கேடுகள் கூட, இப்பொழுது நீங்கி விடும் வாய்ப்புள்ளது. மனப் பதட்டம் இல்லாத, சந்தோஷமான வாழ்க்கையை இப்பொழுது நீங்கள் வாழ முடியும்.
மாணவர்கள் :
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இது உகந்த நேரம் எனலாம். சவாலான பாடங்களைக் கூட நீங்கள் எளிதில் கற்று, உள்வாங்கி, உங்கள் கல்வித் தகுதியை நல்ல முறையில் மேம்படுத்திக் கொள்வீர்கள். இது உங்களுக்கே உரித்தான, தனித் திறன்களை முன்னிலைப்படுத்தவும், உங்கள் நற்பெயரை மேம்படுத்தவும் உதவும். உங்கள் கல்வித்திறன், உங்கள் பெற்றோர்களுக்கும் திருப்தி அளிக்கும்.
சுப தினங்கள் : 7,8,16,17,18,21,22
அசுப தினங்கள் : 9,10,14,15,23,24
பரிகாரம்:
ஆலயம் சென்று அன்னை துர்கா தேவி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுதல்.
சனி, குரு, ராகு மற்றும் கேது பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்தல்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் பண உதவி செய்தல். ஆலயங்களில் சேவை செய்தல்.
